Don't Miss!
- News
''அப்பா அப்படியென்றால் மகன் இப்படி! மனசாட்சியே இல்லையா?'' அமைச்சரை சாடிய அன்புமணி ராமதாஸ்!
- Technology
90's கிட்ஸ்களின் கனவு கேட்ஜெட்.! இப்போது ஹை-டெக் டிசைனில்.! அலறவிட்ட Sony Walkman விலை.!
- Finance
மத்திய பட்ஜெட் 2023: வருமான வரி குறைப்பால் எவ்வளவு பணம் மிச்சம்..!
- Lifestyle
கேந்திர திரிகோண ராஜயோகத்தால் பிப்ரவரி 7 முதல் இந்த ராசிகளுக்கு தொழிலில் அமோக வெற்றி கிடைக்க போகுது..
- Automobiles
இதுகளோட வருகைக்குதான் ரொம்ப நாளா வெயிட் பண்றோம்! டூவீலர் லவ்வர்ஸ்க்கு இந்த மாசம் செம்ம தீனி காத்திட்டு இருக்கு
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Bigg Boss Tamil 6: பர்சனல் அட்டாக் செய்யும் அசீம்...வெளியான பரபரப்பு ப்ரோமோ!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோவில், அசீம் வீட்டில் இருப்பவர்களை பர்சனல் அட்டாக் செய்கிறார் என்று அனைவரும் ஒட்டுமொத்தமாக குற்றம்சாட்டினார்கள்.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம், வித்தியாசமான முறையில் நாமினேஷன் நடந்தது. அதாவது பிக் பாஸ் போட்டியாளர்களை மடக்கி மடக்கி கேள்வி கேட்டார். இதில், அசீம் பிக் பாஸை வியந்து போகும் அளவுக்கு சரமாரியாக பேசி நாமினேஷனில் இருந்து தப்பித்தார்.
இதனால், இந்த வாரம், விக்ரமன், கதிர்,ஷிவின்,ரச்சித்தா, மைனா,ஏடிகே, அமுதவாணன் என அனைவரும் நாமினேஷனில் சிக்கினார்கள்.
பணம்
வந்ததும்
ஆளே
மாறிட்டாங்களே..பிக்
பாஸ்
ஆயிஷாவை
பார்த்து
ஷாக்கான
ரசிகர்கள்!

டிக்கெட் டூ பினாலே டாஸ்க்
இந்த வாரம் முழுவதும் பிக் பாஸ் வீடு பரபரப்பாகவே இருந்தது. அதற்கு காரணம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் இந்த டாஸ்கில் வென்று கோல்டன் டிக்கெட்டை பெற அனைத்து போட்டியாளர்களும் சுறுசுறுப்பாக இருந்தனர். ரச்சித்தா இந்த வீட்டில் பெய்டு ஹாலிடேக்கு வந்தது போல இருக்கிறார் என்று அனைவரும் கூறிவந்த நிலையில், சைக்கிள் டாஸ்கில் இரவு முழுவதும் தூங்காமல் சைக்கிள் ஓட்டி அசத்தினார். இருந்த போதும் அனைத்து டாஸ்குகளையும் சிறப்பாக செய்து அமுதவாணன் கோல்டன் டிக்கெட்டை வென்றார்

அசீம் பர்சனல் அட்டாக் செய்கிறார்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவில் கமல்ஹாசன் பர்சனல் அட்டாக் செய்பவர்கள் யார் யார் என்று கேட்க, ஏடிகே, அசீம் தான் அனைவர் பற்றியும் தொடர்ந்து பேசுகிறார். குறிப்பாக ரச்சித்தாவை பர்சனலாக அட்டாக் பண்ணி பேசியதை நான் பல முறை பார்த்து இருக்கிறேன் என்றார்.

தவறை திருத்திக்கொள்ளுங்கள்
இதையடுத்து பேசிய கமல், நமக்குள் இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டினால், அதை சரி பண்ண முடியுமானு பாருங்கள். அதை விவாதித்து வெல்வதனால், அந்த தவறைப்பற்றி யோசிப்பதை நிறுத்திவிடுகிறோம் என்றுதான் அர்த்தம் என்று கூறியுள்ளார். கமல் இன்றும் அசீமை டார்க்கெட் செய்து வெளுவெளுவென வெளுத்துவிட்டுள்ளார்.

இந்த வாரம் வெளியேறுவது யார்?
முன்னதாக காலையில் வெளியான முதல் ப்ரோமோவில், இந்த வாரம் வெளியேறுபவர் யார் என்று கமல் போட்டியாளர்களிடம் கேட்க அனைவரும் மைனாவின் பெயரை கூறுகின்றனர். இதையடுத்து, ஹாட் சீட்டில் இருக்கும் மைனா மற்றும் ரச்சித்தா இருவரும் அங்கிருக்கும் பெட்டியை திறந்து பார்ப்பது போல ப்ரோமோ வெளியாகி உள்ளது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல, அனைவரும் மைனா வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில், இந்த வாரம் ரச்சித்தா வீட்டிலிருந்து வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.