கட்டிபுரண்டு சண்டை...அபிராமியை அலேக்காக தூக்கும் நிரூப்...என்ன நடக்குது பிக்பாஸ் அல்டிமேட்டில்

சென்னை : மாறி மாறி கட்டிபுரண்டு சண்டை, அபிராமியின் இடுப்பை பிடித்து அலேக்காக தூக்கிக் கொண்டு போகும் நிரூப் என அனைவரையும் அதிர வைக்கும் காட்சிகளுடன் பிக்பாஸ் அல்டிமேட் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

சிம்பு தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் அல்டிமேட் 60 நாட்களை நெருங்கி விட்டது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தமிழில் 24 மணி நேர நிகழ்ச்சியாக ஜனவரி 31 ம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் ஐந்து சீசன்களில் பங்கேற்றவர்களில் இருந்து 14 பேர் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டு, இந்த நிகழ்ச்சி துவங்கியது.

இவங்க கெஸ்ட் தானா

இவங்க கெஸ்ட் தானா

14 போட்டியாளர்களில் வனிதா விஜயக்குமார், சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, சினேகன், தாடி பாலாஜி, அபினய், ஷாரிக், அனிதா சம்பத் ஆகியோர் வெளியேறி உள்ளனர். இதில் வைல்ட்கார்டு என்ட்ரியாக ரம்யா பாண்டியன், சதீஷ், சாண்டி மாஸ்டர், தீனா ஆகியோர் கலந்து கொண்டனர். வைல்ட்கார்டு என்ட்ரியாக வந்த சதீஷ், சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறி உள்ள நிலையில், சாண்டி மாஸ்டர், தீனா ஆகியோர் கெஸ்டாக மட்டுமே வந்து சென்றனர்.

இறுதிக்கட்டத்தில் பிக்பாஸ் அல்டிமேட்

இறுதிக்கட்டத்தில் பிக்பாஸ் அல்டிமேட்

தற்போது நிரூப், பாலா, அபிராமி, தாமரை, ஜுலி, சுருதி, ரம்யா பாண்டியன் ஆகியோர் போட்டியாளர்களாக பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் உள்ளனர். இறுதிக்கட்டத்தை நெருங்கும் இந்த நிகழ்ச்சியின் ஃபினாலே ஏப்ரல் 9 ம் தேதி நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த வாரம் அனைவரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

பணப்பெட்டி வந்துடுச்சு

பணப்பெட்டி வந்துடுச்சு

இந்த நிலையில் வழக்கம் போல் வீட்டிற்குள் பணப்பெட்டி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 5 லட்சம் தொகையுடன் வைக்கப்பட்ட இந்த தொகை 8 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த பெட்டியை இதுவரை யாரும் எடுக்கவில்லை. இந்நிலையில் இன்று, முடிந்தால் தொட்டு பார் என்ற டாஸ்க் வழங்கப்படுகிறது. இதில் குவியலாக போடப்பட்டுள்ள அட்டைகளில் தன்னால் முடிந்த அளவிற்கு எடுத்து வந்து, அதில் இருக்கும் போட்டியாளர்களின் போட்டோவை தனக்கு கொடுக்கப்பட்டுள்ள போர்டில் ஒட்ட வேண்டும்.

அபிராமியை தூக்கிய நிரூப்

அபிராமியை தூக்கிய நிரூப்

இந்த டாஸ்க் இன்று மாலை 4 மணியளவில் நடக்க உள்ளதாம். இதற்கான ப்ரோமோவில் தாமரை, சுருதி, ஜுலி என பலரும் தரையில் கட்டி புரண்டு சண்டை போட்டு, அடித்துக் கொள்கிறார்கள். சுருதி, அபிராமியை தள்ளி விட்டு விளையாடுகிறார். இதில் ஹைலைட்டாக நிரூப், அபிராமியின் இடுப்பை பிடித்து அலேக்காக தூக்கிக் கொண்டு செல்கிறார். நிரூப்பின் முன்னாள் காதலியான அபிராமியின் இடுப்பை பாலா தொட்டதாக, நிரூப்பே ஏற்கனவே பிரச்சனையாக்கினார். இப்போது அவரே அபிராமியின் இடுப்பை பிடித்து தூக்குகிறார்.

என்னடா நடக்குது இங்க

என்னடா நடக்குது இங்க

தாமரையின் காலைபிடித்து தரதரவென இழுத்து செல்கிறார் நிரூப். இந்த காட்சிகளை பார்த்த அனைவரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். என்னடா நடக்குது இங்க. இதெல்லாம் ஃபிசிக்கல் வயலன்ஸ் இல்லையா. பாலா பண்ணினா மட்டும் தான் அது ஃபிசிக்கல் வயலன்சா. இதுக்கெல்லாம் ரெட் கார்டு கிடையாதா. பாலா பண்ணும் போது மட்டும் வில்லன் மியூசிக். இப்போ மட்டும் ஃபன் பீஜிஎம்.,ஆ. எல்லா போட்டியாளர்களிடமும் நேர்மை நடந்துக் கோங்க. இது போன்ற நிகழ்ச்சிகளை எதிர்காலத்தில் ஒளிபரப்பாதீங்க என கண்டபடி திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X