அடித்து உருளும் போட்டியாளர்கள்...பணப்பெட்டியை வெல்ல போவது யார்?

சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பணப் பெட்டியை எடுக்க போவது யார் என்பதையே செம த்ரில்லிங்காக கொண்டு செல்கிறார்கள். தொகை அதிகரித்துக் கொண்டே செல்வதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 60வது நாளை எட்டி உள்ளது. ஜனவரி 31ம் தேதி முதல் தொடர்ந்து 24 மணி நேர நிகழ்ச்சியாக பிக்பாஸ் ஓடிடி வெர்சனாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகியதால், தற்போது சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.

வெளியேறிய போட்டியாளர்கள்

வெளியேறிய போட்டியாளர்கள்

பிக்பாசின் முந்தைய 5 சீசன்களை சேர்ந்த போட்டியாளர்களில் இருந்து 14 பேர் தேர்வு செய்யப்பட்டு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இதில் இதுவரை சுரேஷ் சக்கரவர்த்தி, வனிதா விஜயக்குமார், தாடி பாலாஜி, சினேகன், அனிதா சம்பத், சஜா வருணி, அபினய், சதீஷ், ஷாரிக் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். வைல்ட் கார்டு என்ட்ரியாக ரம்யா பாண்டியன், சதீஷ், சுரேஷ் சக்கரவர்த்தி அனுப்பப்பட்டனர்.

படிப்படியாக உயரும் பணம்

படிப்படியாக உயரும் பணம்

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் ஃபினாலே ஏப்ரல் 9 ம் தேதி நடத்தப்பட உள்ளது. தற்போது நிரூப், பாலா, அபிராமி, தாமரை, ஜுலி, ரம்யா பாண்டியன், சுருதி ஆகிய 7 பேர் போட்டியிட்டு வருகிறார்கள். பல சர்ச்சைகள், பிரச்சனைகளை கடந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது பணப் பெட்டி டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 3 லட்சத்துடன் துவங்கப்பட்ட பணப்பெட்டியில் தொகை படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது 15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பணப்பெட்டிக்கே டாஸ்க்கா

பணப்பெட்டிக்கே டாஸ்க்கா

15 லட்சம் என்பதால் அதை எடுத்துக் கொண்டு வெளியேற ஜுலியும், சுருதியும் முடிவு செய்தனர். ஆனால் வழக்கமான பிக்பாஸ் நிகழ்ச்சிகளை போல் அல்டிமேட்டில் போட்டியாளர்கள் அவ்வளவு ஈசியாக பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறி விட முடியாதாம். இந்த பணப்பெட்டியை அடைய பல கட்டமாக கடுமையான போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு தான் இந்த பணப்பெட்டி வழங்கப்படுமாம்.

அடித்து உருளும் போட்டியாளர்கள்

அடித்து உருளும் போட்டியாளர்கள்

பணப்பெட்டியை பெறுவதற்காக சேறு நிரப்பப்பட்ட பகுதியில் உள்ள பந்தை எடுத்து தங்கள் கூடைகளில் நிரப்புவதற்காக சுருதியும், ஜுலியும் அடித்து உருண்டு சண்டை போடுகிறார்கள். இந்த போட்டியில் ஒரு வழியாக சுருதி வெற்றி பெற்று விடுகிறார். அவருக்கு தான் பணப்பெட்டி கிடைக்க போகிறது என பார்த்தால், வாழ்த்தை மட்டும் சொல்லி அடுத்த கட்ட போட்டி இருப்பதாக சொல்கிறார் பிக்பாஸ்.

பணப்பெட்டி யாருக்கு

பணப்பெட்டி யாருக்கு

இதனால் பணப்பெட்டியை வெல்ல போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து காணப்படுகிறது. அதே சமயம் இந்த வாரம் வெளியேற போகிறவர் யார் என்ற எதிர்பார்ப்பும், பைனலுக்கு செல்ல போகிறவர்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X