லைவில் எப்படி ப்ரோமோ...ஆமாம் கரெக்ட் தான...சந்தேகங்களை கிளப்பிய சுருதியின் கேள்வி

சென்னை : நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு எப்படி ப்ரோமோ போட முடியும் என நேற்று சுருதி கேட்ட பிறகு தான் பலருக்கும், ஆமாம்...கரெக்ட் தான என தோன்றி உள்ளது. சுருதியின் இந்த கேள்வி பல சந்தேகங்களை ரசிகர்களிடம் எழுப்பி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஓடிடி வெர்சனான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஜனவரி 30ம் தேதி பிரம்மாண்ட துவக்க விழாவுடன் துவங்கியது. மொத்தம் 14 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ள இந்த நிகழ்ச்சி, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும், இதன் ஹைலைட்ஸ் தினமும் இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ப்ரோமோவில் வனிதாவின் சண்டை

ப்ரோமோவில் வனிதாவின் சண்டை

வழக்கம் போல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கும் ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. ஹாட் ஸ்டார் தமிழில் இந்த ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதிலும் வழக்கம் போல் வனிதா விஜயக்குமாரின் சண்டைகள், தினசரி அலம்பல்கள் ஆகியன காட்டப்பட்டு வருகின்றன. நிகழ்ச்சிக்கு விறுவிறுப்பை கூட்டி, டிஆர்பி,யை உயர்த்தவே ப்ரோமோக்கள் வெளியிடப்படுகிறது என்பது அனைவரும் அறிந்தது தான்.

சுரேஷ் பற்றி அனிதா சொன்ன தகவல்

சுரேஷ் பற்றி அனிதா சொன்ன தகவல்

பிக்பாஸ் அல்டிமேட்டில் நேற்று இரவு, கார்டன் ஏரியாவில் ஷாரிக், சினேகன், சுருதி, அனிதா நான்கு பேரும் உட்கார்ந்து பேசி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கொஞ்சம் தள்ளி அமர்ந்திருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தி குரூப்பை கிண்டல் செய்து சினேகன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அனிதா, ப்ரோமோவில் வர வேண்டும் என்பதற்காக சுரேஷ் சக்கரவர்த்தி ஓவராக செய்து கொண்டிருக்கிறார். அதிலும் இப்போ நாமினேஷனில் இருப்பதால் அனைவரின் கவனத்தை ஈர்க்க ஏதாவது செய்வார்.. இதை எங்கள் சீசனிலேயே நான் சொன்னேன். கடைசியில் அது என் மீதே திரும்பி விட்டது என ஆரம்பிக்கிறார்.

சுருதி கேட்ட நச்சு கேள்வி

சுருதி கேட்ட நச்சு கேள்வி

அப்போது சுருதி, ப்ரோமோ போடுவாங்களா? என கேட்கிறார். கண்டிப்பாக போடுவாங்க. விஜய் டிவியில் அனைத்து நிகழ்ச்சிக்கும் ப்ரோமோ போடுவாங்க என்கிறார் அனிதா. அவரிடம் மீண்டும், மற்ற நிகழ்ச்சிக்கு ஓகே. இது லைவ் நிகழ்ச்சியாச்சே. இதில் எப்படி ப்ரோமோ போட முடியும் என கேட்டார் சுருதி. சுருதி கேட்ட இந்த கேள்வி பார்வையாளர்களுக்கு பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

லைவிற்கு முன்பே ப்ரோமோவா

லைவிற்கு முன்பே ப்ரோமோவா

அதாவது நேற்று பகல் 3 மணியளவில் தான் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் வாரத்திற்கான நாமினேஷன் நடத்தப்பட்டது. ஆனால் நாமினேஷனுக்கான ப்ரோமோ காலையிலேயே ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டு விட்டது. அதே போல் குடி அல்லது கடி என்ற டாஸ்க் மாலையில் தான் நடத்தப்பட்டது. அதில் தான் டாஸ்க்கில் பங்கேற்க முடியாது என வனிதா விஜயக்குமார் அனைவரிடமும் வாக்கவாதம் செய்தார். ஆனால் அந்த ப்ரோமோவும் நேற்று காலையிலேயே வெளியிடப்பட்டு விட்டது. நேரடி ஒளிபரப்பு என்றால் அந்த சீன் நடப்பதற்கு முன்பே எப்படி ப்ரோமோ தயார் செய்தார்கள் என்ற சந்தேகம் அனைவரின் மனதிலும் எழுகிறது.

இது எப்படி முடியும்

இது எப்படி முடியும்

இந்த சந்தேகத்தை உண்மை என்பது போல், இன்று காலையில் கிச்சன் ஏரியாவில் நின்று தாமரை மற்றும் சுரேஷ் சண்டை போடுவதை போல் பேசிக் கொள்ளும் காட்சி நடக்கிறது. அப்போது விளம்பர இடைவெளி வருகிறது. அது முடிந்து மீண்டும் லைவ் தொடர்வதாக இருந்தால், அந்த சமயத்தில் அங்கு என்ன பேசிக் கொண்டிருந்தார்களோ அது தானே காட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக விளம்பர இடைவெளிக்கு முன்பு தாமரை - சுரேஷ் பேசிக் கொண்ட அதே டயலாக் கொண்ட சீன் வந்த பிறகே அதற்கு பிறகு நடந்தவைகள் வருகிறது. லைவில் இது எப்படி சாத்தியமாகும் என ரசிகர்கள் அடுக்கடுக்காக பல சந்தேகங்களை கிளப்பி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X