Don't Miss!
- News
ஈரோடு கிழக்கு தேர்தல்! ஓபிஎஸ் பணிமனையில் ஆள் உயர மோடி படம்.. எடப்பாடி பணிமனையில் பாஜக கொடி கூட இல்லை
- Sports
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவது எப்போது? ஹர்திக் பாண்டியா பளிச் பதில்..குறையை நிவர்த்தி செய்வாரா
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Automobiles
சுயமாக மாசை கண்டறியும் கருவி உடன் விற்பனைக்கு வந்த ரெனால்ட் கார்கள்... அரசாங்கத்தின் முயற்சியால் கிடைத்த பலன்!
- Technology
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- Finance
அதானி எண்டர்பிரைசஸ்-க்கு அடுத்த பாதிப்பு.. Dow Jones நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கம்..!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிக்பாஸ் அல்டிமேட்...ரம்யா பாண்டியன் கால் முறிவு...என்ன நடந்தது?
சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நடிகை ரம்யா பாண்டியனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பதறிப் போய் ஏன், என்னாச்சு, என்ன பிரச்சனை நடந்தது என கேட்டு வருகின்றனர்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. ஏப்ரல் 9 ம் தேதி ஃபினாலே நடைபெற உள்ளதால் ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். ஃபினாலே வாரத்தில் முதல் ஆளாக அனிதா சம்பத், ஷாரிக் ஆகியோர் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து தாடி பாலாஜி, அபினய் ஆகியோர் வந்துள்ளனர்.
புஷ்பா 2விலும் சமந்தா குத்தாட்டம் போடப்போறாராம்.. அப்போ வேறலெவல் பார்ட்டி டான்ஸ் இருக்கப் போகுது!

ரூல்ஸ் மீறிய போட்டியாளர்கள்
இதில் டாஸ்க்கின் போது ரம்யா பாண்டியனுக்கு வலது காலில் எலும்புமுறிவு ஏற்பட்டது. இதனால் நாள் முழுவதும் அவர் படுத்த படுக்கையாகவே இருந்தார். இந்த டாஸ்க்கில் பாலா மற்றும் நிரூப் தலா ஒவ்வொரு டாஸ்க்குகளில் வெற்றி பெற்றுள்ளனர். நேற்று, அனிதா, நிரூப், ஷாரிக் மூவரும் டிரெண்டிங் பிளாயருக்காக ஒதுக்கப்பட்ட ரெஸ்டிரிக்டெட் ஏரியாவிற்குள் குதித்து சென்றனர்.

ரம்யா பாண்டியனை எச்சரித்த பிக்பாஸ்
அங்குள்ள வாட்டர் பெட்டில் குதித்தனர். விதிகளை மீற வேண்டாம் என ரம்யா பாண்டியன் அவர்களுக்கு அட்வைஸ் செய்தார். ஆனால் அவர்கள் கட்டாயப்படுத்தி ரம்யாவையும் உள்ளே தூக்கி போட்டனர். இதற்காக அவர்களை கண்டித்த பிக்பாஸ், ரம்யா பாண்டியனை கன்ஃபஷன் ரூமிற்கு அழைத்து, விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க சொல்லி எச்சரித்தார்.

பிசிக்கல் டாஸ்க்
தொடர்ந்து போட்டியாளர்களுக்கு பிசிக்கல் டாஸ்க் வழங்கப்பட்டது. கயிற்றால் போடப்பட்ட வட்டத்திற்குள் போட்டியாளர்கள் நிற்க வேண்டும். கார்டன் ஏரியாவின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட தங்களின் போட்டோக்களை தேடி எடுத்து, அங்கு வைக்கப்பட்டுள்ள டேபிளில் அடுக்க வேண்டும் என்றார். இதில் நிரூப், பாலா இடையே கடும் போட்டி நடைபெற்றது. தாமரைச் செல்வி காயமின்றி கீழே விழுந்ததால் அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்படார்.

ரம்யா பாண்டியனுக்கு காயம்
ஆனால் ரம்யா பாண்டியன் கீழே விழுந்த போது, அவரின் கால் மீது ஜுலி நிலை தடுமாறி விழுந்ததால் ரம்யாவின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக மெடிக்கல் ரூமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுஅவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ரம்யாவால் தொடர்ந்து பங்கேற்க முடியவில்லை. இந்த டாஸ்கில் பாலா வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்ற நிரூப்
பிறகு செஸ் போர்டின் மீது போட்டியாளர்கள் செஸ் காயின் போல் நிற்க வேண்டும். இதில் ரம்யா பாண்டியனுக்கு காலில் அடிபட்டதால், அவருக்கு பதில் அனிதா பங்கேற்றார். இந்த டாஸ்கில் நிரூப், அனிதாவை வெளியேற்றி,வெற்றி பெற்றார்.