Don't Miss!
- News
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு குரங்கு அம்மை பரிசோதனை... விமான நிலையங்களுக்கு உத்தரவு
- Finance
ரூ.2,396 கோடி நட்டம்.. சில்லறை முதலீட்டாளர்களைப் பயமுறுத்திய பேடிஎம் காலாண்டு முடிவுகள்!
- Sports
அஸ்வின் கொடுத்த அதிர்ச்சி.. ஆடிப்போய் நின்ற தோனி.. ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோற்றது எப்படி?
- Automobiles
ஆக்டிவாவை யாருமே அடிச்சிக்க முடியாது.. சமீபத்தில் சைலண்டா நடந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?
- Technology
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- Lifestyle
உடல் எடையை குறைக்கும்போது இரவு உணவிற்கு முட்டை அல்லது கோழி எடுத்துக்கொள்வது நல்லதா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சினேகனை தொடர்ந்து வீரமங்கை.. அடுத்தது யாரு அந்த ஹவுஸ்மேட் கேமை ஆரம்பித்த பிக் பாஸ் அல்டிமேட்!
சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி வரும் ஞாயிறு முதல் 24 மணி நேரமும் ரசிகர்களுக்காக ஒளிபரப்பாக உள்ளது.
இதில், சினேகன் முதல் போட்டியாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியாளர் யாருன்னு கண்டுபிடிக்க முகம் தெரியாத ஒரு புகைப்படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளது.
நம்ம ஜல்லிக்கட்டு வீரமங்கை ஜூலி தான்னு பிக் பாஸ் ரசிகர்கள் உறுதியாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.
தனுஷ் புரூஸ் லீ போல மூன்று விதமான ஆக்சன் போஸில்... குடியரசுதினத்தில் வெளியாகும் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

எண்டே கிடையாது
பிக் பாஸ் சீசன் 5 எப்படியோ முடிந்து விட்டது. இன்னும் ஒரு வருஷத்துக்கு அதன் தொல்லை இருக்காது என நெட்டிசன்கள் நினைத்து வந்த நிலையில், எனக்கு எண்டே கிடையாது? என பிக் பாஸ் அல்டிமேட்டாக அதுவும் ஒரு மணிநேரத்துக்கு பதிலாக 24 மணி நேரமும் ஒளிபரப்பாக போகிறது. வரும் ஜனவரி 30ம் தேதி மாலை 6.30 மணி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பிக் பாஸ் அல்டிமேட் ஆரம்பமாகிறது.

முதல் போட்டியாளர்
பிக் பாஸ் முதல் சீசன் முதல் 5வது சீசன் வரை கலந்து கொண்டு டைட்டில் வின் பண்ணாத போட்டியாளர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். முதல் சீசனில் ரன்னர் அப் ஆன சினேகன் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார். சினேக் மற்றும் கன் என கண்டே புடிக்க முடியாத அளவுக்கு குக் வித் கோமாளி புகழை வைத்து போட்ட புரமோவை நெட்டிசன்கள் கலாய்த்துத் தள்ளினர்.

யாரு இந்த ஹவுஸ்மேட்
அதன் பிறகு சினேகனை காட்டியபடியே ஒரு புரமோவையும் வெளியிட்டு முதல் போட்டியாளரை அறிமுகப்படுத்தி விட்டனர். அப்படி பண்ணவில்லை என்றால் நிகழ்ச்சியில் அறிமுகம் படுத்துவதற்கு முன்பாகவே இணையத்தில் கசிந்து விடுவது வேற கதை. இந்நிலையில், அடுத்த ஹவுஸ்மேட் யாரு என கண்டுபிடிங்க என முகத்தை மறைத்தபடி ஒரு பெண் போட்டியாளரின் புகைப்படத்தை வெளியிட்டு கெஸ்ஸிங் கேமை ஆரம்பித்தனர்.

வீரமங்கை
அந்த புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் ஓவியா என நினைப்பார்கள் என பிக் பாஸ் டீம் நினைத்திருக்கும் போல, ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே வெறித்தனமாக ஊறிப் போயுள்ள ரசிகர்கள் பார்த்த அடுத்த நொடியே அது நம்ம வீரமங்கை ஜூலி தான் என்று கண்டுபிடித்து கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.

5 நிமிட வீடியோ
பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக ஜூலிக்கு கமல் போட்ட வீடியோ தான் செம மாஸ் என்றும் அந்த 5 நிமிட வீடியோ போடுங்கன்னு ஜூலி இந்த முறை கேட்க முடியாது. ஏன்னா 24 மணி நேரமும் ஜூலியை கேமரா ஃபோகஸ் செய்யப் போகுதுன்னு ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

வாய்ப்பு இல்லாதவர்கள்
பிக் பாஸ் வாய்ப்பு வழங்கப்பட்டும் சினிமா வாய்ப்பு பெறாத போட்டியாளர்களை மீண்டும் அழைத்து வந்து வாய்ப்பு தருவது சரியில்லை என்றும் புதிய போட்டியாளர்களை பற்றி தெரிந்து கொள்வதில் தான் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்றும் கருத்துக்கள் கிளம்பி வருகின்றன. பழைய போட்டியாளர்கள் இப்போ எப்படி ஆடுகின்றனர் என்பதை பார்க்கவும் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.