Don't Miss!
- News
ரயிலில் பயணித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.. அபாய சங்கிலியை இழுத்து நிறுத்திய பெண்.. காரணம் என்ன?
- Sports
"ஆமா.. தோனி மாதிரி தான் செய்றேன்" ஹர்திக் பாண்ட்யா மீது எழுந்து வந்த குற்றச்சாட்டு.. தடாலடி பதில்!
- Automobiles
டாடா மாருதி ஆட்டம் எல்லாம் இனி குளோஸ்! க்விட் இவி வந்ததும் துண்டை காணும் துணிய காணும்னு ஓட போறாங்க!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தூங்கும் போலீசிடமே திருடும் அபினய்...பிக்பாஸ் அல்டிமேட் அலப்பறைகள்
சென்னை : பிக்பாஸ் அல்டிமேட்டில் போலீஸ் டீமை, களவாணிகள் டீம் படாதபாடு படுத்தி, போலீசாரின் பொருட்களையே திருடும் அலப்பறைகள் அனைவரையும் தலைசுற்ற வைத்துள்ளது. அதுவும் தூங்கும் போலீசிடமே திருடும் அபினய் கலகல என கலக்கி வருகிறார்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் பெரிய அளவில் டாஸ்க்குகள் இல்லாததால் சற்று போரடிக்க வைத்தது. வழக்கம் போல் வனிதாவின் சண்டைகள், மோதல்கள் தான் ப்ரோமோ உட்பட அனைத்திலும் காட்டப்பட்டது. இதனால் வழக்கமான பிக்பாஸ் தானே இதில் என்ன சுவாரஸ்யம் இருக்கு என ரசிகர்கள் பலர் அலுத்துக் கொண்டனர்.
ரீலில்
வில்லன்...ரியலில்
ஹீரோ...விபத்தில்
காயமடைந்தவருக்கு
உதவிய
சோனு
சூத்..குவியும்
பாராட்டுக்கள்

கலகலப்பை கூட்டிய பிக்பாஸ்
இதனால் ரசிகர்களை கவர்வதற்காக இரண்டாவது வாரத்தில் கலகலப்பையும், சுவாரஸ்யத்தையும் கூட்டி விட்டார் பிக்பாஸ். இந்த வாரத்தின் ஆரம்பித்திலேயே வனிதாவை டிரெண்டிங் பிளேயர் என அறிவித்து அவரை நாமினேட் செய்ய முடியாது என்றார் பிக்பாஸ். அதோடு வீட்டின் ரெஸ்ட்ரிக்டட் பகுதியை பயன்படுத்தும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டது.

போலீஸ்-களவாணி டாஸ்க்
வனிதாவின் சண்டைகள், அலப்பறைகள் மட்டுமே காட்டினால் மக்களுக்கு போரடித்து விடும் என்பதால் இந்த வாரம் களவாணிகள் - போலீஸ் டாஸ்க்கை வழங்கி உள்ளனர். இதில் வனிதா, தாமரை, பாலாஜி, அனிதா, சுருதி, ஷாரிக், சுஜா வருணி ஆகியோர் போலீசாகவும், பாலாஜி முருகதாஸ், அபினய், நிரூப், ஜுலி, அபிராபி, சினேகன் ஆகியோர் களவாணிகளாகவும் உள்ளனர். கடந்த வாரம் ஹவுஸ்மேட்களை வனிதா தான் வச்சு செய்தார். ஆனால் இந்த வாரம் அப்படியே தலைகீழாக மாறி, மற்றவர்கள் வனிதாவை கிறங்கடித்து வருகின்றனர்.

வனிதாவையே டயர்ட் ஆக்கிட்டாங்களே
களவாணிகளாக இருப்பவர்கள் போலீஸ் டீமில் இருப்பவர்களின் பொருட்களை திருடி, அடகு கடையில் அடகு வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம். இதனால் போலீசாக இருக்கும் வனிதாவின் கிளிப், பிளவுஸ், ஷாரிக்கின் ஷு ஆகியவற்றை திருடி வந்து அடகு வைத்தனர். களவாணிகள் செய்த அலப்பறையால் டயர்டாகி வனிதா தூங்க சென்று விட்டார். காலையிலேயே நான் டாஸ்க் விளையாடவில்லை என சொல்லி கோபப்பட்டு போய் விட்டார்.
Recommended Video

அட அபினய்யா இது
பிக்பாஸ் சீசன் 5ல் அமைதியாக இருந்த அபினய், பிக்பாஸ் அல்டிமேட்டில் கலக்கி வருகிறார். இவர் போலீசாக இருக்கும் தாடி பாலாஜியின் போலீஸ் உடையிலிருந்த பேட்ஜையே திருடி சென்று விட்டார். ஆனால் ஷாரிக், திருட்டு போலீசாக மாறி, திருடர்கள் டீமுடன் கூட்டு சேர்ந்து விளையாட துவங்கினார். இந்த டாஸ்க் பிக்பாஸ் அல்டிமேட்டையே கலகலப்பாக்கி உள்ளது.