Don't Miss!
- News
கணிக்க முடியாது.. வேண்டாம்! போதும் போதும் என்று முடிவு எடுத்த எடப்பாடி.. புட்டு புட்டு வைத்த புள்ளி
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Automobiles
சுயமாக மாசை கண்டறியும் கருவி உடன் விற்பனைக்கு வந்த ரெனால்ட் கார்கள்... அரசாங்கத்தின் முயற்சியால் கிடைத்த பலன்!
- Technology
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- Sports
அதனால் தான் அவர் கிங் கோலி.. என்னுடைய 10 வயது உனக்கு தான்.. சுப்மன் கில்லை உற்சாகப்படுத்திய கோலி
- Lifestyle
தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?
- Finance
அதானி எண்டர்பிரைசஸ்-க்கு அடுத்த பாதிப்பு.. Dow Jones நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கம்..!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Bigg Boss Ultimate Finale...போட்டியாளர்களை செமயாக கலாய்த்த சிம்பு
சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் ஃபினாலே நிகழ்ச்சியில் சிம்பு, போட்டியாளர்கள் அனைவரையும் செமயாக கலாய்த்துள்ளார் சிம்பு. ஃபினாலே மேடையில் சிம்புவின் இந்த கலகல பேச்சு அனைவரையும் பெரிய அளவில் கவர்ந்துள்ளது.
ஜனவரி 30 ம் தேதி துவங்கி 24 மணி நேர நிகழ்ச்சியாக ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இன்று இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. 14 போட்டியாளர்கள் மற்றும் 2 வைல்டுகார்டு என்ட்ரி னெ மொத்தம் 16 போட்டியாளர்களுடன் நடைபெற்ற இந்த போட்டியை கமல் விலகிய பிறகு சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.
தலைவர் 169 படத்திற்கு எக்ஸ்ட்ரா டைம் கேட்கும் நெல்சன்... சூட்டிங் எப்போ துவங்குதுன்னு பாக்கலாமா!

சிம்புவின் மாஸ் என்ட்ரி
இதன் ஃபினாலே நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் ஆரம்பத்திலேயே சிம்பு, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோவாக வளர்ந்ததை காட்டும் விதமாக டான்ஸ் பெர்ஃபாமன்ஸ் நடைபெற்றது. சிம்பு ஒயிட் அண்ட் ஒயிட் கோட்டில் மாஸ் என்ட்ரி, முந்தைய போட்டியாளர்களின் ராப் வாக் என்ட்ரி அனைவரையும் கவர்ந்தது. போட்டியாளர்கள் அனைவரையும் சிம்பு கலகலவென கலாய்த்து தள்ளினார்.

பழைய வில்லன் மாதிரி இருக்கு
சுரேஷ் சக்கரவர்த்தியிடம், நீங்கள் போட்டுள்ள கோட்டை பார்த்தால் பழைய சினிமாக்களில் வரும் வில்லன் மாதிரி இருக்கு. நீங்கள் கோட் போட்டு வருவீர்கள் என்று தெரிந்தால் நான் மாற்றி இருப்பேன். அபினய், ஷாரிக் ஆகியோர் சிம்பு வருவதற்கு முன்பே வெளியே போனதை நினைத்து வேதனை தெரிவித்தனர். அபிராமியிடம், வெளியே போன பிறகு தெளிவாக பேச ஆரம்பித்து விட்டீர்களே என்றார்.

ரயில்வே ஸ்டேஷன் வாங்குறீங்களா
சுருதி, பணத்தை எண்ணி முடித்து விட்டீர்களா என்றார் சிம்பு. ஆனால் பணம் இன்னும் கைக்கு வரவில்லை. வெறும் பெட்டி மட்டும் தான் கைக்கு வந்தது என்றார் சுருதி. சரி பணம் கைக்கு வந்தது என்ன செய்வீர்கள். எங்க ஏரியாவில் ரயில்வே ஸ்டேஷன் இருக்கு வாங்குறீங்களா. ஆனால் அப்படி வாங்கிய பிறகும் பொட்டியை தூக்கக் கூடாது என கிண்டல் செய்தார்.

ஃபீலிங்ஸ் இல்லையா
வீட்டிற்குள் இருக்கும் ஃபைனலிஸ்ட்களிடம் பேசிய சிம்பு, நீங்க எல்லாம் மனுஷங்களே இல்லை. டாஸ்க் என்றால் இப்படியா விளையாடுவீர்கள். ஒரு பொண்ணு காலை ஒடித்து விட்டீர்களே. ரம்யா, உங்க எக்ஸ் ரேவை சரி பார்த்தேன். நிஜமாக தான் உங்களுக்கு எலும்பு முறிந்துள்ளது என சிம்பு சொன்னதும் ஷாக் ஆகி விட்டார் ரம்யா. பிறகு வீட்டில் எதை மிஸ் செய்கிறீர்கள். படையப்பா படத்தில் சிவாஜி சார் தூணை கட்டிப்பிடித்து அழுவது போல் எந்த ஃபீலிங்சும் இல்லையா என்றார் சிம்பு.

ஃபினாலேவுக்கு வராதவர்கள்
ஃபினாலேவில் முந்தைய போட்டியாளர்களான வனிதா விஜயக்குமார், தாடி பாலாஜி, அனிதா சம்பத், சதீஷ் போன்றோர் கலந்து கொள்ளவில்லை. ஃபினாலேவிற்கு வராத சதீஷ் போன்றோரையும் கலாய்த்தார் சிம்பு. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்த ரசிகர்கள் சிலரிடமும் பேசினார் சிம்பு.