Don't Miss!
- Finance
மத்திய பட்ஜெட் 2023: நிறையத் தண்ணீர் குடிங்க.. பட்ஜெட் போர் அடிக்கலாம்..!
- News
இந்தியாவின் 'கனவு பட்ஜெட்' என அழைக்கப்பட்ட 1997-ம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்..ஏன் தெரியுமா?
- Technology
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- Automobiles
ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிக் பாஸ் அல்டிமேட்: முதல் சீசனில் இருந்து ஓவியா, சினேகன் எல்லாம் கன்ஃபார்மா வராங்களாம்!
சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக போகிறது.
பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில் இருந்து 5வது சீசன் வரை ஒவ்வொரு சீசனில் இருந்து பிரபல போட்டியாளர்கள் இதில் கலந்து கொள்ளப் போகின்றனர்.
முதல் சீசனில் இருந்து யாரெல்லாம் கன்ஃபார்மா வராங்க என்பது தொடர்பான லிஸ்ட் தற்போது கசிந்துள்ளது.
ஆரம்பமே
ஷிவானி
நாராயணனுக்கு
செம
’பம்பர்’
தான்
போல..
8
தோட்டாக்கள்
பட
ஹீரோவுடன்
ஜோடி
சேர்ந்துட்டாரு!

என்னது 24 மணி நேரமா?
பிக் பாஸ் அல்டிமேட் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வருகிறது என்ற உடனே சந்தோஷப்பட்ட ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்த ஒரு வார்த்தை கமல் சொன்ன அந்த 24 மணி நேர நேரலை ஒளிபரப்பு தான். எப்படி 24 மணி நேரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க முடியும் என ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர்.

கன்டென்ட் இருக்குமா
சும்மா ஒரு மணி நேரம் போடும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே கன்டென்ட் இல்லாமல் பலரும் மிக்சர் சாப்பிடும் காட்சிகள் மட்டுமே ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், 24 மணி நேரம் பிக் பாஸ் அல்டிமேட் என்று போடுவதற்கு பதில் அறுவை என்றே போடலாம் என நெட்டிசன்கள் இப்பவே கலாய்க்க தொடங்கி விட்டனர்.

பழைய பீஸ்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரையில் பிரபலத்தின் நிஜ முகத்தை பார்ப்பதாகவே ரசிகர்கள் நினைத்துக் கொண்டு அந்த நிகழ்ச்சியை ரசித்துப் பார்க்க ஒரு வாய்ப்பு இருக்கு. ஆனால், பிக் பாஸ் அல்டிமேட்டில் எல்லாம் பழைய பீஸ்களாக வந்து இறங்கினால் புதுமையான சுவாரஸ்யம் ஏதும் இருக்காது என்றும் ரசிகர்கள் ஏற்கனவே தங்களுக்கு பிடித்தவர்களுக்கே ஆர்மி அமைத்துக் கொண்டு ஓட்டுப் போட்டு வருவார்கள் என்றும் கூறுகின்றனர்.

ஒரு மணி நேர ஹைலைட்ஸ்
பிக் பாஸ் போட்டியாளர்கள் படுத்து தூங்குவது, பல் துலக்குவது, பாத்ரூம் போவது எல்லாம் பார்க்க ரசிகர்களுக்கு நேரமிருக்காது என்பது தெரிந்தே பிக் பாஸ் நிகழ்ச்சியை போல இதிலும் பிக் பாஸ் ஹைலைட்ஸ் என தினமும் ஒரு மணி நேர ஹைலைட்ஸ் நிகழ்ச்சியும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. அதை வைத்தே நிகழ்ச்சி நகரும் என்றும் இறுதி வாரத்தில் கமல் நிகழ்ச்சியும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓவியா கன்ஃபார்ம்
பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ஓவியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் ஆர்மி அமைத்தனர். அவர் தான் அந்த சீசனை வெல்வார் என எதிர்பார்த்த நிலையில் சில பல சித்து வேலைகளை செய்து அவரை வெளியே அனுப்பி விட்டனர். இந்நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஓவியா கலந்து கொள்ளப் போவது கன்ஃபார்ம் ஆகி உள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

கட்டிப்பிடி வைத்தியர்
தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சையமில்லாத ஷோவாக முதல் சீசன் இருந்த நிலையில், சினேகன் சக போட்டியாளர்களை கட்டிப்பிடித்ததை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு கட்டிப்பிடி வைத்தியர் என பட்டமே கொடுத்தனர். ஆனால், இந்த சீசனில் பிரியங்கா கட்டிப்பிடித்ததை எல்லாம் பார்த்த ரசிகர்கள் அது ஒரு பெரிய விஷயமே இல்லை என உணர்ந்து இருப்பார்கள்.

இவங்களும் வராங்களாம்
முதல் சீசனில் இருந்து ஓவியா, சினேகன் மட்டுமில்லை ஜூலி, சுஜா வருணி மற்றும் சுவர் ஏறி குதித்து ஓட முயன்ற பரணி என 5 போட்டியாளர்கள் இடம்பெறுவதாக உறுதியான தகவல்கள் கசிந்துள்ளன. இதே போல சீசன் 2,3,4 மற்றும் 5ல் இருந்து கணிசமான போட்டியாளர்கள் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வனிதா அக்கா வராங்க!
Recommended Video

மீண்டும் பாவனி
மற்றும் அபிநய் போய் மீண்டும் பாவனி என்று ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொள்ளப் போகிறாராம் பாவனி ரெட்டி. அபிநய், அமீர் என ஏகப்பட்ட காதல் கிசுகிசுக்கள் பிக் பாஸ் வீட்டில் டோட்டல் டேமேஜ் பண்ணியும் பாவனி மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட்டுக்கு அழ வரப் போறாங்களா? என ரசிகர்கள் பங்கம் பண்ணி வருகின்றனர்.