Don't Miss!
- News
"வரி குறைப்பு வரவேற்க கூடியதுதான்.." பட்ஜெட் குறித்து எம்.பி கார்த்தி சிதம்பரம் கருத்து
- Sports
"இன்னும் ஒரே ஒரு போட்டிதான்.. சுப்மன் கில்லால் இந்தியாவுக்கு ஆபத்து".. பாக். சீனியர் எச்சரிக்கை!
- Finance
பட்ஜெட் 2023: உங்க சம்பளத்துக்கு வரிச் சேமிப்பு எவ்வளவு..? புட்டு புட்டு வைக்கும் தகவல்..!
- Lifestyle
தாய்மார்களே! உங்க குழந்தைக்கு பாலோடு இந்த பழங்களை சேர்த்து சாப்பிட கொடுக்கவே கூடாதாம்..ஏன் தெரியுமா?
- Automobiles
சிஎம் பேரனா இருந்தாலும் தப்பிக்க முடியாது! இத்தன லட்சம் கார்களை அழிக்க போறாங்களா! திடீர் அதிரடியால் கலக்கம்!
- Technology
90's கிட்ஸ்களின் கனவு கேட்ஜெட்.! இப்போது ஹை-டெக் டிசைனில்.! அலறவிட்ட Sony Walkman விலை.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நீ சரியான அட்டகத்தி..ஸ்ட்ராங் பிளேயர் இல்லை..அசீமை வெளுத்துவிட்ட விக்ரமன்!
சென்னை : நீ சரியான அட்டக்கத்தி, ஸ்ட்ராங் பிளேயர் இல்லை என அசீமை வெளுவெளுவென வெளுத்துவிட்டுள்ளார் விக்ரமன்.
சீரியல் நடிகர் என்ற அறிமுகத்துடன் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அசீம்,பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் அனைத்து போட்டியாளர்களிடமும் சண்டை போட்டு விட்டார்.
சண்டை போட்டால் தான் ப்ரோமோவில் வர முடியும் என்ற ஸ்டேட்டர்ஜியை வைத்துக்கொண்டு இவர் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.
ADK-வை
ராப்
பாட
வைத்து
அசீமை
வெளுத்துவிட்ட
கமல்...
சம்பவம்ன்னு
சொல்வாங்களே
அது
இதுதானா?

அடாவடி அசீம்
பிக் பாஸ் சீசன் 6 தொடங்கிய நாளில் இருந்தே தேவையே இல்லாமல் அடாவடி சண்டை போட்டு வருகிறார் அசீம். முதலில் ஆயிஷாவிடம் மோதிய அசீம், பின்னர் விக்ரமனிடம் வாடா..போடா என சண்டை போட்டு சர்ச்சையில் சிக்கினார். அது மட்டுமில்லாமல் திருநங்கை ஷிவினை பாடிஷேமிங் செய்தார். இதனால், கமல்ஹாசனிடம் வாங்கி கட்டிக்கொண்டார்.

கார்னர் செய்கிறார்கள்
இதையடுத்து, கடந்த இரண்டு வாரங்களாக சமத்துப்பிள்ளைப் போல இருந்தார். பின்னர் மீண்டும் ராஜவம்சம் டாஸ்கில் ஏடிகேவிடம் சண்டை போட்டார். இதனால், கமல் அவருக்கு வார்னிங் கொடுத்த போது, எனக்கு எப்படி விளையாடுவது என்றே தெரியவில்லை நான், கேமைத்தான் விளையாடுகிறேன் ஆனால், என்னை கார்னர் செய்வதாக குற்றம்சாட்டினார்.

ஆதரவளிக்கும் ரசிகர்கள்
இதையடுத்து, சமூக வலைத்தளப் பக்கத்தில், அசீமுக்கு ஆதரவாக பல ரசிகர்கள் வாக்கு அளித்தனர். அவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கையும் கணிசமாக கூடியது. இதனால், அசீம் எத்தனை முறை நாமினேஷனில் வந்தாலும், அவரை ரசிகர்கள் காப்பாற்றி விடுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் கடந்த வாரம், ஒரு ரசிகை அசீம் மற்றும் தனலட்சுமி வீட்டில் இருப்பதால் தான் நிகழ்ச்சியே சுவாரசியமாக இருப்பதாக கூறியதால், மனுஷன் ஏகத்திற்கு குஷியாகி மீண்டும் ஆட்டம் போட ஆரம்பித்துள்ளார்

மயங்கி விழுந்த அசீம்
தற்போது பிக் பாஸ் வீட்டில், ஆதிவாசி மற்றும் ஏலியன்ஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்கின் போது அசீம் அமுதவாணனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அடிச்சாடலாம் வானு அமுதவாணன் சொல்ல அவர் கன்னத்தில் தட்டினார் அசீம். இதனால், அசீமை ஒட்டுமொத்த போட்டியாளர்களும் திட்டிதீர்த்தனர். இதையடுத்து, மயங்கி விழுந்து சீன் போட்டு பலரின் அனுதாபத்தை அள்ளினார் அசீம்.

அடித்தது தப்பு
இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவில், பேசிக்கிட்டு இருக்கும் போது அமுதவாணனை அசீம் அடித்தது ரொம்ப பெரிய தப்பு, அவர் லைம் லைட்டில் இருக்கணும் என்பதற்காக மட்டுமே இப்படி செய்கிறார், வாரா வாரம் இதையே செய்கிறார் என்று ஆசிம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார் விக்ரமன்.

மாறி மாறி வாக்குவாதம்
இதையடுத்து பேசும் அசீம், நான் லைம் லைட்டுக்கான இப்படி நடந்து கொள்ளவில்லை. ஆனால், நீங்கள் ஸ்ட்ராங் பிளேயரிடம் மோதினால் மக்களிடம் வரவேற்பு கிடைக்கும் என்பதற்காகத்தான் நீங்க என்னுடன் மோதுகிறீர்கள் என்பதை நினைக்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது என்று விக்ரமனின் முகத்திற்கு நேராக பேசினார்.

சரியான அட்டக்கத்தி
இதையடுத்து, சிங்கம் போல வந்த விக்ரமன், நீ சரியான அட்டக்கத்தி என நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன், நீங்க ஒரு ஸ்ட்ராங்கான பிளேயர் கிடையாது என அசீமை சும்மா வெளுவெளுவென வெளுத்துள்ளார். இவர்கள் இருவரின் சண்டையை பார்க்க இப்போதே ரசிகர்கள் தயாராகிவிட்டார்கள்.