கமலுக்கு பதில் தொகுத்து வழங்க போவது யார்... பிக்பாஸின் 3 திட்டங்கள் இதுதான்

சென்னை : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் நான்கு சீசன்களையும் உலக நாயகன் கமல் தான் தொகுத்து வழங்கினார். தற்போது ஒளிபரப்பாகி வரம் ஐந்தாவது சீசனையும் அவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

வாரத்தின் கடைசி இரண்டு நாட்கள் மட்டும் வரும் கமல், அந்த வாரத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றி பேசுவார். அந்த வாரம் வெளியேற போவது யார், காப்பாற்ற போவது யார் என்பதை அறிவிப்பார்.

ரசிகர்களை கவர்ந்த கமல்

ரசிகர்களை கவர்ந்த கமல்

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இந்த அளவிற்கு வெற்றி அடைவதற்கு முக்கிய காரணம் கமல் தான். அவரது ஸ்டைல், தொகுத்து வழங்கும் விதம், போட்டியாளர்களின் பிரச்சனைகளை கையாளும் விதம் ஆகியன தனித்துவமாக இருப்பதால் லட்சக்கணக்கானவர்களின் மனங்களை கவர்ந்து, ஃபேவரைட் தொகுப்பாளர் ஆகவும் ஆகி விட்டார் கமல்.

மற்றவரை ஏற்காத மக்கள்

மற்றவரை ஏற்காத மக்கள்

அரசியல் மற்றும் சினிமாவில் பிஸியாக இருப்பதால் பிக்பாஸ் சீசன் 5 ஐ கமல் தொகுத்து வழங்க மாட்டார் என வதந்தி பரவி போதே, கமலை தவிர வேறு யார் தொகுத்து வழங்கினாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை மக்கள் ரசிக்க மாட்டார்கள் என அனைவரும் கூறினர். கமல் இடத்தை யாரும் ஈடு செய்ய முடியாது என்னும் அளவிற்கு கமல் அனைவரின் மனங்களிலும் இடம்பிடித்தார்.

கடமை தவற மாட்டேன்

கடமை தவற மாட்டேன்

சமீபத்தில் கமல் சிகாகோ போனதற்கே அவர் இந்த வாரம் வருவாரா என பலர் சந்தேகம் கிளப்பியதற்கே டென்ஷனாகி, இந்த வார ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் நீண்ட விளக்கம் அளித்தார் கமல். தான் ஒரு போதும் கடமை தவறியவன் என பெயர் எடுத்ததில்லை என்றும், இனியும் கடமை தவற மாட்டேன் என்றார்.

கமலுக்கு கொரோனா

கமலுக்கு கொரோனா

ஆனால் எதிர்பாராத விதமாக அடுத்த நாளே அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானதால், மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக ட்வீட் செய்தார் கமல். சிகிச்சை இருக்கும் கமல் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகமும் அறிக்கை வெளியிட்டது. பிரபலங்கள், ரசிகர்களும் கமல் விரைவில் குணமடைய வாழ்த்து கூறி வருகிறார்கள்.

கமல் எப்போ வருவார்

கமல் எப்போ வருவார்

கமலுக்கு சிகிச்சை முடிந்து, அவர் கொரோனாவில் இருந்து மீண்டு வர இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஆகுமாம். இதனால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்க முடியாதாம். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை அவருக்கு பதில் யார் தொகுத்து வழங்குவது என விஜய் டிவி ஆலோசனை நடத்தி வருகிறதாம்.

பிக்பாஸ் பிளான்

பிக்பாஸ் பிளான்

நெருக்கமான சில வட்டாரங்கள் கூறுகையில், விஜய் டிவியும் பிக்பாஸ் டீமும் மூன்று திட்டங்களை யோசித்து வருகின்றனவாம். அதன் படி முதல் திட்டமாக, கமல் திரும்பி வரும் வரை தற்காலிகமாக நிகழ்ச்சியை நிறுத்தி வைக்கலாமா அல்லது எவிக்ஷனை நிறுத்தி வைக்கலாமா என யோசிக்கிறார்களாம்.

 ஸ்ருதியிடம் பேச்சுவார்த்தை

ஸ்ருதியிடம் பேச்சுவார்த்தை

இரண்டாவதாக கமலுக்கு பதில் அவரது மகள் ஸ்ருதிஹாசனை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வைக்கலாமா என ஆலோசித்து வருகிறார்கள். ஏற்கனவே தெலுங்கில் நாகர்ஜுனா ஷுட்டிங்கில் பிஸியாக இருந்த போது, அவரது மருமகளும் நடிகையுமான சமந்தாவை வைத்து பிக்பாஸை தொகுத்து வழங்க வைத்தனர். அதே போல் ஸ்ருதியிடம் பேச திட்டமிட்டுள்ளனர்.

மூன்றாவது பிளான்

மூன்றாவது பிளான்

ஒருவேளை ஸ்ருதி, இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மறுத்து விட்டால், வேறு ஒரு பிரபலத்தை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வைக்கலாம் எனவும் யோசித்து வருகிறார்களாம்.

 விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

மற்றொரு பிரபலத்திற்கு பதில் கமலின் மகளே அவரின் பணியை தொடர்ந்தால் அது நிகழ்ச்சிக்கு வெயிட்டாக இருக்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நினைக்கிறார்களாம். ஸ்ருதியிடம் முதல் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டு விட்டதாம். ஸ்ருதி ஓகே சொல்லி விட்டால் இன்னும் இரண்டு நாட்களில், கமல் திரும்ப வரும் வரை ஸ்ருதி தொகுத்து வழங்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X