ஜனனிக்கு ஆஸ்கர் அவார்ட் தரலாம்..சொம்பு தூக்கி அமுதவாணன்..விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை : பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவில், இந்த வாரத்தில் வொர்ஸ்டாக இருந்தது ஜனனி என்று விக்ரமன் கூறுகிறார்.
இதைக்கேட்டு ஆத்திரமடைந்த ஜனனி இவருக்கு எப்போதும் என்னை குறைசொல்லுவதுதான் வேலை என்ற, சிறுகுழந்தைப் போல கதறி கதறி அழுகிறார்.
இந்த ப்ரோமோவைப் பார்த்த நெட்டிசன்கள் யாருடா ஸ்கூல் போற பசங்கள பிக் பாஸ் வீட்டிற்குள் விட்டது என்றும், இந்த பொண்ணு ஓவரா சீன்போடுவா என்றும் ஜனனியை பங்கமாக கிண்டலடித்து வருகின்றனர்.

அமுதவாணன் சொம்பு தூக்கியா?
ஜனனி குழந்தை போல அழுது அட்டகாசம் செய்த ப்ரோமோவை பார்த்த ஒரு நெட்டிசன்ஸ், பால் பாட்டில் கொடுங்க, குடிச்சிட்டு ஓரமா தூங்கட்டும். இவ வயசு தனலட்சுமிக்கும். இந்த பொண்ணையாரும் குறை சொல்லக்கூடாது. அப்படி சொன்னா எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சு டிராமா பண்ணும். அப்போ என்ன டேஷ்க்கு இங்க வந்தா? இது பிபி போட்டியாளரா இல்லை அமுதவாணன் என்ன சொம்பு தூக்கியா? என ஜனனி அமுதவாணன் இருவரையும் பங்கமாக கலாய்த்து உள்ளார்.

ஆஸ்கர் அவார்ட் தரலாம்
நீங்க மட்டும் அனைவர் பற்றியும் ஆர்கிவ்மெண்ட் பண்ணலாம் மற்றவர்கள் உங்களை பற்றி சொன்ன அழுவீங்களா என்றும், அருமையான நடிப்பு ஜனனி இந்த நடிப்புக்கு உங்களுக்கு ஆஸ்கர் அவார்ட்டு கொடுக்கலாம் என ஒரு இணையவாசி பதிவிட்டுள்ளார்.

என்ன சின்னபுள்ளத்தனமாக இருக்கு
மேலும் ஒரு பிக் பாஸ் பார்வையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில், என்ன சின்னபுள்ளத்தனமாக இருக்கு, எப்போபாரு அமுது அமுதுன்னு சொல்லிட்டு இந்த பெண்ணு இருக்கு இல்லனா. பேய் பிடிச்சா மாதிரி கதிட்டு இருக்கு. இதுலாம் ஒரு ஃபைனலிஸ்ட் டைப்ன்னு கூவிட்டு இருக்காங்க. முதிர்ச்சி இல்லை, சுதந்திரமான எண்ணங்கள் இல்லை, விளையாட்டு இல்லை என ஜனனியை தாறுமாறாக விளாசி உள்ளார்.

இந்த வாரம் நிச்சயம் சம்பவம் இருக்கு
இந்த வாரம் தனலட்சுமி, அமுதா, ஜனனி இந்த மூணு பேரையும் கமல் நிச்சயம் வறுத்தெடுக்கப்போராரு, போன வாரம் எச்சரித்தும் இன்னும் தனலட்சுமி, ஜனனி மாறவே இல்லை. அமுதவாணன் விக்ரமனுக்கு எதிராக பேசுவது, காரணமே இல்லாமல் பிரச்சனையை உருவாக்குவதுமாகவே இருக்கிறார் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











