Don't Miss!
- News
ரத கஜ துரக பதாதிகள்..ஈரோட்டில் கிழக்கில் திமுக படைத்தளபதிகள்..சிந்தாமல் சிதறாமல் "சக்கர வியூகம்"
- Lifestyle
Today Rasi Palan 03 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கவனக்குறைவே பெரும் சிக்கலை உண்டாக்கக்கூடும்...
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மேனர்ஸ் பற்றி பேசுவதற்கு ஒரு தகுதி வேணும்... மகேஷ்வரியை படுமோசமாக விமர்சித்த அசீம்!
சென்னை : பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவில் விஜே மகேஷ்வரியை மோசமான வார்த்தையால் திட்டி உள்ளார் அசீம்.
100 நாட்களை எட்டி உள்ள பிக் பாஸ் வீட்டில், அசீம்,விக்ரமன், ஷிவின், கதிர், மைனா, அமுதவாணன் இறுதிப்போட்டிக்கு செல்ல உள்ளனர்.
அடுத்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்துவிடும். இதில்,விக்ரமன், அசீம், ஷிவின் 3பேரில் ஒருவர் டைட்டிலை வெல்லுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லாஸ்லியாவை முந்திய பிக் பாஸ் பிரபலம்.. தளபதி 67 படத்தில் நடிக்க போகும் அந்த அதிர்ஷ்டசாலி யாரு?

பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருக்கிறார் அசீம். வந்த முதல் நாளே காஃபிக்கு சண்டை போட்ட அசீம். நிகழ்ச்சி 100 நாட்களை எட்டிய போதும் தொடர்ந்து சண்டைபோட்டு வருகிறார். ஆயிஷாவை போடி வாடி என்று பேசி சர்ச்சையில் சிக்கினார். அதே போல, திருநங்கை ஷிவின் போல, இமிடேட் செய்து கிண்டலடித்தார். இதனால், அசீமுக்கு எதிராக சோஷியல் மீடியாவில் கண்டனங்கள் எழுந்தன.

திருந்தாத அசீம்
மேலும், அசீமை கமல் கடுமையாக விமர்சித்தார், இதே போன்று வீட்டில் நடந்து கொண்டால் ரெட் கார்டு கொடுத்து விடுவோம் என்று விமர்சித்தார். ஆனால், அசீம் கடைசி வரை திருந்தவே இல்லை. கமலின் அறிவுரையையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் என் இஷ்டத்திற்குத்தான் பேசுவேன் என்று அதே திமிருடன் இருக்கிறார்.

தவறு தெரியவில்லை
வீட்டில் இருக்கும் பல போட்டியாளர்கள் அசீம் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்து வாரா வாரம் அவரை நாமினேட் செய்தாலும், மக்கள் அவருக்கு வாக்களித்து காப்பாற்றி விட்டார்கள். கோபத்தில்,மோசமான வார்த்தையை பேசி, போட்டியாளர்களை மனதளவில் காயப்படுத்தும் ஒருவருக்கு மக்கள் ஏன் வாக்களித்து காப்பாற்றினார்கள் என்று தெரியவில்லை. மக்கள் வாக்களித்து காப்பாற்றியதால், நான் செய்யும் தவறு அசீமுக்கு இப்போது வரை தெரியவே இல்லை.

மேனர்ஸ் பற்றி பேச ஒரு தகுதி வேண்டும்
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோவில், என்ன மேனர்ஸ் கற்றுக்கொண்டார்கள், என்ன நாகரீகம் கற்றுக்கொண்டார்கள் என்று தெரியவில்லை என்று விக்ரமனிடம் மணிகண்டன் பற்றி மகேஷ்வரி பேசிக்கொண்டு இருந்தார். அப்போது குறுக்கிட்ட அசீம், மேனர்ஸ் பற்றி பேசவும் ஒரு தகுதி வேண்டும் என்று, மகேஷ்வரியிடம் மோசமாக பேசுகிறார்.

கதறி அழுத மகேஷ்வரி
இதையடுத்து, மகேஷ்வரி, மணிகண்டனிடம் வாங்க உட்கார்ந்து பேசலாம் என்று கேட்டேன் அதற்கு அவருக்கு தைரியம் இல்லை, அப்போ எதுக்கு என் எவிக்ஷன் பற்றி அவர் பேச வேண்டும் என்று ஆத்திரத்தில் கத்துகிறார். இதையடுத்து, விக்ரமன்,மகேஷ்வரியை சமாதானப்படுத்துகிறார். அப்போது, மகேஷ்வரி, நான் மணிகண்டன் பற்றி பேசுகிறேன். இதில் எதுக்கு அசீம் உள்ளே வருகிறார் என்று தேம்பி தேம்பி அழுதார்.

மக்கள் செய்த தவறு
இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்கள், அசீமுக்கு சண்டை போடுவதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது, 100 நாட்கள் ஆன பிறகும் தொடர்ந்து அவர் போட்டியாளர்களிடம் சண்டைபோட்டுக்கொண்டே இருக்கிறார். அவருக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட தவறிவிட்டார்கள் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.