ரூ.15 லட்சத்துடன் வெளியேறிய பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்...யார் தெரியுமா?

சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ரூ.15 லட்சம் அடங்கிய பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு போட்டியாளர் ஒருவர் வெளியேறி இருக்கிறார். இவருக்கு இவ்வளவு பெரிய அதிர்ஷ்டமா என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு போய் உள்ளது.

14 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து விட்டது. 24 மணி நேர நிகழ்ச்சியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தமிழில் ஜனவரி 31ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி ஏப்ரல் 9 ம் தேதி நடக்க உள்ளது.

தொடரும் 7 போட்டியாளர்கள்

தொடரும் 7 போட்டியாளர்கள்

பிக்பாஸ் அல்டிமேட்டில் 14 போட்டியாளர்களுடன் புதியதாக சதீஷ், ரம்யா பாண்டியன் மட்டும் வைல்ட்கார்டு என்ட்ரியாக உள்ளே அனுப்பப்பட்டனர். ஆக மொத்தம் 16 போட்டியாளர்களில் இதுவரை வனிதா, சுரேஷ், அபினய், சுஜா வருணி, ஷாரிக், சதீஷ், அனிதா, சினேகன், தாடி பாலாஜி ஆகிய 9 போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர். மற்ற 7 போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்கு செல்ல விளையாடி வருகிறார்கள்.

15 லட்சம் யாருக்கு

15 லட்சம் யாருக்கு

ஃபினாலேவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் இந்த வாரம் அனைவரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த சமயத்தில் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் பணப்பெட்டி அனுப்பப்பட்டுள்ளது. ரூ.3 லட்சத்துடன் துவங்கப்பட்ட இந்த டாஸ்கில் படிப்படியாக பணம் உயர்த்தப்பட்டுக் கொண்டே சென்றது. கடைசியாக பெட்டியில் வைக்கப்பட்ட தொகை 15 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதுவரை பணப்பெட்டியை கண்டுகொள்ளாமல் இருந்த போட்டியாளர்கள் 15 லட்சமாக தொகை உயர்த்தப்பட்டதும் சற்று யோசிக்க துவங்கினர்.

சேற்றில் உருண்ட போட்டியாளர்கள்

சேற்றில் உருண்ட போட்டியாளர்கள்

இறுதியாக ஜுலி மற்றும் சுருதி பணத்தை எடுக்க முடிவு செய்தனர். ஆனால் முந்தைய டிவி வெர்சன் பிக்பாஸ் போல் இல்லாமல், பிக்பாஸ் அல்டிமேட்டில் பணப்பெட்டியை எடுக்க பல கட்ட டாஸ்க் நடத்தப்படும் அதில் வெற்றி பெறுபவர் மட்டுமே பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேற முடியும் என்றார் பிக்பாஸ். இதனால் ஜுலி, சுருதிக்கு முதல் கட்டமாக சேற்றில் இருக்கும் பந்துகளை சேகரிக்க வேண்டும். இந்த சுற்றில் சுருதி வெற்றி பெற்றார்.

பணப்பெட்டியுடன் வெளியேறி போட்டியாளர்

பணப்பெட்டியுடன் வெளியேறி போட்டியாளர்

இரண்டாவதாக டைஸ் உருட்டும் போட்டி. அதில் விழும் எண்களுக்கு ஏற்க போட்டியாளர்கள் முன்னேறி செல்ல வேண்டும் என சொல்லப்பட்டது. இதற்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இது இன்று இரவு 9 மணியளவில் நடைபெற உள்ளது. ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள ப்ரோமோவின் படி அந்த சுற்றிலும் சுருதியே வெற்றி பெறுகிறார். அவர் தான் 15 லட்சத்தை வென்று, பணப்பெட்டியுடன் வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டைட்டில் வெல்லப் போவது யார்

டைட்டில் வெல்லப் போவது யார்

இதனால் அடுத்த கேள்வியாக இந்த வாரம் வெளியேற போவது யார், இறுதிப் போட்டிக்கு யாரெல்லாம் செல்ல போகிறார்கள், யார் டைட்டில் வெல்ல போகிறார் என்ற கேள்விகளும், அவற்றின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X