என்னது டிரெண்டிங் பிளேயரா...வனிதாவை காப்பாற்ற நல்லா தான் வேலை பாக்குறீங்க
சென்னை : பிக்பாஸ் அல்டிமேட்டில் டிரெண்டிங் பிளேயர் என வனிதாவை பிக்பாஸ் அறிவித்துள்ளதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஓட்டு சதவீதத்தில் கடைசியில் இருப்பவரை காப்பாற்ற இப்படி ஒரு வேலையா என கேட்டு வருகின்றனர்.
48 நாட்களைக் கொண்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஒரு வாரம் கடந்து விட்டது. முதல் வாரத்தில் நாமினேஷன் மூலம் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேற்றப்பட்டுள்ளார். அபினய் அல்லது வனிதா விஜயக்குமார் தான் குறைவான ஓட்டுக்கள் பெற்றுள்ளனர். அவர்களில் யார் வெளியேறுவார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், யாரும் எதிர்பாராத வகையில் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேற்றப்பட்டார்.

வேற லெவல் ஆட்டம் தான்
பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள் பட்டியலில் வனிதா விஜயக்குமாரின் பெயரை பார்த்ததும், ஆட்டம் செமயா இருக்கும் என அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் அனைவரும் எதிர்பார்த்ததை விட கூடுதலாகவே அலம்பல்கள் செய்து வருகிறார் வனிதா. வந்த முதல் நாளே இந்த வீட்டிற்கு நான் தான் ஓனர். யாராவது காதலித்தா கொன்னுடுவேன் என சொல்லி ஆட்டத்தை ஆரம்பித்தார். பிறகு காஃபி கேட்டு அவர் அடித்த கூத்து, வாரம் முழுவதும் பற்றி எரிந்தது. டாஸ்க்கின் போதும் மற்ற போட்டியாளர்களுடன் சண்டை, வாக்கவாததத்தில் ஈடுபட்டார்.

அது என்ன வனிதாவிற்கு மட்டும்
வனிதா விஜயக்குமாரின் செயலால் ரசிகர்கள் மட்டுமின்றி, மற்ற போட்டியாளர்களும் கடுப்பாகினர். ஆனால் பிக்பாஸ் ஆரம்பம் முதலே வனிதாவை சப்போர்ட் செய்வது போல் நடந்து கொண்டார். வனிதாவிற்கு மட்டும் கமல் தேன் கொடுத்து அனுப்பியது, 14 பேரில் வனிதாவை மட்டும் கூப்பிட்டு ஷாரிக்கிற்கு முடி சூட சொன்னது, நாமினேஷனின் போது புதிய கன்ஃபசன் ரூம் செட் அப் எப்படி இருக்கிறது என வனிதாவிடம் மட்டும் கருத்து கேட்டது என பலவும், அது என்ன வனிதாவிற்கு மட்டும் என கேட்க வைத்தது.

வனிதா டிரெண்டிங் பிளேயர்
முதல் வாரத்திலேயே வனிதாவிற்கு மக்களின் ஓட்டு குறைவாக தான் இருந்தது. ஆனால் ஏதேதோ செய்து அவரை காப்பாற்றி விட்டனர். இப்போது இது போதாது என்று, இந்த வார டிரெண்டிங் பிளேயராக வனிதாவை அறிவித்துள்ளார் பிக்பாஸ். டிரெண்டிங் பிளேயர் என்பதால் அவரை யாரும் நாமினேட் செய்ய முடியாதாம். இந்த வாரமும் அவரை காப்பாற்ற பிக்பாசில் வேலை நடக்கிறது என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

மக்கள் எதற்கு ஓட்டு போடனும்
வீட்டில் உள்ள மற்ற ஹவுஸ்மேட்கள் தாமரையை டிரெண்டிங் பிளேயராக தேர்வு செய்யலாம் என நினைத்துக் கொண்டிருக்கையில் பிக்பாஸ் வனிதா பெயரை கூறி உள்ளார். இது இந்த வாரம் மட்டும் இல்லை. இனி ஒவ்வொரு வாரமும் டிரெண்டிங் பிளேயர் தேர்வு செய்யப்பட்டு, அவர் எவிக்ஷனில் இருந்து காப்பாற்றப்படுவாராம். இதை கேட்டதும் மக்கள் கடுப்பாகி விட்டனர். அப்போது எதற்காக மக்களை ஓட்டு போட சொல்கிறீர்கள். குறைந்த ஓட்டுடன் கடைசி இடத்தில் இருப்பவரை இப்படி டிரெண்டிங் பிளேயர் என சொல்லி காப்பாற்றினால், அவரை வெளியேற்ற மக்கள் அளிக்கும் ஓட்டிற்கு என்ன மரியாதை என கேட்டு வருகின்றனர்.

வனிதாவை காப்பாற்றும் வேலையா
ஆரம்பம் முதலே வனிதாவிற்கு மட்டும் ஃபேவரிசம் நடக்கிறது. இப்போது அவரை காப்பாற்ற நல்லா வேலை செய்றீங்க. என்ன செய்தாலும் வனிதாவை மட்டும் வெளியேற்ற முடியாது என ஓப்பனாக அறிவித்து போக வேண்டியது தானே. இல்லையென்றால் அவர் தான் வின்னர் என அறிவித்து இப்போதே கோப்பையை கொடுத்து விடுங்களேன் என கோபமாகவும் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











