Don't Miss!
- News
எச்.ராஜா வீட்டருகே பெரியார் சிலை.. அகற்றிய காரைக்குடி போலீஸ்! "பாஜக ஆட்சியா?" என கொந்தளிக்கும் திவிக
- Lifestyle
Shani Asta 2023: சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் மார்ச் 5 வரை இந்த ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Sports
சச்சினாலேயே முடியவில்லை, மற்றவர்களால் எப்படி முடியும்.. கோலி, ரோகித்துக்கு அஸ்வின் ஆதரவு
- Finance
மாதம் ரூ.5000 வருமானம் வேண்டுமா..அஞ்சலகத்தோட MIS திட்டம் தான் சரியான சாய்ஸ்..!
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
“அறம் வெல்லும்“ கண்கலங்கிய விக்ரமன்...நெகிழ்ந்து பாராட்டிய பிக் பாஸ்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோவில் விக்ரமன் கண்கலங்கினார். இந்த ப்ரோமோவைப்பார்த்த ரசிகர்கள் அவர் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் இரண்டு நாட்களே எஞ்சி உள்ளதால், டைட்டிலை யார் வெல்லுவார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
கடந்த வாரம் ஏடிகே நாமினேஷனில் சிக்கி எவிக்டாகி வெளியேறினார். இதையடுத்து பிக் பாஸ் வீட்டில் அசீம்,விக்ரமன், ஷிவின், கதிர், அமுதவாணன், மைனா என 6 பேர் இருந்தனர்.
சண்டையே வேண்டாம்.. ஷிவினுக்கு கொடுங்க பிக் பாஸ் டைட்டிலை.. திடிரென டிரெண்டாகும் ஹாஷ்டேக்!

அமுதவாணன் வெளியேறினார்
இதில், 3 லட்சம் ரூபாய் பண மூட்டையுடன் கதிர் வெளியேறினார். இதையடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது முறையாக பணப்பெட்டி வைக்கப்பட்டது. 3 லட்சத்துடன் வந்த பணப்பெட்டியில் மளமளவென 13லட்சம் ரூபாய் வந்ததும், கணிசமான தொலைக்காக காத்திருந்த அமுதவாணன் பணப்பெட்டியுடன் வெளியேறினார். தற்போது வீட்டில் 4பேர் மட்டுமே உள்ளனர்.

கண்கலங்கிய விக்ரமன்
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவில், சக மனிதரை மதிக்கத் தெரிந்த ஒரு தோழரை அடையாளம் காட்டியதில் எனக்கு மகிழ்ச்சி என்று பிக் பாஸ் விக்ரமனை பாராட்டி உள்ளர். தமிழ்நாட்டின் மிகவும் பிரம்மாண்டமான ஷோ என்பதை தாண்டி, ரொம்ப தேவையான ஷோவா பிக பாஸ் நிகழ்ச்சி இருக்கு. ஒரு ஜனரஞ்சகமான மேடையில் எளியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது ஒரு சாதாரணமானது இல்லை இது ஒரு புரட்சி என்று கண்கலங்கினார் விக்ரமன்.

அறம் வெல்லும்
அப்போது, பிக்பாஸ் இது என்ன புரட்சி நீங்கள் வெளி உலகத்திற்கு சென்று செய்யும் புரட்சியைப்பார்க்க ஆர்வமாக இருக்கிறேன் என்றார். அதன் பிறகு கைகளை தூக்கி அறம் வெல்லும் என்று கோஷமிட்டார் விக்ரமன். இந்த ப்ரோமோவைப்பார்த்த ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த ப்ரோமோவை ரிபீட் மோடில் பார்க்கிறேன். விஜய் டிவி நல்ல மனிதரை இந்த சோசைட்டிக்கு காட்டியதற்கு நன்றி, அறம் வெல்லும் விக்ரமனும் வெல்வார் என்று பதிவிட்டுள்ளார்.

மக்கள் மனதை வென்ற அசீம்
முன்னதாக காலையில் வெளியான முதல் ப்ரோமோவில், இந்த மொத்த வீடும் எதிர்ந்து நின்ற போதும், கொஞ்சமும் பயப்படாமல் இந்த பிக் பாஸ் போட்டியை முழுமையாக விளையாடி மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டீர்கள் என்று அசீமை பிக்பாஸ் பாராட்டினார். அப்போது, அசீம் சிறு குழந்தை போல கதறி கதறி அழுதார்.