இது கேம்..இதுல ஏன் மனிதாபிமானம் வருது..கமல் யாரை காப்பாற்றுகிறார்.. விளாசிய வனிதா!
சென்னை : அசீமை அனைவரும் தொடர்ந்து டார்க்கெட் செய்வது நல்லது இல்லை என நடிகை வனிதா கூறியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை 5 சீசன் முடிவடைந்துள்ள நிலையில் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் இருந்த நிலையில், நிவாஷினி நேற்று வெளியேறியதை அடுத்து பிக்பாஸ் வீட்டில் தற்போது 15 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

நல்லவனா? கெட்டவனா?
பிக் பாஸ் முன்னாள் போட்டியாளரான வனிதா விஜயகுமார், பிரபல ஊடகம் ஒன்றில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனங்களை கூறி வருகிறார். இதில் நேற்றைய எபிசோடு குறித்து பேசிய வனிதா, ஆரம்பத்தில் அசீமின் மீது மக்களுக்கு எவ்வளவு கோபம் இருந்துதோ, அது கொஞ்ச கொஞ்சமாக மாறி வருகிறது. இவன் நல்லவனா? கெட்டவனா? என்று ரசிகர்களே குழம்பும் அளவுக்கு ஆகிவிட்டது.

அதிக வாக்குகளை பெற்ற அசீம்
சென்ற வாரம் அசீம் டாஸ்க்கை சரியா செய்து இருக்கிறார், டாஸ்கை பொருத்த வரையில் அவரை குறையே சொல்ல முடியாது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று சோஷியல் மீடியாவில் தனி ரசிகர்கள் இருக்கிறார். அதில் பாதி பெயர் அசீமை ஆதரித்து வருகிறார். இந்த வாரம் அதிக வாக்குகளை பெற்றதே அசீம் தான், இதை நேற்றைய நிகழ்ச்சியில் அதிகவாக்குகளை பெற்ற அசீம் சேஃவ் என்று கமலே கூறியிருந்தார்.

கெட்டவனாக சித்தரிக்கின்றனர்
அசீம் தான் ரொம்ப வலுவான போட்டியாளர் என்று போட்டியாளர்களுக்கு தெரிந்து விட்டதால் அவரை எப்படியாவது இந்த வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டு, அசீமை எவ்வளவு கெட்டவனாக சித்தரிக்க முடியுமோ, அப்படி சித்தரித்து வருகிறார்கள். அதே போல கமலும் வாரா வாரம் வந்து அசீமை வெளுத்து வாங்கி வருகிறார். இதனை போட்டியாளர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டு அசீமை டார்க்கெட் செய்து வருகின்றனர்.

விக்ரமன் எதுவும் செய்யவில்லை
அதே போல, வீட்டில் இருப்பவர்கள் அமுதவாணன், தனலட்சுமி,விக்ரமனன் என அனைவருமே தப்பு செய்தார்கள் அவர்களை கமல் எதுவும் கேட்கவில்லை. இந்த டாஸ்கில் ராஜகுருவா இருந்த விக்ரமன் எதுவுமே செய்யாமல் சும்மாவே இருந்தார் அவரை எதுவும் கேட்காமல், டாஸ்கை சரியா செய்த அசீமை கமல் தொடர்ந்து டார்க்கெட் செய்து வந்தார்.

கமல் யாரை காப்பாற்றுகிறார்
அது மட்டும் இல்லாமல், அந்த வீட்டில் ஒரு பெண்ணுக்கு தலையில் அடிபட்ட போது எதுவுமே கேட்காத கமல், கதிரின் காலில் இருக்கும் சங்கிலி பற்றி மனிதாபிமானம் இருக்கா, விளையாட்டிலும் நேர்மை வேணும், அப்படி இப்படி என்று கமல் பேசுவதை பார்க்கும் போது கோவமாகத்தான் வருகிறது. கேமில் எங்கிருந்து மனிதாபிமானம் வருது, யாரை காப்பாற்ற கமல் இவ்வாறு பேசுகிறார் என்று தெரிவில்லை. இப்படியே அசீமை அனைவரும் டார்க்கெட் பண்ணிக்கிட்டு இருந்தாங்கனா அதுவே அசீமுக்கு பிளஸாக மாறிவிடும் என்று வனிதா விஜயகுமார் பேசினார்.


Click it and Unblock the Notifications











