அதென்ன வனிதாவிற்கு மட்டும்...பிக்பாசை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
சென்னை : அதென்னா வனிதாவிற்கு மட்டும் ஸ்பெஷல்...ஃபேவரிசம் காட்டுறிங்களா ? என பிக்பாஸ் அல்டிமேட் துவங்கிய இரண்டாவது நாளே பிக்பாஸை கண்டபடி கேள்வி கேட்டு வறுத்தெடுத்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
ஜனவரி 30ம் தேதி துவங்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இன்று தான் இரண்டாவது நாளை எட்டி உள்ளது. அதற்குள் பலவிதமான சர்ச்சைகளை எதிர்கொள்ள துவங்கி உள்ளது. ரசிகர்கள் பல சந்தேகங்கள், கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். அதிலும் வனிதா விஜயக்குமார் நடந்து கொள்வது சக போட்டியாளர்கள், ரசிகர்கள் என அனைவரையும் எரிச்சலடைய வைத்துள்ளது. ஆனால் அவரை மட்டும் பிக்பாஸ் ஸ்பெஷலாக நடத்துவதாக நெட்டிசன்கள் கேள்விகளால் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

காஃபி கேட்டு அடம்பிடித்த வனிதா
பிக்பாஸ் அல்டிமேட்டில் வனிதா விஜயக்குமார் பங்கேற்கிறார் என்ற தகவல் வெளியானதுமே என்னவெல்லாம் நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்களோ, அவற்றையெல்லாம் மிக சிறப்பாக செய்து வருகிறார் வனிதா. காஃபிக்காக இன்று காலை வீட்டையே ரெண்டாக்கி, டீ இல்லாமல் சாகட்டும் என பேசியதை பலர் சோஷியல் மீடியாவில் திட்டி தீர்க்கிறார்கள். வீட்டில் இருப்பதை போல் இருக்க வேண்டுமானால் இவர் எதற்காக பிக்பாஸிற்கு வர வேண்டும் என கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதே சமயம் சிலர் அதை பாராட்டவும் செய்துள்ளனர்.

அதென்ன வனிதாவிற்கு மட்டும்
வனிதா செய்யும் அலப்பறைகள் ஒரு புறம் இருந்தாலும், ஆரம்பம் முதலே வனிதாவிற்கு ஃபேவரிசம் காட்டுவதை போல் நடக்கும் ஒவ்வொன்றையும் வரிசைப்படுத்தி கேள்விகளை எழுப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள். நிகழ்ச்சியில் முதல் ஆளாக வனிதாவை அறிமுகம் செய்து, முதல் ஆளாக வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்கள் ஓகே. அதென்ன பரிசு கொடுத்தனுப்பியதில் மற்றவர்களுக்கு மட்டும் மிளகு, கீரை, அரிசி, வெங்காயம், மஞ்சள், உப்பு, வாழைக்காய், முருங்கைக்காய். ஆனால் வனிதாவிற்கு மட்டும் இனிப்பான தேன்.

கருத்து கேட்ட பிக்பாஸ்
அது மட்டுமா, ஷாரிக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த பிக்பாஸ், மற்ற அனைவரையும் விட்டு விட்டு வனிதாவை மட்டும் அழைத்து, ஷாரிக்கிற்கு முடி சூட சொன்னார். அதே போல், நாமினேஷனின் போது, கன்ஃபஷன் ரூமிற்குள் சென்றதும் அனைவருமே செட்அப்பை, வியந்து பாராட்டினார்கள். ஆனால் மற்றவர்களின் கமெண்ட்டுகளை கண்டுகொள்ளாமல் நேரடியாக, நாமினேட் செய்யப்படும் அந்த இரண்டு பேர் யார் என கேட்டார் பிக்பாஸ். ஆனால் வனிதாவிடம் மட்டும், செட்அப் எப்படி இருக்கு என கருத்து கேட்டார். இதை பார்த்ததுமே நெட்டிசன்கள், அதென்ன வனிதாவிற்கு மட்டும் என கேட்க துவங்கி விட்டனர்.

ப்ரோமோனாலே வனிதா தானா
மற்றொரு விஷயமாக பிக்பாஸ் அல்டிமேட் துவங்கியது முதல், கடந்த இரண்டு நாட்களாக காட்டப்படும் ப்ரோமோக்கள் அனைத்திலும் வனிதாவின் சண்டைகள், அடாவடிகள் மட்டும் தான் இருக்கிறது. மற்றவர்கள் யாரும் ப்ரோமோவில் இடம்பெறவில்லை. இதை பார்த்த நெட்டிசன்கள், அவர் கன்டென்ட் கொடுக்கிறார் என்பதற்காக அவரை மட்டுமே தான் காட்டுவீர்களா...வேறு யாருமே உங்க கண்ணுக்கு தெரியவில்லையா. அவர் என்ன செய்தாலும் அவரை வெளியே அனுப்ப மாட்டார்கள் என அவருக்கே நன்றாக தெரியும். அதனால் தான் வனிதா ஓவராக போய் கொண்டிருக்கிறார்.
Recommended Video

ஃபேவரிசம் காட்டுகிறாரா பிக்பாஸ்
வனிதாவிற்கு மட்டும் ஏன் பிக்பாஸ் ஃபேவரிசம் காட்டுகிறார். சினேகன், தாடி பாலாஜியுடன் சேர்ந்து காமெடி பண்ண முயற்சி வருகிறார். அனிதா யாரோடும் ஒட்டாமல் சோகமாக இருந்து வருகிறார். சுருதி, தனது சீசன் ஆட்களான நிரூப், அபினய் போன்றவர்களிடமே அதிகம் பேசுகிறார். மற்றவர்களுடன் இருந்தாலும் அமைதியாகவே இருந்து வருகிறார். இதெல்லாம் ஏன் ப்ரோமோவில் காட்ட மாட்டேன் என்கிறீர்கள். ப்ரோமோனாவே வனிதா தானா, பிக்பாஸ்...நல்லா பண்ணுறீங்க என கேட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











