விட்டதை பிடிக்க வந்திருக்கேன்... ஸ்டையிலாக என்ட்ரி கொடுத்த நிரூப்
சென்னை : ஒரு சின்ன விஷயத்தில் கடந்த முறை விட்டதை தற்போது மீண்டும் பிடிக்க வந்திருக்கிறேன் என ஓப்பனாக சொல்லி, பிக்பாஸ் அல்டிமேட்டில் ஸ்டைல் லுக்குடன் என்ட்ரி கொடுத்துள்ளார் நிரூப் நந்தகுமார்.
ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்புடன் பிக்பாஸ் ஓடிடி வெர்சனான பிக்பாஸ் அல்டிமேட் பிரம்மாண்டமாக துவங்கப்பட்டுள்ளது. எதற்காக பிக்பாஸ் அல்டிமேட், இதை எதற்காக தான் தொகுத்து வழங்குகிறேன் என்ற விளக்கத்துடன் போட்டியாளர்களை அறிமுகம் செய்து வைத்தார் கமல். முதல் போட்டியாளராக வனிதா விஜயக்குமார் மாஸான என்ட்ரி கொடுத்தார்.

போட்டோ கேட்கும் ரசிகர்கள்
வனிதா விஜயக்குமாரை தொடர்ந்து இரண்டாவது போட்டியாளராக பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர் நிரூப் நந்தக்குமார் வந்தார். அவர் வந்ததுமே கமல், தம்பியிடம் பேசினீர்களா? என்பதை தான் முதல் கேள்வியாக கேட்டார். அதற்கு பதிலளித்த நிரூப், பேசினேன் சார். சோஷியல் மீடியாவில் அனைவரும் போட்டோ போட சொல்லி கேட்கிறார்கள். எனக்கு அன்பை வெளிப்படுத்த தெரியாது சார். நான் பேச வேண்டும் என்று சொன்னதை கேட்டு அவன் அழுதிருக்கிறான் என்றார்.

எந்த பிளானும் இல்லை
மனதில் அன்பு நிறைய இருக்கு. அது வீட்டில் உள்ளவர்களுக்கும் தெரியும். முடியை தானமாக கொடுத்தது அவர்களிடம் போய் சேர்ந்து விட்டது. போன முறையும் யுக்தி என எதுவும் இல்லை சார். நிரூப்பிற்கு என்ன இன்புட் கொடுத்தால், அவுட் புட் என்ன வரும் என்பதை காட்டினேன். நான் எதையும் பிளான் பண்ணவில்லை. இப்பவும் பிளான் எதுவும் இல்லை. வரப் போகிறவர்கள் அனைவரும் பழைய போட்டியாளர்கள் தான் என்றார்.

விட்டதை பிடிக்க போகிறேன்
ஏவியில் பேசிய நிரூப், தோல்வி தான் நிறைய கற்றுக் கொடுக்கும். நான் கடந்த முறை தோற்று போகவில்லை. நான் விளையாடியது சரியா என தெரியாது. நீங்க நிறைய குறிப்புக்கள் கொடுத்திருக்கிறீர்கள். அதோடு தற்போது வீட்டிற்குள் போக போகிறேன். போன முறை சிறிய வித்தியாசத்தில் வெற்றியை தவற விட்டேன். விட்ட இடத்தில் பிடிக்க இந்த முறை புதிய கனவுகளுடன் உள்ளே செல்ல போகிறேன் என்றார். அவருக்கு பரிசாக மிளகை கொடுத்து அனுப்பினார் கமல்.

யாஷிகா பற்றி பேசவாரா
வீட்டிற்குள் போன நிரூப்பின் உயரத்தை பார்த்து ஆச்சரியப்பட்டார் வனிதா. பிறகு அபிராமியிடம் பேசும் வனிதா, வீட்டிற்குள் யாராவது காதலித்தால் பிச்சுடுவேன் என்றார். அதற்கு அபிராமி, அதில் இன்ட்ரஸ்ட் இல்லை என்றார். அப்போது அங்கு நடந்து கொண்டிருந்த நிரூப், வாய்ப்பே இல்லை என கோபமாக சொன்னார். சமீபத்தில் தான் யாஷிகாவுடன் பிரேக் அப் ஆனதாக சொல்லி இருந்த நிரூப், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் அவரை பற்றி பேசுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











