கட்டிப்புடி கட்டிப்புடிடா..பிக்பாஸ் வீடா இல்ல பிட்டு பட ஷூட்டிங்கா?.. எல்லை மீறிய கானா வினோத், ரம்யா
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் தொடங்கி நடந்துவருகிறது. சுய விருப்பத்தின் பேரில் நந்தினி வீட்டிலிருந்து வெளியேற பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை உள்ளிட்டோர் எவிக்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். இது ஒருபக்கம் இருக்க வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் ரசிகர்கள் சகட்டுமேனிக்கு விமர்சித்துவருகிறார்கள். தற்போது அந்த விமர்சனத்தில் கானா வினோத்தும், ரம்யாவும் சிக்கியிருக்கிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனில் பிரவீன் காந்தி உள்ளிட்டோர் சிலர் தவிர்த்து பெரும்பாலானவர்கள் சோஷியல் மீடியாக்களில் ஃபேமஸ் ஆனவர்கள் போட்டியாளர்களாக களமிறங்கியிருக்கிறார்கள். எனவே போட்டியில் சுவாரஸ்யம் இருக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்திருந்தது. ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக ஒவ்வொரு நாளும் கன்டென்ட்டுகளை கொட்டி கொடுக்கிறார்கள்.
எல்லாம் சரி ஆனால்?: அவர்கள் கன்டென்ட்டுகளை கொட்டி கொடுத்தாலும் அது ரசிகர்கள் ரசிக்கும்படி இல்லை என்பதுதான் உண்மை. ரூல்ஸ்களை மீறுவது, ஆபாச செயல்கள், ஆபாசமாக பேசுவது, அதீத வன்முறை என முகம் சுளிக்கும்படியே நடந்துகொள்கிறார்கள். பிக்பாஸேகூட இந்த சீசன் ஒழுங்கீனத்தால் மட்டுமே வெளியில் பேசுபொருளாகியிருக்கிறது என்று நொந்துகொள்ளும் அளவுக்கு நிலைமை சென்றது.

எவிக்ட்டானவர்கள் லிஸ்ட்: நிக்ழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே நந்தினி சுய விருப்பத்தின் பேரில் வீட்டிலிருந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து இயக்குநர் பிரவீன் காந்தி எவிக்ட் செய்யப்பட்டார். அடுத்தடுத்த வாரங்களில் அப்சரா, ஆதிரை ஆகியோர் வெளியேறினார்கள். வைல்டு கார்டு என்ட்ரி மூலம் இன்னும் சில பிரபலங்கள் வீட்டுக்கு போட்டியாளர்களாக வரவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்டிக்கும் விஜய் சேதுபதி: இதெல்லாம் ஒருபக்கம் இருக்க போட்டியாளர்களின் நடத்தை நாளுக்கு நாள் கண்டனத்தை சம்பாதித்து வருகிறது. வாரா வாரம் வரும் விஜய் சேதுபதி தனது பங்குக்கு அவர்களை கட்டுப்படுத்தவும், கண்டிக்கவும் செய்தாலும் வார நாட்களில் போட்டியாளர்கள் தங்களது சேட்டையை நிறுத்துவதில்லை. அவர்கள் செய்யும் செயல்கள் சட்டப்பேரவையில் கிழித்து தொங்கவிடப்படும் நிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கானா வினோத், ரம்யா: தொடர்ந்து வரும் எதிர்மறை விமர்சனங்களால் இனி வரும் நாட்களில் அவர்கள் தங்களது செயல்பாடுகளில் மாற்றத்தை காண்பிப்பார்கள் என்று எண்ணப்பட்டது. ஆனால் இப்போது கானா வினோத்தும், ரம்யாவும் செய்த செயல் ஒன்று விமர்சனத்தை சந்தித்திருக்கிறது. அதாவது ஒரு டாஸ்க்கின்போது ரம்யாவை கானா வினோத் கட்டிப்பிடித்தபடி இருக்கிறார். மேலும் ரம்யவும் குழந்தை பிறக்கப்போகுது குழந்தை பிறக்கப்போகுது என்று சொல்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அது பிக்பாஸ் வீடா இல்லை பிட்டு பட ஷூட்டிங்கா ஒரு அளவு இல்லையா என கழுவி கழுவி ஊற்ற ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











