Don't Miss!
- News
பாடாய்படுத்தும் சிறுநீர் விவகாரம்.. ஏர் இந்தியாவுக்கு மீண்டும் ரூ.10 லட்சம் ஃபைன்.. ஓ இதுக்கு தானா?
- Finance
Budget 2023: பட்ஜெட்டில் இப்படி ஒரு சர்பிரைஸ் கிடைக்குமா.. தங்கம் இறக்குமதியாளர்களுக்கு வாய்ப்பு?
- Sports
பந்துவீச்சில் மாற்றம் செய்தேன்.. இரட்டிப்பாக உழைப்பதில் மகிழ்ச்சி.. டி20 தொடருக்கு ரெடி - ஹர்திக்
- Automobiles
டொயோட்டாவுக்கு ஏழரை சனி! காரை நம்பி வாங்கியவர்கள் அதிர்ச்சி! பிரச்னைக்கு மேல பிரச்னையா வந்துகிட்டு இருக்கு!
- Lifestyle
உங்க சருமம் பளபளன்னு ஜொலிக்கவும் முடி நீளமா வளரவும் பப்பாளியை எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
போட்டியாளர்கள் தான் பழசு.. ஆனால், அவர்கள் வேகம் புதிது.. வியூகம் புதிது.. யார் அந்த 14 பேர்?
சென்னை: இதுவரை வெறும் 7 போட்டியாளர்களுக்கு மட்டுமே கெஸ்சிங் புரமோ மற்றும் அறிமுக புரமோ வெளியாகி உள்ளது.
ஆனால், இன்று பிக் பாஸ் அல்டிமேட் கிராண்ட் லாஞ்ச் ஆரம்பமாகவே போகிறது. புரமோ போட்டு அறிமுகப்படுத்தாத சிலரையும் தற்போது வெளியாகி உள்ள புதிய புரமோவில் காட்டி உள்ளனர்.
ஆனால், இன்னமும் சிலரை சீக்ரெட்டாக வைத்துள்ளனர். இன்றைய கிராண்ட் லாஞ்சில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் என்ட்ரி ஆகப் போகும் அந்த 14 பேர் யார் அவர்களின் பலம் என்ன என்று பார்த்து விடுவோம்.
அந்த மலையாள நடிகை அப்படி கவர்ச்சி காட்ட அதுதான் காரணமா? அதுக்காக என்னலாம் பண்ண வேண்டியிருக்கு!

புதிய புரமோ
இன்று மாலை 6.30 மணிக்கு விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி ஆரம்பித்து வைக்க உள்ளார். அது தொடர்பாக காலை ஒரு புரமோ வெளியான நிலையில், தற்போது மற்றுமொரு புரமோவும் வெளியாகி உள்ளது. டிசர்ட்டில் கமல் செம ஹேண்ட்சமாக வழக்கம் போல கெத்து காட்டுகிறார்.

மொத்தம் 14 பேர்
முதல் சீசனில் இருந்து சினேகன், சுஜா வருணி மற்றும் ஜூலி உள்ளிட்ட 3வர் பங்கேற்றுள்ளனர். இரண்டாவது சீசனில் இருந்து ஷாரிக் மற்றும் தாடி பாலாஜி நுழைகின்றனர். மூன்றாவது சீசனில் இருந்து வனிதா விஜயகுமார், அபிராமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 4வது சீசனில் இருந்து பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்கவர்த்தி, அனிதா சம்பத் பங்கேற்கின்றனர். 5வது சீசனில் இருந்து அபிநய், சுருதி, நிரூப் மற்றும் தாமரை செல்வி பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஓவியா வைல்டு கார்டா?
ஆரம்பத்தில் மொத்தம் 16 பேர் என அறிவித்திருந்த நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வெறும் 14 பேர் மட்டுமே கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், இருவர் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓவியா மற்றும் தர்ஷன் வைல்டு கார்டு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் வருவார்கள் என்றும் கூறுகின்றனர். ஆனால், ஓவியா புதிதாக கடைசி நேரத்தில் படம் ஒன்றில் கமிட் ஆனதால் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

எல்லாம் பழைய பீஸ்
போட்டியாளர்கள் அனைவரும் பழைய போட்டியாளர்களாக இருந்தாலும் அவர்களது வேகம் புதிது, வியூகம் புதிது என கமல் வழக்கம் போல பில்டப் கொடுக்க ஆரம்பித்து விட்டார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ஓவியா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா, லாஸ்லியா, ஷிவானி, ரம்யா பாண்டியன், பாவனி போன்ற இளைஞர்களை மயக்கும் போட்டியாளர்கள் ஒருவரும் இந்த சீசனில் இல்லையே? என்றும் அப்செட் ஆகி வருகின்றனர் ஒடிடியை அதிகம் பார்க்கும் இளைஞர்கள்.

சுருதிக்கு வாய்ப்பு
தாமரையின் காயினை திருடிய காரணத்தினால் திடீரென வெளியேற்றப்பட்ட சுருதி இந்த பிக் பாஸ் அல்டிமேட்டில் பங்கேற்றால் இளைஞர்களை கவர அவருக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளதாகவும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். மற்றபடி ஓவியா அல்லது யாராவது ஒரு இளம் போட்டியாளரை உள்ளே அனுப்பினால் தான் ஷோ இண்ட்ரஸ்டிங்காக இருக்கும் என்றும் இல்லையென்றால் சீக்கிரம் போரடித்து விடும் என்றும் கலாய்த்து வருகின்றனர்.

இரண்டு ரன்னர் அப்
சினேகன் மற்றும் பாலாஜி முருகதாஸ் என இரு ரன்னர் அப் இந்த பிக் பாஸ் அல்டிமேட்டில் உள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த சீசனை ஈசியாக வெல்லும் யுக்தியுடன் இவர்கள் களமிறங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது. ஒரு மணி நேர ஷோவிலேயே சரியான கன்டென்ட் இல்லாமல் 5வது சீசன் திக்குமுக்காடிய நிலையில், பிக் பாஸ் அல்டிமேட்டில் மக்களை கவரப் போவது யார்? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.