Don't Miss!
- News
"நில்லுங்கப்பா".. கலங்கும் எடப்பாடி பழனிசாமி?.. 18 மாஜிக்களாமே.. அதுவும் 3 மணி நேரம்.. அடுத்த சரவெடி
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Lifestyle
பெண்கள் வயாகரா எடுத்துக்கொள்ளலாமா? எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
- Technology
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- Sports
மகளிர் ஐபிஎல் - சென்னை மிஸ் ஆனது எப்படி தெரியுமா? யார் எவ்வளவு தொகை கேட்டாங்க
- Finance
கூகுள் ஊழியர்கள் சம்பளம் கட்.. சுந்தர் பிச்சை அடுத்த அதிரடி..!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
சொன்னபடி செய்த பிக் பாஸ் அசீம்... ஆனாலும் விடாமல் துரத்தும் நெட்டிசன்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு வந்தது.
21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் சீரியல் நடிகர் அசீம் டைட்டில் வின்னராக தேர்வானார்.
விக்ரமன் தான் டைட்டில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அசீம் வெற்றிப் பெற்ற பிக் பாஸ் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், டைட்டில் வென்ற அசீம் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாக சொன்னாலும், நெட்டிசன்கள் அவரை தொடர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
அப்படி டிரெஸ் அணிவதால் யாரும் எனக்கு வீடு வாடகைக்கு தரமாட்றாங்க.. பிக் பாஸ் நடிகை புலம்பல்!

பிக் பாஸ் சீசன் 6 சர்ச்சை
கடந்தாண்டு அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, 22ம் தேதியோடு முடிவுக்கு வந்தது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் அசீம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். வாக்குகள் அடிப்படையில் அசீம் பிக் பாஸ் சீசன் 6ன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டாலும், பெரும்பாலான ரசிகர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. நியாயமாக விக்ரமன் தான் டைட்டில் வெல்ல தகுதியானவர் என சமூக வலைத்தளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

சொன்னபடி செய்த அசீம்
இதனிடையே டைட்டில் வென்ற அசீம், பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்து போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாக கூறியுள்ளார். பிக் பாஸ் பைனலுக்கு முன்னால் வாக்கு சேகரித்த அசீம், தான் டைட்டில் வென்று 50 லட்சம் ரூபாய் பணம் கிடைத்தால், அதில் 25 லட்சத்தை கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களின் கல்விக்காக கொடுப்பேன் என்றிருந்தார். தற்போது அதுகுறித்து தனது இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டுள்ள அசீம், ஏற்கனவே சொன்னபடி தான் வென்ற 50 லட்சத்தில், ரூ.25 லட்சத்தை மாணவர்களின் கல்விக்காக கொடுக்கவுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் தன்னை வெற்றிப் பெற செய்த ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

அசீமை விடாத நெட்டிசன்கள்
அசீம் வெளியிட்டுள்ள வீடியோ ட்ரெண்டாகி வரும் நிலையில், பலரும் அவரது செயலை பாராட்டியுள்ளனர். அதேநேரம் அசீமின் வெற்றி ஏற்புடையதல்ல, அது இந்த சமூகத்திற்கு ஒரு தவறான முன்னுதாரணம் என ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும் Abuser Azeem என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். Abuser Azeem என்ற ஹேஷ்டேக் தொடர்ந்து 4வது நாளாக ட்ரெண்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அறம் வெல்லும்
அதேபோல் கடந்த 3 தினங்களாக பாய்காட் விஜய் டிவி என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டிங்கில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அசீம் டைட்டில் வென்றது பிக் பாஸ் சீசன் 6ல் பங்கேற்ற சக போட்டியாளர்களுக்கே உடன்பாடில்லை என்பதையும் பார்க்க முடிகிறது. அதேநேரம் தொடர்ந்து விக்ரமன்தான் உண்மையான வெற்றியாளர், அறமே வெல்லும் என அவருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரபல யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்த விக்ரமனும் அசீமின் வெற்றியை தவறான முன்னுதாரணம் என பேசியது குறிப்பிடத்தக்கது.