அபிராமி இடுப்பை பாலா கிள்ளினாரா? இல்லையா?...யாராச்சும் பாத்தீங்களா இத ?

சென்னை : அபிராமி இடுப்பை பாலா கிள்ளினார் என நிரூப் சொல்கிறார். ஆனால் அப்படி ஒன்று நடக்கவேயில்லை என பாலா அடித்து கூறுகிறார். ஆனால் சம்பந்தப்பட்ட அபிராமி அமைதியாக இருக்கிறார். இதனால் யார் சொல்வது உண்மை, என்ன நடந்தது என்ன தெரியாமல் மற்ற போட்டியாளர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.

24 மணி நேர ஓடிடி நிகழ்ச்சியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் அல்டிமேட். இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். 10 வாரங்களைக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் 14 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களில் சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் சுஜா வருணி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். பிக்பாஸ் அல்டிமேட்டில் 20 நாட்கள் கடந்து விட்டது.

பிக்பாசிலிருந்து விலகுகிறாரா கமல்

பிக்பாசிலிருந்து விலகுகிறாரா கமல்

இந்நிலையில் இந்த வாரம் டபுள் எவிக்ஷனில் ஷாரிக் மற்றும் அபினய் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் வைல்கார்டு என்ட்ரி வேறு நடைபெற உள்ளது. ஓவியா, அபிஷேக் இருவரும் வைல்கார்டு என்ட்ரியாக உள்ளே வர உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், சினிமாவில் செம பிஸியாக இருப்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல் இனி வர மாட்டார். இந்த வாரம் அவர் பங்கேற்பது தான் கடைசி எபிசோட் என்று ஒரு வதந்தியும் பரவி பரபரப்பாக்கி உள்ளது.

ஆஹா...இது செம மேட்டரா இருக்கே

ஆஹா...இது செம மேட்டரா இருக்கே

கமல் இனி பிக்பாசில் வர மாட்டார் என்ற தகவலால் வெளியில் தான் பரபரப்பு என்றால், பிக்பாஸ் வீட்டிற்குள் அதை விட பரபரப்பான செம மேட்டர் ஒன்று நடந்துள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் மட்டுமின்றி சோஷியல் மீடியாவிலும் நேற்று முதல் இதே பேச்சாக தான் உள்ளது. இது தொடர்பான வீடியோக்கள், முந்தைய நிகழ்வுகளின் வீடியோக்கள் தான் செம டிரெண்ட் ஆகி வருகிறது. பொம்மை டாஸ்க்கில் தாமரை, வனிதா இடையே கடுமையான சண்டை நடக்கிறது. இது ஒரு வழியாக ஓய்ந்த பிறகு பெட்ரூமில் நிரூப் சோகமாக அமர்ந்திருக்கிறார்கள்.

அபிராமி இடுப்பை கிள்ளிய பாலா

அபிராமி இடுப்பை கிள்ளிய பாலா

எதற்காக இவ்வளவு சோகம் என நிரூப்பிடம் அனிதா விசாரித்துக் கொண்டிருக்கையில், அங்கு என்ட்ரியாக என்ன விஷயம் என கேட்கிறார் வனிதா. நிரூப்பும் செம சீரியசாக, கதவு பக்கத்தில் அபிராமி நின்று கொண்டிருந்த போது, நான் உள்ளே இருப்பது தெரிந்தும் அபிராமியின் இடுப்பை பாலா டச் பண்ணுகிறான். அவளும் எந்த ரியாக்ஷனுச் காட்டாமல் போகிறாள். எங்களுக்குள் என்ன நடந்து கொண்டிருக்கிறது என தெரிந்தும் பாலா இப்படி செய்கிறான். வெளியில் போய் என்ன கருமத்தை வேண்டுமானாலும் பண்ணிவிட்டு போகட்டும். இங்கே எதற்காக பண்ண வேண்டும் என புலம்புகிறார்.

கொளுத்தி போடும் வனிதா

கொளுத்தி போடும் வனிதா

வனிதாவும், அவள் இப்படி தான் எல்லாவற்றையும் செய்கிறாள். ரூமிற்குள் மைக்கை கழற்றி வைத்து விட்டு ஒன்றை சொல்கிறாள். வெளியில் வந்து வேறு மாதிரி நடந்து கொள்கிறாள். அது அவர்களின் கேம் ஸ்டாடர்ஜியாக கூட இருக்கலாம் என்று சொல்கிறாள். பிக்பாஸ் சீசன் 5 ல் அமீர், பாவனிக்கு முத்தம் கொடுத்த விவகாரம் பெரிய பிரச்சனையாக ஓடியது. அதே போல் தற்போது எக்ஸ் லவ்வரான நிரூப்பின் கண் எதிரிலேயே அபிராமியின் இடுப்பை பாலா கிள்ளி உள்ளதாக பெரிய விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.

குறும்படம் போடுங்க பிக்பாஸ்

குறும்படம் போடுங்க பிக்பாஸ்

நிரூப் இப்படி சொல்கிறார் என்றால், தாமரையிடம் பேசும் பாலா, என்ன நடந்தது என்பதை விளக்குகிறார். நான் சாதாரணமாக நின்று கொண்டிருந்த போது அபிராமி பக்கத்தில் வந்து நின்றாள். இதை வைத்து நான் அபிராமியின் இடுப்பை கிள்ளியதாக நிரூப் சொல்லி உள்ளான். இதை அபினய் என்னிடம் சொல்கிறான். பிக்பாஸ் அப்படி ஏதாவது நடந்திருந்தால் தயவு செய்து போட்டுக் காட்டுங்கள் எல்லோருக்கும். என்ன நடந்தது என அனைவருக்கும் தெரியட்டும் என்கிறார். இதனால் பாலா நிஜமாக அபிராமியின் இடுப்பை கிள்ளினாரா, இல்லையா என்ற குழப்பம் அனைவரிடமும் எழுந்துள்ளது.

இதுலயே இவ்வளவு நடக்குதா

இதுலயே இவ்வளவு நடக்குதா

இந்த வீடியோ கிளிப்பிங், அபிராமியை காதலித்த கதையை நிரூப் ஓப்பனாக பேசிய வீடியோ ஆகியன அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. வனிதா சண்டையை தான் ப்ரோமோல காட்டிகிட்டே இருக்காங்க. இது மாதிரி விஷயங்களை எல்லாம் ஏன் காட்ட மாட்டேங்குறாங்க. 24 மணி நேர ஷோவிலேயே மக்களுக்கு தெரியாமல் இவ்வளவு நடக்கிறது என்றால், ஒரு மணி நேரம் காட்டப்படும் ஷோவில் என்னவெல்லாம் நடந்திருக்கும் என கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X