Bigg Boss Ultimate Finale...டாப் 3 வெற்றியாளர்கள் இவங்க தான்... குவியும் வாழ்த்துக்கள்

சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் ஃபினாலேவில் வெற்றிபெற்ற டாப் 3 போட்டியாளர்கள் பற்றிய தகவல் வெளியாகி விட்டதால் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

ஃபைனலுக்கு சென்ற 4 பேர்

ஃபைனலுக்கு சென்ற 4 பேர்

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஜனவரி 30 ம் தேதி துவங்கி 24 மணி நேர நிகழ்ச்சியாக ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வந்தது. 14 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக 72 நாட்களை நிறைவு செய்துள்ளது. இதில் கடைசியாக 4 பேர் ஃபைனலிஸ்டாக தேர்வாகி உள்ளனர். இன்று பிக்பாஸ் அல்டிமேட் ஃபினாலே நடைபெற்றது.

வெளியான வெற்றியாளர்கள் விபரம்

வெளியான வெற்றியாளர்கள் விபரம்

பிக்பாஸ் அல்டிமேட் ஃபினாலேவை சிம்பு தொகுத்து வழங்கினார். இதில் முந்தைய சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்களின் கலை நிகழ்ச்சிகளடன் ஃபினாலே நிகழ்ச்சி துவங்கியது. ஆனால் ஃபினாலே துவங்குவதற்கு முன்பே வெற்றியாளர்கள் பற்றிய விபரங்கள் வெளியாகி விட்டது.

இவங்க தான் டாப் 3 வெற்றியாளர்கள்

இவங்க தான் டாப் 3 வெற்றியாளர்கள்

ஃபினாலேவிற்கான ஷுட்டிங் நேற்று மற்றும் இன்று நடைபெற்றது. பாலாஜி முருகதாஸ், நிரூப், தாமரை, ரம்யா பாண்டியன் ஆகிய 4 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வாகினர். இவர்களில் பாலாஜி முருகதாஸ் டைட்டில் வென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரன்னர் அப் பட்டத்தை நிரூப் வென்றுள்ளார். மூன்றாவது இடத்தை ரம்யா பாண்டியன் வென்றுள்ளதாக கூறப்படுகிறது.

டிரெண்டிங்கில் கலக்கும் ஹேஷ்டேக்குகள்

டிரெண்டிங்கில் கலக்கும் ஹேஷ்டேக்குகள்

பிக்பாஸ் அல்டிமேட் வெற்றியாளர்களுக்கு சோஷியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. BBUlimateWinnerBala, RamyaPandian ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டர் டிரெண்டிங்கில் டாப் இடங்களை பிடித்துள்ளன. கடைசி சில நாட்களில் நடந்த பிசிக்கல் டாஸ்கில் ரம்யா பாண்டியனுக்கு காலில் அடிபட்டு நடக்க முடியாமல் போனது. இருந்தாலும் அவர் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றார்.

வெற்றியாளர்களுக்கு குவியும் வாழ்த்துக்கள்

வெற்றியாளர்களுக்கு குவியும் வாழ்த்துக்கள்

வைல்டு கார்டு என்ட்ரியாக வந்து, வீல் சேரில் அமர்ந்தபடி டாப் 3 இடங்களில் இடம்பிடித்ததை குறிப்பிட்டு ஏராளமான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பாலா இந்த வெற்றிக்கு தகுதியானவர். இது பாலாவுக்கு மிகப் பெரிய வெற்றி. 24 மணி நேரம் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட்டில் மக்களின் மனங்களை வென்று, அதிக ஓட்டுக்களை பெற்று பிக்பாஸ் அல்டிமேட் டைட்டிலை வென்றுள்ளார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X