எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விஜய் டிவி...வெளியான பிக்பாஸ் அல்டிமேட் செம ஹாட் அப்டேட்

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இருந்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கொஞ்சமும் குறைய விடாமல் செய்வதற்காக பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஓடிடி வெர்சனையும் துவங்க உள்ளதாக அறிவித்துள்ளது விஜய் டிவி.

பிக்பாஸ் ஃபினாலே மேடையில் கமலே இதனை உறுதி செய்து விட்டார். 24 மணி நேரமும் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தானே தொகுத்து வழங்க உள்ளதாகவும், இந்த நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாகவும் அறிவித்தார். ஜனவரி 30ம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி துவங்கப்பட உள்ளது.

கமல் பேசும் அசத்தல் ப்ரோமோ

கமல் பேசும் அசத்தல் ப்ரோமோ

இதைத் தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்காக வேற லெவல் அசத்தல் ப்ரோமோவையும் வெளியிட்டது விஜய் டிவி. இதில் தோன்றும் கமல், விட்ட இடத்தை பிடிப்பதற்காக உங்களுக்கு பிடித்த போட்டியாளர்கள் மீண்டும் வர போகிறார்கள். விறுவிறுப்பாக, வித்தியாசமாக இந்த நிகழ்ச்சி இருக்க போவதாக கமல் பேசுவதாக அமைக்கப்பட்டதால் இந்த நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 அதிகரிக்கப்பட்ட பிக்பாஸ் நாட்கள்

அதிகரிக்கப்பட்ட பிக்பாஸ் நாட்கள்

ஆரம்பத்தில் 42 நாட்கள் நடத்தப்படும் என கூறப்பட்ட இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி, பிறகு 75 நாட்கள் என அதிகரிக்கப்பட்டது. இதே போல் முதல் நான்கு சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் வெற்றியாளர்களை தவிர மற்றவர்கள் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்பட்டது. பிறகு பிக்பாஸ் சீசன் 5ல் பங்கேற்றவர்களும் பிக்பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டது.

இதுவும் அதிகரிக்கப்படுதா

இதுவும் அதிகரிக்கப்படுதா

இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட் வெளியாகி உள்ளது. இதன்படி போட்டியாளர்கள் எண்ணிக்கை 12 அல்லது 13 இல்லையாம். மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொள்ள போகிறார்களாம். போட்டியாளர்களாக கலந்து கொள்ள பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் இரண்டு பேரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாம்.

இவங்க தான் போட்டியாளர்கள்

இவங்க தான் போட்டியாளர்கள்

முந்தைய சீசன் போட்டியாளர்களில் வனிதா விஜயக்குமார், ஜுலி, அபிராமி, தாடி பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் சீசன் 5 ல் தாமரை மற்றும் இமான் அண்ணாச்சியிடம் பேச்சப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கலந்து கொள்ள அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே போல் போன சீசனில் அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X