Don't Miss!
- Technology
பச்சையாக டீஸ் செய்து காட்டிய OnePlus.! ஆஹா..ஓஹோனு ஒன்னுமில்லை.. ஆனா ஹைப் எகுறுது.!
- News
"சாட்டையை" சுழற்றும் திமுக.. நாடாளுமன்றத்தில் அதானி விவகாரத்தை கையில் எடுக்கிறது.. பரபர நோட்டீஸ்!
- Sports
"அந்த ரிஸ்க்கை மட்டும் எடுக்கல.. இல்லைனா.." இந்தியாவின் வரலாற்று வெற்றி.. ஹர்திக் பாண்ட்யா விளக்கம்!
- Lifestyle
Today Rasi Palan 02 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் வேலையில் தலையிடாமல் இருப்பது நல்லது...
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அசீம் கேட்ட அந்த கேள்வி..திக்குமுக்காடிப்போன ரச்சித்தா..இதெல்லாம் ரொம்ப ஓவர்..கொந்தளித்த பேன்ஸ்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது ப்ரோமோவில், அசீம் கேட்ட ஒரே ஒரு கேள்வியால், ரச்சித்தா மகாலட்சுமி திக்குமுக்காடிப் போனார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி 86 நாட்களை எட்டி பன்னிரெண்டாவது வாரத்தில் அடியேடுத்து வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சி முடிய இன்னும் இரண்டு வாரங்களே உள்ளது. ஜனவரி 21ந் தேதிக்குள் இந்த நிகழ்ச்சி முடிந்துவிடும்
21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது எட்டு போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இதில் டைட்டிலை யார் வெல்வார்கள் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
என்னை படிச்சா.. பாஸ் ஆக மாட்ட.. பக்காவாக போஸ் கொடுத்து பக்குவமாக சொன்ன பூனம் பாண்டே!

பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் விக்ரமன், அசீம் மற்றும் திருநங்கை ஷிவினுக்கே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஷிவினை ஏறக்குறைய பத்து வாரங்கள் யாருமே நாமினேட் செய்யவில்லை இதுவே ஒரு வெற்றியாக பார்க்கப்படுகிறது. அதே போல அசீமை வீட்டில் ஒவ்வொரு போட்டியாளரும் வாரம் தவறாமல் தொடர்ந்து நாமினேட் செய்தனர். ஆனால், ரசிகர்களின் ஆதரவால் அவர் வெளியேறவில்லை. அதே போல விக்ரமனுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். விக்ரமன் அம்பேத்கருக்கு கடிதம் எழுதி ஒட்டுமொத்த இளசுகளில் மனதில் இடம்பிடித்து விட்டார். இதனால், இவர் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

பெய்டு ஹாலிடேக்கு வந்தீங்களா?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது ப்ரோமோவில், டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கிற்காக ரச்சித்தாவும் அசீமும் விவாதித்து கொள்கின்றனர். அப்போது அசீம், பிக் பாஸ் வீட்டில் 87 நாட்கள் என்ன பண்ணீங்க? பெய்டு ஹாலிடேக்கு வந்து இருக்கீங்களா? என்று கேட்டார்களே அதைப்பற்றி என்ன நினைக்கிறீங்க என்று கேட்டார். இதற்கு பதிலளித்த ரச்சித்தா, நான் டாஸ்கில் ஜெயிச்சது,விளையாடியது எல்லாம் உங்களுக்கு நிறைவா தெரியவில்லையா என கேட்டார்.

நான் இங்க நடிக்க வரல
இதையடுத்து, பேசிய அசீம், நீங்க நிறைவாகத் தெரியிற அளவிற்கு இந்த வீட்டில் என்ன பண்ணி இருக்கீங்க எனக்கேட்க. அதற்கு ரச்சித்தா ரீல் முகம், ரியல் முகம் எல்லாமே நான் வெளிய நடிச்சாச்சு அசீம், இங்க வந்து நான் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறுகின்றார். இவ்வாறாக இன்றைய ப்ரோமோ வெளிவந்து இருக்கிறது.

இதெல்லாம் ரொம்ப ஓவர்
இந்த ப்ரோமோவைப் பார்த்த ரசிகர்கள் கடந்த சில வாரங்களாகவே ரச்சித்தா மீது அசீம் கடுப்பில் இருந்தார். எப்போதும், அவரையே நாமினேட் செய்து வந்துள்ளார். தற்போது இந்த டாஸ்கில் அவரை மடக்கி மடக்கி கேள்வி கேட்டு ரச்சித்தாவையே திணறவிட்டுள்ளார். அசீம் பேசுவது எல்லாம் ரொம்ப ஓவர் தான் பிக்பாஸ் வீட்டில் சண்டை போட்டதைத்தவிர அசீம் பெரிதாக எதையும் செய்யவில்லை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடுமையான போட்டி
பிற்பகலில் வெளியான இரண்டாவது ப்ரோமோவில், ஒவ்வொரு போட்டியாளர்களும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் வெற்றி பெற கடுமையாக விவாதம் செய்து வருகின்றனர். இந்த கோல்டன் டிக்கெட்டை பெறுபவர்கள் நாமினேஷனில் சிக்காமல் நேரடியாக இறுதிப்போட்டிக்கு சென்று விடலாம் என்பதால், இந்த டிக்கெட்டை பெற கடுமையான போட்டி நடந்து வருகிறது. இதில் யார் டிக்கெட் டூ ஃபினாலே பெறுவார் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.