தலைவா...சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு...துள்ளி குதித்த போட்டியாளர்கள்...வேற லெவல் ப்ரோமோ

சென்னை : பிக்பாஸ் அல்டிமேட்டில் இன்று முதல் புதிய ஹோஸ்டாக சிம்பு பங்கேற்க உள்ளார். இதற்கான ப்ரோமோக்களை ஹாட்ஸ்டார் தமிழ் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதில் லேட்டஸ்டாக வெளியிடப்பட்டுள்ள ப்ரோமோ அனைவரையும் உற்சாகமடைய வைத்துள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். மொத்தம் 14 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த போட்டியில் சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, அபினய், ஷாரிக் ஆகியோர் எவிக்ஷன் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளார். மன அழுத்தம் காரணமாக தொடர்ந்து தன்னால் ஷோவில் பங்கேற்க முடியாது எனக் கூறி சமீபத்தில் வனிதா விஜயக்குமாரும் வெளியேறினார்.

இனி பிக்பாஸ் அல்டிமேட்டில் சிம்பு

இனி பிக்பாஸ் அல்டிமேட்டில் சிம்பு

இதனால் அடுத்த ஹோஸ்ட் யார், இந்த வாரம் வெளியேற போவது யார் என்ற கேள்விகள் எழுந்தன. அதோடு இந்த வாரம் வைல்கார்டு என்ட்ரி வேறு உள்ளதாக சொன்னதால் அது யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. இதற்கிடையில் சிம்பு தான் புதிய ஹோஸ்ட் என்பதை சமீபத்தில் ஹாட்ஸ்டார் உறுதி செய்தது. இதற்கான ப்ரோமோக்களும் வெளியிடப்பட்டு வந்தன.

சிம்புவை எப்படி வரவேற்கிறார்கள்

சிம்புவை எப்படி வரவேற்கிறார்கள்

சிம்பு ஷோவிற்கு தயாராவது போலவும், நான் வாரேன் என சொல்வது போலவும் ப்ரோமோக்களும் வெளியிடப்பட்ட நிலையில், இன்று பிக்பாஸ் அல்டிமேட் மேடையில் சிம்பு இருக்கும் ப்ரோமோ வெளியிடப்பட்டது. பார்வையாளர்கள் அவரை திருஷ்டி எடுத்து, உற்சாகமாக வரவேற்கின்றனர். இதைத் தொடர்ந்து மற்றொரு ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதை அனைவரையும் குஷி அடைய வைத்துள்ளது.

தலைவா...வா தலைவா

தலைவா...வா தலைவா

அந்த ப்ரோமோவில், இருட்டு அறையில் ஜுலி, தாடி பாலாஜி, சுருதி, அனிதா ஆகியோர் அமர வைக்கப்பட்டுள்ளனர். இதனால் இவர்கள் யார் இந்த வாரம் வெளியேற போகிறார் என்பதை சொல்ல போகிறார் என் பார்த்தால், அங்கு சோஃபாவில் சிம்பு அமர்ந்திருக்கிறார். லைட்கள் போடப்பட்டதும் சிம்புவை பார்த்ததும் பாலா, தலைவா என கத்தியபடி எழுந்து நின்று ஆட்டம் போடுகிறார். மற்ற போட்டியாளர்களையும் சிம்பு தனித்தனியாக சந்திக்கிறார். ஒவ்வொருவரும் சிம்புவை பார்த்து விட்டு ஆச்சரியம் கலந்த ஆனந்தத்தில் இருக்கிறார்கள்.

சார்ன்னு கூப்பிடவா ப்ரோன்னு கூப்பிடவா

சார்ன்னு கூப்பிடவா ப்ரோன்னு கூப்பிடவா

சிம்புவிடம் நிரூப், இப்போது உங்களை சார் என கூப்பிடுவதா ப்ரோ என்று கூப்பிடுவதா என கேட்கிறார். அதற்கு சிம்பு, எப்படி வேண்டுமானாலும் கூப்பிடுங்கள் என கூலாக சொல்கிறார். இந்த ப்ரோமோ போட்டியாளர்களை மட்டுமல்ல நெட்டிசன்களையும் துள்ளி குதிக்க வைத்துள்ளது. அதிலும் பாலா போடும் ஆட்டம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X