ஒரே நாளில் இரண்டு வைல்கார்டு என்ட்ரி...நோ எவிக்ஷன்...ஆரம்பமே அமர்க்களப்படுத்திய சிம்பு
சென்னை : பிக்பாஸ் அல்டிமேட்டில் சிம்பு வரும் போதே கூட ஒருவரை கூட்டிக் கொண்டு வருவார். அவருடன் முதல் வைல் கார்டு என்ட்ரியாக ஒருவர் வர போகிறார் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் பல சர்ப்ரைஸ் கொடுத்தார் சிம்பு.
பிக்பாஸ் அல்டிமேட்டில் புதிய ஹோஸ்டாக இன்று முதல் களமிறங்கி உள்ளார் சிம்பு. வந்ததுமே இருட்டறையில் அமர்ந்து கொண்டு, போட்டியாளர்களை தனித்தனியாக அழைத்து சர்ப்ரைஸ் கொடுத்தனுப்பினார் சிம்பு. பிறகு மேடைக்கு வந்ததுமே கமல் பற்றி பேசி கைதட்டல் வாங்கிய சிம்பு, ஓப்பனாக ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து அனைவரின் மனதையும் கவர்ந்தார்.

வைல்கார்டு என்ட்ரி இவரா
சிம்பு வரும் போது வைல்கார்டு என்ட்ரி இருக்கும் என கூறி இருந்ததால் யார் அந்த வைல்ட் கார்டு என்ட்ரி என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். சுரேஷ் சக்கரவர்த்தி, ஓவியா, வனிதா விஜயக்குமார், அபிஷேக் ராஜா என பலரின் பெயர்கள் வைல்கார்டு என்ட்ரியாக கூறப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலக்கிய சதீஷ் வைல்கார்டு என்ட்ரியாக வீட்டிற்குள் அனுப்பப்பட்டார். பிக்பாஸ் அல்டிமேட்டில் முந்தைய ஐந்து சீசன்களை சேர்ந்த போட்டியாளர்கள் தான் கலந்து கொள்வார்கள் என கூறப்பட்ட நிலையில், புதிதாக ஒருவர் வைல்கார்டு என்ட்ரியாக அனுப்பப்பட்டார்.

சிம்புவையே கலாய்த்த போட்டியாளர்
வீட்டிற்கு வெளியே சிம்பு குரல் ஒலித்ததால், சிம்பு தான் வீட்டிற்குள் வர போகிறார் என அனைவரும் ஆவலாக எதிர்பார்த்தனர். ஆனால் சிம்பு குரலில் மிமிக்ரி செய்து சதீஷ் தான் வீட்டிற்குள் சென்றார். வீட்டிற்குள் சென்று சிம்புவிடமே அவர் பற்றி பேசிக் காட்டினார். தாமரை, அபிஷேக் போலவே சதீஷ் பேசுகிறார்கள் என்றதும் ஷாக்கான சதீஷ், அண்ணே...இப்போதே அபிஷேக் போல என பதிவு செய்து என்னை வெளியே அனுப்ப பிளான் பண்ணுகிறார் என புகார் கூறினார்.

இரண்டு வைல்கார்டு என்ட்ரியா
ஒருவர் தான் வைல்கார்டு என்ட்ரி என பார்த்தால், சிறிது நேரத்திலேயே சுரேஷ் சக்கரவர்த்தியும் இரண்டாவது வைல் கார்டு என்ட்ரியாக வீட்டிற்குள் அனுப்பப்பட்டார். அவரை கண்டதும் போட்டியாளர்கள் ஜாலியாக வரவேற்றனர். பிறகு இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்றார் சிம்பு. இதனால் போட்டியாளர்கள் சீரியசாக அமர்ந்து, இந்த வாரம் யார் வெளியே போக வாய்ப்பு என சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

சிம்பு ஸ்பெஷல்...நோ எவிக்ஷன்
ஆனால் டபுள் எவிக்ஷன் என்பதை பிக்பாசிடம் பேசி ஒரு எவிக்ஷனாக மாற்றினேன். ஆனால் நான் வந்த முதல் நாள் என்பதால் யாரையும் வெளியே அனுப்ப மனமில்லை. அதனால் இந்த வாரம் நோ எவிக்ஷன். ஆனால் என்னிடம் வாக்குறுதி அளித்தது போல் இந்த வாரம் நடக்கவில்லை என்றால் அடுத்த வாரம் கண்டிப்பாக டபுள் எவிக்ஷன் உண்டு என்றார் சிம்பு.


Click it and Unblock the Notifications











