பிக்பாஸ் அல்டிமேட்...ஃபினாலே வாரத்தில் வரப் போகும் ஸ்பெஷல் கெஸ்ட் யார்?
சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இது ஃபினாலே வாரம் என்பதால் ஸ்பெஷல் கெஸ்டாக யார் வர போகிறார்கள் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
பிக்பாஸ் சீசன் 5 ல் ஃபினாலே வாரத்தில் சரத்குமார், யாஷிகா என பலரும் ஸ்பெஷல் கெஸ்டாக வந்தனர். பிக்பாஸ் டிவி வெர்சன்களை போல் அல்டிமேட்டிலும் போட்டியாளர்களின் குடும்பத்தினர்கள் வீட்டிற்குள் வருவார்களா என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

கதறி அழுத அபிராமி
ஆனால் அதற்கு பதிலாக உறவினர் பேசிய ஏவி ஒளிபரப்பு செய்து காண்பிக்கப்பட்டது. இதில் தனது அம்மாவும், அப்பாவும் ஒன்று சேர்ந்து இருக்கும் வீடியோவை பார்த்து அபிராமி கதறி அழுதார். அவர் உணர்ச்சி வசப்பட்டு அழுததைக் கண்டு சிம்புவும் மேடையிலேயே கண் கலங்கி அழுதார். மிகவும் நெகிழ்ச்சியாக நேற்றைய பிக்பாஸ் அல்டிமேட் எபிசோட் நிறைவடைந்தது.

அனிதாவை தூக்கிய நிரூப்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் ஃபினாலே ஏப்ரல் 9 ம் தேதி நடைபெறுவதால் இந்த வாரம், ஏற்கனவே எவிக்டாகி வெளியே சென்ற போட்டியாளர்கள் ஸ்பெஷல் கெஸ்டாக பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் வருகிறார்கள். இதில் முதல் ஆளாக அனிதா சம்பத்தும், ஷாரிக்கும் வீட்டிற்கு வருகிறார்கள். அனிதாவை பார்த்ததும் சந்தோஷத்தில் அவரை அப்படியே கட்டிப்பிடித்து தூக்குகிறார் நிரூப்.

ஷாரிக்கை கட்டிப்பிடித்த அபிராமி
பிறகு சிறிது நேரத்திலேயே ஷாரிக்கும் உள்ளே அனுப்பப்படுகிறார். அவரை பார்த்ததும் பாலா ஓடிச் சென்று அலேக்காக தூக்குகிறார். அபிராமி ஒடி வந்து ஷாரிக்கை கட்டி அணைத்துக் கொள்கிறார். இதற்கான ப்ரொமோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. அனிதா மற்றும் ஷாரிக் வரும் சீன்கள் இன்று இரவு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.

டைட்டில் வெல்ல போவது யார்
14 போட்டியாளர்கள் மற்றும் 2 வைல்ட் கார்டு என்ட்ரி என 16 பேர் பங்கேற்ற பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது நிரூப், பாலா, தாமரை, அபிராமி, ஜுலி, ரம்யா பாண்டியன் ஆகிய 6 பேர் மட்டுமே வீட்டிற்குள் உள்ளனர். இவர்களில் யாரெல்லாம் ஃபைனலுக்கு போக போகிறார்கள். யார் டைட்டில் வெல்ல போகிறார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications











