க்ளைமாக்சை நெருங்கும் பிக்பாஸ் அல்டிமேட்...ஃபினாலே எப்போ தெரியுமா ?

சென்னை : ஓடிடி வெர்சனாக 24 மணி நேரமும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதன் ஃபினாலே நடைபெறும் தேதி பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிக்பாசின் ஐந்து சீசன்களும் நிறைவடைந்த நிலையில், ஐந்து சீசன்களிலும் பங்கேற்ற போட்டியாளர்களை வைத்து, பிக்பாஸ் அல்டிமேட் என்ற ஓடிடி வெர்சன் துவங்கப்பட்டது. இது 24 மணி நேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. பிக்பாஸ் ஐந்து சீசன்களிலும் பங்கேற்ற 14 பேர் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

வெளியேறிய கமல்

வெளியேறிய கமல்

பிக்பாஸ் ஐந்து சீசன்களை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் ஜனவரி 31 ம் தேதி துவங்கி கமல் தான் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் சினிமா ஷுட்டிங் வேலைகள் இருப்பதாக கூறி, பாதியிலேயே இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பிறகு அவருக்கு பதில் சிம்பு, இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

வெளியேறிய போட்டியாளர்கள்

வெளியேறிய போட்டியாளர்கள்

57 நாட்களாக நடைபெற்று வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா விஜயக்குமார், சுரேஷ் சக்கரவர்த்தி, சினேகன், தாடி பாலாஜி, அபிராமி, தாமரை, நிரூப், பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஜுலி, சுருதி, சுஜா வருணி, ஷாரிக், அபினய் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். சதீஷ், ரம்யா பாண்டியன், சாண்டி மாஸ்டர், தீனா ஆகியோர் வைல்ட் கார்டு என்ட்ரியாக கலந்து கொண்டனர். இதுவரை வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, சினேகன், தாடி பாலாஜி, அனிதா, சுஜா வருணி, ஷாரிக், அபினய், சதீஷ் ஆகியோர் வெளியேறி உள்ளனர்.

டைட்டில் வெல்ல போவது யார்

டைட்டில் வெல்ல போவது யார்

இந்த நிலையில் இன்று நடைபெற்ற நாமினேஷனில் அனைவரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளதாக பிக்பாஸ் அறிவித்துள்ளார். தற்போது வரை 9 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ளனர். இவர்களின் யாரெல்லாம் ஃபைனல்ஸ் செல்ல போகிறார்கள். இவர்களில் யார் பிக்பாஸ் அல்டிமேட் முதல் சீசனின் டைட்டிலை வெல்ல போகிறார் என்பது தெரியவில்லை.

ஃபினாலே எப்போ தெரியுமா

ஃபினாலே எப்போ தெரியுமா

இந்த சமயத்தில் பிக்பாஸ் அல்டிமேட் ஃபினாலே பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. ஏப்ரல் 9 ம் தேதி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் ஃபினாலே நடக்க போகிறதாம். இன்னும் 11 நாட்களே மீதம் இருப்பதால் ஆட்டம் சூடுபிடிக்க துவங்கி உள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரிக்க துவங்கி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X