நிஜமாவே Ultimate ஆ தான் இருக்கும் போலவே...வேற லெவலில் ப்ரோமோ வெளியிட்ட பிக்பாஸ்
சென்னை : விஜய் டிவியில் தொடர்ந்து 105 நாட்கள் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்றோடு நிறைவடைந்து விட்டது. ஃபினாலே மேடையிலேயே பிக்பாஸ் அல்டிமேட் பற்றி அறிவிப்பையும் உறுதி செய்தார் கமல்.
Recommended Video
ஜனவரி 30ம் தேதி தான் இந்த நிகழ்ச்சி துவங்கப்பட உள்ளது என கூறப்பட்டது. இருந்தாலும் ரசிகர்களின் ஆர்வத்தை இப்போது இருந்தே தூண்ட வேண்டும் என்பதற்காக இப்போதே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கான ப்ரோமோவை விஜய் டிவி துவக்கி விட்டது.

பிக்பாஸ் அல்டிமேட்
ஓடிடி வெர்சனான பிக்பாஸ் இந்தியை தொடர்ந்து தமிழிலும் துவங்கப்பட உள்ளது. இதற்கு பிக்பாஸ் அல்டிமேட் என பெயர் வைத்துள்ளார்கள். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஜனவரி 30ம் தேதி துவங்கி 72 நாட்கள் 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மொத்தம் 12 அல்லது 13 போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

24 மணி நேர ஒளிபரப்பு
பிக்பாஸ் டிவி வெர்சனில் ஐந்து சீசன்களிலும் பங்கேற்ற வெற்றியாளர்களை தவிர மற்றவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியையும் கமலே தொகுத்து வழங்க உள்ளார். 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்வார்கள் என்றால் எப்படி காட்ட முடியும் என ரசிகர்கள் புரியாமல் குழம்பிப் போய் உள்ளனர். இருந்தாலும் முதல் ப்ரோமோவே, யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது.

சுவரை உயர்த்தி கட்டுங்க
இந்த ப்ரோமோவில், பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்து கொண்டிருக்கும் சுவர் அமைக்கும் பணிகளை பார்வையிடும் கமல், வீடு அப்படியே இருக்கட்டும். ஆனால் சுவரின் உயரம் போதாது. சுவரை நன்றாக உயர்த்தி கட்டுங்கள். வரப்போகிற ஆட்கள் அந்த மாதிரி. பாடலுக்கு நடனமாடியவர்களையும் நாம் பார்த்திருக்கிறோம். சுவர் ஏறி குதிச்சவங்களையும் பார்த்திருக்கிறோம். இப்போ வரப்போகிறவர்கள் வத்தியும் வச்சிருக்காங்க. வீட்டையே பத்தவும் வச்சிருக்காங்க.

விட்டதை பிடிக்க வர்றாங்க
விட்டதை பிடிக்க வீட்டிற்குள் வர போகிறார்கள். விடாம மல்லுக்கட்ட போறாங்க. அதை 24 மணி நேரமும் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் காட்ட போறாங்க. பிக்பாஸ் உங்களுக்கு தான் வேலை அதிகம். தொலைச்ச இடத்துல தான தேட முடியும். தோத்த இடத்துல தான ஜெயிக்க முடியும். This is bigg boss ultimate. உங்களுக்கு பிடித்த போட்டியாளர்கள் மீண்டும் வர போகிறார்கள். புதிய வேகத்தோடு, புதிய வியூகத்தோடு என்கிறார் கமல்.

ஆவலாக காத்திருக்கும் ரசிகர்கள்
இதை பார்த்த ரசிகர்கள் எப்போது ஜனவரி 30 வரும் என காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளனர். ப்ரோமோவிலேயே வனிதா விஜயக்குமாரின் குரல் கேட்பதால், அவர் பங்கேற்பது கிட்டதட்ட உறுதியாகி விட்டது. மற்ற போட்டியாளர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











