Don't Miss!
- Finance
மோடி அரசு வாங்கப்போகும் ரூ.16 லட்சம் கோடி கடன்.. பட்ஜெட்-க்கு முன்பே ரிப்போர்ட்..!
- Technology
OnePlus Keyboard-ல் இப்படி ஒரு ஸ்பெஷலிட்டியா? இப்போதே வாங்க ரெடியாகும் இந்தியர்கள்.!
- News
அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கிச்சூடு..72 வயது முதியவர் அரங்கேற்றிய கொடூரம்..ஷாக் கொடுக்கும் பின்னணி
- Automobiles
ஒரு ஆளுக்கு ஒரு கார் தான் வாங்கனும் மீறி வாங்குனா அதிகமா வரிகட்டனும்! கோர்ட்டில் தொடரப்பட்ட நூதன வழக்கு
- Lifestyle
மாவு பிசையும்போது இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணா... பந்துபோல மென்மையான சப்பாத்தி வருமாம்...!
- Sports
4 போட்டிகளில் விளையாட தடையா?.. இஷான் கிஷானுக்கு வந்த பெரும் சிக்கல்.. விளையாட்டு விணையானது எப்படி?
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
பிக் பாஸ் சீசன் 6: பையா தள்ளி நில்லு... கமலின் வேற லெவல் காஸ்ட்யூம்... தெறிக்கும் மீம்ஸ்கள்
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 கடந்த அக்டோபர் 9ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது.
முதல் 5 சீசன்களை போலவே இந்த முறையும் நடிகர் கமல் பிக் பாஸ் சீசன் 6ஐ தொகுத்து வழங்கினார்.
ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் செட்டுக்கு வரும் கமல் அகம் டிவி வழியே ஹவுஸ்மேட்ஸ்களிடம் கலந்துரையாடி அந்த வாரத்துக்கான எவிக்சன் யார் என்பதை அறிவிப்பார்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டிக்காக கமல் அணிந்துவந்த காஸ்ட்யூம் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Bigg Boss Tamil 6: பிக் பாஸ் டைட்டில் வின்னர் அசீமுக்கு 50 லட்சத்துடன்.. சொகுசு காரும் பரிசு!

கமலின் பிக் பாஸ்
விஜய் டிவியின் தயாரிப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார். முதல் 5 சீசன்களைப் போலவே இந்த முறையும் நடிகர் கமல்ஹாசன் தான் ஆறாவது சீசனை தொகுத்து வழங்கினார். முதல் நாளில் ஒவ்வொரு போட்டியாளர்களையும் அறிமுகம் செய்து பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்த கமல், அதன்பின்னர் ஒவ்வொரு வாரமும் அகம் டிவி வழியே உரையாடினார். பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் இந்தளவுக்கு வரவேற்பை பெற நடிகர் கமல் தான் மிக முக்கியமான காரணம். ஹவுஸ்மேட்ஸ்களின் தவறுகளை பொறுமையாக சுட்டிக் காட்டி சுவாரஸ்யமாக வழிநடத்தினார்.

சீசன் 6 இறுதிநாள்
இந்நிலையில், அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6, நேற்றுடன் முடிவுக்கு வந்தது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் ஜிபி முத்து, ஷிவின், ரச்சிதா, மைனா, மகேஸ்வரி, அமுதவாணன், ராம், கதிர், அசீம், விக்ரமன், உட்பட 21 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தனர். இவர்களில் அசீம், விக்ரமன், ஷிவின் மூவர் மட்டுமே பைனல் ஸ்டேஜில் அடியெடுத்து வைத்தனர். இறுதியாக அசீம் டைட்டிலை வென்றார். விக்ரமன், ஷிவின் இரண்டாவது மூன்றாவது இடங்களை பிடித்தனர்.

கமலின் காஸ்ட்யூம்
பிக் பாஸ் சீசன் 6 இறுதிப்போட்டி ஏராளமான கலை நிகழ்ச்சிகளுடன் நடந்து முடிந்தது. ஆனால் இதில் பலரையும் கவர்ந்தது கமலின் காஸ்ட்யூம் தான். ப்ளு ஜீன்ஸ், பிளேசரில் வெள்ளை வெள்ளையாக பெயிண்ட் கொட்டியதை போல ரகளையாக இருந்தது. கமலுக்கு இந்த காஸ்ட்யூம் செம்ம ஸ்டைலிஷாக இருந்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதேநேரம் இந்த காஸ்ட்யூமை வைத்து ஏராளமான மீம்ஸ்களும் ஜாலியான கிண்டல் பதிவுகளும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.

பையா தள்ளி நில்லு
பிக் பாஸ் 6வது சீசன் முழுவதும் போட்டியாளர்களின் காஸ்ட்யூமை பிரபல ஆடை வடிவமைப்பாளர் சிந்து ரெடி செய்ததாக தெரிகிறது. நேற்றைய இறுதிப் போட்டிக்கும் கமல், விக்ரமன், அசீம், ஷிவின் ஆகியோருக்கும் சிந்து தான் காஸ்ட்யூம் டிசைன் செய்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், கமல் ஒரு கட்டடத்தின் கீழ் நின்று பேசும் போது, அங்கு வெள்ளையடிக்கும் நபர்கள் "பையா தள்ளி நில்லு" என சொல்வதாக ஒரு மீம்ஸ் உலா வருகிறது. அதாவது பெயிண்ட் அடிக்கும் போது கமலின் டிரஸ் மீது வெள்ளை பட்டுவிட்டது என்பது போல கலாய்த்து வருகின்றனர். இன்னொரு வீடியோவில் காதலா காதலா படத்தில் வரும் பெயிண்டிங் காமெடியை வைத்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்ற்னர்.