Don't Miss!
- News
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்! கனிமொழி தந்த ஊக்கம்! நெகிழ்ந்து போன மாற்றுத்திறனாளி மாணவி!
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு..நண்பர்களாக மாறிய ரச்சித்தா-ராபர்ட்..இந்த உருட்டு வித்தியாசமா இருக்கே!
சென்னை : பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவில், ரச்சித்தாவும் ராபர்ட் மாஸ்டரும் நண்பர்களாக மாறி உள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஏடிகே வெளியேறிய நிலையில், பிக்பாஸ் வீட்டில் அசீம்,விக்ரமன்,கதிர்,மைனா, ஷிவின், அமுதவாணன் ஆகியோர் இருந்தனர்.
இதில் கதிரவன் நேற்று 3 லட்ச ரூபாய் பண மூட்டையுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். பலரும் இந்த பணத்தை எடுக்க வேண்டும் என்று கூறிய போதும் அவர் அதை எடுத்தார்.
பிக் பாஸ் அசீமுக்கு ஆதரவளித்த பிரசாந்த் ரங்கசாமி.. காசு வாங்கிட்டீங்களா என கலாய்க்கும் ரசிகர்கள்!

பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. போன வாரத்தில் இருந்து போட்டியாளர்களுக்கு என்ன டாஸ்க் கொடுக்கலாம் என்று தெரியாததால், நிகழ்ச்சியின் சுவாரசியத்திற்காக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வந்துள்ளனர். விருந்தாளியாக வந்த போட்டியாளர்களிடம் அசீம் பாரபட்சமே இல்லாமல் சண்டை போட்டு வருகிறார்.

முதல் ப்ரோமோ
வெள்ளிக்கிழமை வரைக்கும் ஏதாவது கண்டென்ட் கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் பிக்பாஸ் இருப்பதால்,போட்டியாளர்களிடம் யாருடன் நட்புவைத்துக்கொள்ள விரும்புவதாக கேட்டுள்ளார். காலையில் வெளியான முதல் ப்ரோமோவில், பிரண்ட்ஷிப்பே வெச்சிக்க வேண்டாம் என்று நினைத்தது அசீம் தான், இதனால், அவருடன் நட்பு வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன் என்றார். இதைபோல, பலரும் அசீம் பெயரையே கூறினார்கள்.

நண்பர்களாக இருப்போம்
இதையடுத்து, தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவில், யாருடா இது என்று ஷிவின் மீது ரொம்ப வெறுப்பா இருந்தேன், இருந்தாலும் அவருடன் நட்பாக இருக்க விரும்புகிறேன் என்றார் அமுதவாணன். இதையடுத்த வந்த ரச்சித்தா, ராபர்ட் மாஸ்டர் செய்தது எனக்கு தப்பாவே தெரியவில்லை. யாருக்கு யாரை, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பிடிக்கும். இதுக்கு அப்புறம் ஒரு அழகான பிரண்ட்ஷிப் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறி ரச்சித்தா ராபர்ட் மாஸ்டரின் கையில் பிரண்ட்ஷிப் பேண்டை கட்டினார்.

இந்த உருட்டு வித்தியாசமா இருக்கே
இந்த ப்ரோமோவைப் பார்த்த நெட்டிசன்கள், நேற்று உள்ளே வந்த ரச்சித்தா, ராபர்ட் மாஸ்டரை கண்டுகொள்ளவே இல்லை. அவரிடம் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. இப்போது, ஏதோ பேச்சுக்காக நட்புதான் பெரிசு போல பேசுவதைப் பார்க்கவே கடுப்பாக இருக்கு என்றும், இந்த உருட்டு வித்தியாசமா இருக்கே என்றும் கிண்டலடித்து வருகின்றனர்.