பிக்பாசையே அலற விட்ட போட்டியாளர்கள்...எச்சரிக்கைக்கு கூட மதிப்பில்லையா

சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்று பிக்பாஸ் எச்சரிக்கை விடுத்தும் அதை கண்டுகொள்ளாமல் போட்டியாளர்கள் நடந்து கொண்டது பிக்பாஸை கடுப்பேற்றி உள்ளது. இந்த டாஸ்கிற்கே இப்படியா...இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ என பலர் கவலை தெரிவித்துள்ளனர்.

Recommended Video

Bigg Boss Ultimate-ல் Abhishek Raja WILDCARD Entry | BB Ultimate Tamil

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. மொத்தம் 16 போட்டியாளர்களுடன் 48 நாட்கள் நடக்கும் என்றார்கள். ஆனால் இதுவரை 14 போட்டியாளர்கள் மட்டுமே வந்துள்ளனர். மீதமுள்ள 2 பேர் வைல்கார்டு என்ட்ரியாக வர போவதாக கூறப்படுகிறது.

வைல்கார்டு என்டரியாக இரண்டு பேர்

வைல்கார்டு என்டரியாக இரண்டு பேர்

முதல் வாரத்தில் நடந்த நாமினேஷனில் 8 பேர் நாமினேட் ஆனார்கள். அதில் சுரேஷ் சக்கரவர்த்தி முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார். வைல்ட் கார்ட் என்ட்ரியாக ஓவியா மற்றும் அபிஷேக் ராஜா இருவரும் விரைவில் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் வைல்கார்டு என்ட்ரியாக ஓவியா இந்த வாரம் வீட்டிற்குள் வர உள்ளதாக கூறப்படுகிறது.

டிரெண்டிங் பிளேயரான வனிதா

டிரெண்டிங் பிளேயரான வனிதா

இதற்கிடையில் இரண்டாவது வாரத்திற்கான நாமினேஷன் நேற்று நடைபெற்றது. இதில் ஜுலி, தாமரை, சுஜா உள்ளிட்ட 6 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். வனிதாவை யாரும் நாமினேட் செய்ய முடியாத வகையில் அவரை இந்த வாரத்திற்கான டிரெண்டிங் பிளேயர் என பிக்பாஸ் அறிவித்தார். அவருக்கு வீட்டில் உள்ள ரெஸ்ட்ரிக்டட் ஏரியாவை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதோடு இனி ஒவ்வொரு வாரமும் டிரெண்டிங் பிளேயர் தேர்வு செய்யப்படுவார் என்றார் பிக்பாஸ்.

எச்சரித்த பிக்பாஸ்

எச்சரித்த பிக்பாஸ்

கடந்த வாரம் ஷாரிக் கேப்டனாக இருந்த நிலையில், இந்த வாரம் சினேகன் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று திருடன் - போலீஸ் என இரு டீம்கள் பிரிக்கப்பட்டு டாஸ்க் வழங்கப்பட்டது. இதற்காக போலீஸ் டீமிற்கு போலீஸ் யூனிஃபார்ம் வழங்கப்பட்டது. டாஸ்க் துவங்குவதற்கு முன்பே, இது போலீஸ் உடை. கவனமாக, கண்ணியமாக கையாள வேண்டும் என பிக்பாஸ் எச்சரித்தார். ஆனால் போட்டியாளர்கள் அதை கண்டுகொள்ளவில்லை.

கண்டுகொள்ளாத போட்டியாளர்கள்

கண்டுகொள்ளாத போட்டியாளர்கள்

சுருதி , கருப்புக்கலர் பேண்ட் போட்டு மேலே மட்டும் யூனிஃபார்ம் சட்டை போட்டிருந்தார். ஷாரிக், சர்ட் பட்டன் போடவில்லை. பாலாஜி தொப்பியை தூக்கிக்கொண்டு தலையில் வைக்காமல் இருந்தார். அதே சமயம் திருடனாக இருந்த அணியினரும் வீட்டில் உள்ள பல பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர். போலீசே பல பொருட்களை திருடி ஒளித்து வைத்தனர். பிக்பாசின் எச்சரிக்கையையும் மீறி போட்டியாளர்கள் நடந்து கொண்ட விதம் பிக்பாஸையே கடுப்பாக்கி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X