என்னது...25 லட்சமா... அப்போ இன்னும் பணப்பெட்டி டாஸ்க் முடியலியா?
சென்னை : பிக்பாஸ் அல்டிமேட்டில் பணப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ள தொகை 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதால், அதை எடுத்துக் கொண்டு வெல்ல போகும் அந்த போட்டியாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
பிக்பாஸ் ஐந்து சீசன்களின் வெற்றியை தொடர்ந்து, ஓடிடி வெர்சனாக ஹாட்ஸ்டாரில் 24 மணி நேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் கமல் தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சி, அவர் திடீரென விலகியதால் தற்போது சிம்புவால் நடத்தப்பட்டு வருகிறது.

பணப்பெட்டி டாஸ்க்
14 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, 60 நாட்களை கடந்துள்ளது. ஏப்ரல் 9 ம் தேதி இறுதிப் போட்டி நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது 7 பேர் களத்தில் உள்ளனர். இவர்களுக்கு சமீபத்தில் பணப்பெட்டி டாஸ்க் நடத்தப்பட்டது. வழக்கம் போல் பணப் பெட்டியில் வைக்கப்படும் பரிசுத் தொகை படிப்படியாக உயர்த்தப்பட்டாலும், பிக்பாஸ் அல்டிமேட்டில் பணப்பெட்டியை அவ்வளவு சுலபமாக யாரும் வெல்ல முடியாது என கூறப்பட்டது.

15 லட்சம் வென்ற சுருதி
பணப்பெட்டியில் வைக்கப்பட்ட தொகை 15 லட்சமாக உயர்த்தப்பட்ட நிலையில், அதை எடுக்க சுருதி மற்றும் ஜுலி முன் வந்தனர். ஆனால் அவர்களுக்கு பல கட்ட டாஸ்க் வைக்கப்பட்டது. இதில் வெற்றி பெற்று பணப்பெட்டியுடன் வெளியேறினார் சுருதி. இதனால் அனைவரின் கவனமும் இன்று வெளியேற போகிறவர் யார், ஃபினாலேவிற்கு செல்ல போகிறவர்கள் யார், டைட்டில் வெல்ல போகிறவர் யார் என்பதில் திரும்பியது.

என்னது 25 லட்சமா
ஆனால் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரோமோவில், இந்த பணப்பெட்டியை அவ்வளவு சீக்கிரம் எடுக்க முடியாது. இதற்காக நீங்கள் போட்டி போட்டே தீர வேண்டும் என சொல்லி ஷாக் கொடுக்கிறார் சிம்பு. இதனால் ஷாக் ஆனாலும் சமாளித்துக் கொண்டு, அடுத்து உயர்த்தப்படுவது எவ்வளவு தொகை என சொல்லுங்கள் என கேட்கிறார் ரம்யா பாண்டியன். அதற்கு சிம்பு, 25 லட்சம் என்கிறார்.

இன்னும் டாஸ்க் முடியலியா
15 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக பணப்பெட்டி தொகை உயர்த்தப்பட்டு, போட்டி தொடரப்படும் என சிம்பு சொல்கிறார். இதனால் ஏற்கனவே பணப்பெட்டிக்காக போட்டி போட்டு, அதை வென்று, வெளியேறி உள்ள சுருதியின் நிலை என்ன ஆகும். மீண்டும் பணப்பெட்டி டாஸ்க்கை தொடர அவர் வீட்டிற்குள் அனுப்பப்படுவாரா, இல்லை அப்படியே வெளியேற்றப்படுவாரா என தெரியவில்லை.

என்னப்பா குழப்புறீங்க
இதோடு மற்றொரு ட்விஸ்டாக ப்ரோமோவில் பேசும் சிம்பு, இன்னும் ஒரு வாரத்தில் போட்டி முடிய போவதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் கடைசி நாளில் மாற்றம் நிகழலாம் என்கிறார். அப்படியானால் ஏப்ரல் 9 ம் தேதி ஃபினாலே கிடையாதா. இன்னும் போட்டியை தொடர போகிறார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்ப துவங்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











