Don't Miss!
- News
30 ஆண்டுகள் 266 நாட்கள்.. இதுதான் உலகின் மிகவும் வயதான நாய்! கின்னஸ் சாதனை படைத்து அசத்தல்
- Lifestyle
ஆண்களே! உங்க மனைவி உங்ககிட்ட இருந்து இந்த விஷயங்கள எதிர்பாக்குறாங்களாம்...அவை என்ன தெரியுமா?
- Sports
ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெறுமா? அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு.. இந்தியாவும் பங்கேற்பு
- Automobiles
இனி இந்த கார்களை வாங்கின மாதிரிதான்! இத செய்றதுக்கு முன்னாடி கொஞ்சம்கூட யோசிக்க மாட்டாங்களா..புலம்பும் மக்கள்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Technology
பிரௌசர் ஹிஸ்டரிக்கு பாஸ்வோர்ட் லாக் போடலாமா? இப்படி செஞ்சா யாரும் உங்க ஹிஸ்டரியை பதம் பார்க்க முடியாது.!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரௌடியா நீ...சவுண்டு விட்ட விக்ரமன்..ஆடிப்போன அசீம்..என்ன ஆச்சு தெரியுமா?
சென்னை : பிக் பாஸ் சீசன் 6ன் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோவில் ஓவர் ஆட்டம்போட்ட அசீமை சவுண்டு விட்டு விக்ரமன் அடக்கி உள்ளார்.
பிக் பாஸ் சீசன் 6ன் சர்ச்சை மன்னனாக இருப்பவர் அசீம், இவர் எது செய்தாலும் அது சர்ச்சையாகி விடுகிறது.
பிக் பாஸ் வீட்டில் அசீம் சண்டை போடாத ஒரே நபர் யார் என்றால் அது பிக் பாஸிடம் மட்டும் தான்.
நீங்க யாரு பிரதர்.. ஷிவினை பார்த்து அப்படி பேசிய அசீம்.. அறிவே இல்லையா என விளாசும் ரசிகர்கள்!

ஏடாகூட பேச்சு
சீரியல் நடிகர் என்ற அறிமுகத்தோடு பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த அசீம், வீட்டிற்குள் வந்த நாளில் இருந்தே போட்டியாளர்களுடன் ஏடாகூடமாக பேசி வருகிறார். விக்ரமனை வாடா போடா என்றும், ஆயிஷாவை வாடி போடி என்று பேசியது மட்டும் இல்லாமல், ஷிவினை பாடிஷேமிங் செய்து கமல்ஹாசனிடம் வாங்கி கட்டிக்கொண்டார்.

நான் தான் கேப்டன்
இதையடுத்து, நான் பேசினது தப்புத்தான், இந்த வீட்டில் இருந்து போகும் போது கோபத்தை விட்டு விட்டுபோக நினைக்கிறேன் என்று வியாக்கானம் பேசினார். இதையடுத்து, கடந்த இரண்டு வாரங்களாக வீட்டில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த அசீம். கேப்டனான பிறகு நான் தான் கேப்டன்... நான் தான் கேப்டன் என அலப்பறை கொடுத்து வருகிறார்.

ஆவர் ஆட்டம்
ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் பொதுமக்கள் கேள்வி கேட்கும் நிகழ்ச்சியில், பிக் பாஸ் பார்வையாளர் ஒருவர், அசீமும், தனலட்சுமியும் வீட்டில் இல்லை என்றால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியமே இருக்காது என்று கூறியிருந்தார். ஏற்கனவே ஆசிம் ஆட்டமாக ஆடுவாரு இதுல வேற மக்கள் அசீமால் தான் நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்கு என்று கூறியதை அடுத்து, காலில் சலங்கை காட்டி ஆடி வருகிறார் அசீம்.

கேவலமா, அசிங்கமா விளையாடுறீங்க
தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது ப்ராமோவில், ஏன் இவ்வளவு கேவலமா, அசிங்கமா, மட்டமா சீப்பா கேம் விளையாடுறீங்க, உங்களை போல மட்டமா நாங்கள் விளையாடவில்லை என்று அமுதவாணனை பார்த்து அசீம் ஆவேசத்துடன் கத்துகிறார். இதற்கு அமுதவாணன் யாராவது இப்படி பேசுவாங்களா ? சீப்பு, அசிங்கம்னு இது விளையாட்டு அசீம் என்று இருவரும் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றனர்.

ரௌடியா நீ
போட்டியாளர்கள் எவ்வளவோ சமாதானப்படுத்தினாலும், அடங்காமல் திரும்ப திரும்ப கத்திக்கொண்டிருந்த அசீமை பார்த்து ஓவர் டென்ஷனான விக்ரமன், அசீம் நீங்க இந்த வீட்டில் ரௌடித்தனம் செய்றீங்க, நீங்க என்ன பெரிய ரவுடியா என கேட்டு அசீமின் வாயை மூடி உக்கார வைத்தார் விக்ரமன். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் இன்றைய எபிசோடை பார்க்க ஆர்வமாக உள்ளனர்.