ஷூ லேஸ் கட்டி ரெடியான சிம்பு.. பிக் பாஸ் அல்டிமேட் ஹோஸ்ட்டாக அதகளம் பண்ண வராரு.. சூப்பர் பிக்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை இனி தொகுத்து வழங்க போவதில்லை என அறிவித்ததை அடுத்து அடுத்த ஹோஸ்ட் யாருப்பா? என்கிற கேள்வி மீண்டும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

ஏற்கனவே கொரோனா காரணமாக கமல் மருத்துவமனையில் இருந்தபோது தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணன் தான் தொகுத்து வழங்குவாரா? என்கிற சந்தேகத்திலேயே வனிதா விஜயகுமார் வீட்டை விட்டு வெளியேறி விட்டார் என பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 5ஐ தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட சிம்பு, பிக் பாஸ் புரமோ ஷூட்டிங்கிற்காக ரெடியாகும் புகைப்படம் ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

நானே தொகுத்து வழங்குவேன்

நானே தொகுத்து வழங்குவேன்

விஜய் டிவியில் ஒளிபரப்பான 5 பிக் பாஸ் சீசன்களையும் தொடர்ந்து தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட்டையும் தானே தொகுத்து வழங்குவேன் என சிவகார்த்திகேயன் அதன் லோகோவை அறிமுகம் செய்யும் போது கூறினார்.

சிறிய இடைவேளை

சிறிய இடைவேளை

ஒடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சொன்னதை போலவே கமல் 3 வாரங்கள் தொகுத்து வழங்கிய நிலையில், இனி தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டேன் என அதிரடியாக அறிவித்தது பிக் பாஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், இது ஒரு சிறிய இடைவேளை தான் என்றும் சீசன் 6 அதாவது விஜய் டிவியில் வெளியாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்குவேன் என்றும் தனது அறிவிப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புது ஹோஸ்ட்

புது ஹோஸ்ட்

கடந்த வாரம் இரண்டு எவிக்‌ஷன்களுடன் சேர்த்து 3வது எவிக்‌ஷன் போல கமலும் டாட்டா காட்டிய நிலையில், அடுத்த ஹோஸ்ட் யார் என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்தது. ரம்யா கிருஷ்ணன் தான் வரப்போகிறார் என எதிர்பார்த்த நிலையில், 5வது சீசனை தொகுத்து வழங்க சிம்புவிடம் விஜய் டிவி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது என ஒரு தகவல் வெளியானதே, அது தற்போது உண்மையாகி உள்ளது.

ஷூ லேஸ் கட்டி ரெடி

ஷூ லேஸ் கட்டி ரெடி

மாநாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் என அடுத்தடுத்து பிசியாகி வரும் நடிகர் சிம்பு, வாரத்தில் ஒரு நாள் தானே அதற்காக ஒதுக்கி பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி விடலாம் என ஷூ லேஸ் கட்டி ரெடியான புகைப்படம் தற்போது இணையத்தில் கசிந்து டிரெண்டாகி வருகிறது.

புதிய புரமோ

புதிய புரமோ

மேலும், சிம்பு புதிய பிக் பாஸ் அல்டிமேட் ஹோஸ்ட்டாக அறிமுகமாகவுள்ள நிலையில், அதற்கான புதிய புரமோ ஷூட்டிங் நடந்துள்ளது. இன்று மாலை அல்லது நாளைக்குள் அந்த புரமோ டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிம்புவின் ஹோஸ்ட்டிங் ஸ்டைல் வேறமாறி இருக்கும் என்பதால், இந்த வார இறுதி நிகழ்ச்சியை பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அந்த பிரச்சனை

அந்த பிரச்சனை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்த சிம்புவுக்கும் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த நடிகர் பப்லுவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், மீண்டும் விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவில் நடிகர் சிம்பு கலந்து கொள்வதே ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை கிளப்பி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X