ரூல்ஸ் போட சொல்லி கெஞ்சிய வனிதா...ராஜமாதா என கலாய்த்த ஷாரிக்

சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் வந்த உடனேயே உருட்டல், மிரட்டல்களை துவக்கிய வனிதா விஜயக்குமார், அடுத்த நாளே கேப்டனாக இருக்கும் ஷாரிக்கிடம் என்ன ரூல்ஸ் போட வேண்டும் என இன்ஃபுலியன்ஸ் செய்தது, மற்ற ஹவுஸ்மேட்களை எரிச்சலடைய வைத்துள்ளது.

48 நாட்களைக் கொண்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்று துவங்கியது. போட்டியாளர்கள் வீட்டிற்குள் வந்த சிறிது நேரத்திலேயே வீட்டின் கேப்டனை தேர்வு செய்யும் பணி துவங்கியது. இதில் ஷாரிக்கை அதிகமானவர்கள் தேர்வு செய்ததால் அவர் கேப்டனாக்கப்பட்டார். மொத்தம் 14 போட்டியாளர்கள் இருந்தாலும் பரபரப்பிற்கு பஞ்சமில்லாத வனிதா, பாலாஜி முருகதாஸ் போன்றவர்கள் மீது பார்வையாளர்களின் கவனம் அதிகமாக காணப்படுகிறது.

நான் தான் ஓனர்

நான் தான் ஓனர்

பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் முதல் ஆளாக வந்த வனிதா விஜயக்குமார், அவரைத் தொடர்ந்து வந்த அபிராமி, நிரூப் போன்றவர்களிடம் தன்னை பிக்பாஸ் வீட்டின் ஓனர் என்றும், தன்னிடம் தான் வீட்டை பார்த்துக் கொள்ளும்படி கமல் சொல்லி இருப்பதாகவும் கூறினார். அதோடு வீட்டில் யாரும் காதலிக்க கூடாது என்ற கன்டிஷனையும் போட்டார்.

அனிதா - வனிதா உரசல்

அனிதா - வனிதா உரசல்

இரண்டாவது நாளான இன்று, உணவு சாப்பிடும் போது, டைனிங் டேபிள் சரியாக இல்லை என கருத்து சொன்னார். அதோடு தங்கள் சீசனில் அனைவரும் சேர்ந்து தான் சாப்பிட வேண்டும் என்ற ரூல்ஸ் இருந்தது என்றார். இதனால் டென்ஷன் ஆன வனிதா, எங்கள் சீசனில் அப்படி, அந்த சீசனில் இப்படி என்றெல்லாம் யாரும் சொல்ல கூடாது என முதலில் ஒரு ரூல்ஸ் போடு என்கிறார். மற்றவர்கள் கேப்டனை மிரட்டாதீர்கள் என கூற, உடனடியாக வனிதா தனது டோனை மாற்றி, மிக பணிவாக பேசுவது போல் அப்படி ஒரு ரூல்சை தயவு செய்து கொண்டு வா என்கிறார்.

ராஜமாதாவான வனிதா

ராஜமாதாவான வனிதா

ஆனால் வனிதாவின் பேச்சிற்கு பெரிதாக ரியாக்ட் செய்யாமல், சாப்பிடும் வேலையில் மும்முரம் காட்டிய ஷாரிக், ராஜமாதா அப்படி தான் சொல்வார். அவர் சொல்வது தான் நடக்க வேண்டும் என்பார் என கலாய்ப்பதை போல் பொதுவாக பதில் கூறுகிறார். இதை பார்த்த ரசிகர்கள், ஆஹா...வனிதா தன் வேலையை ஆரம்பிச்சுட்டாரா என கேட்க துவங்கி விட்டனர்.

Recommended Video

BB Ultimate வீட்டிற்குள் போகும் முன் Niroop செய்த கடைசி Video Call | BB Ultimate, Iykki Berry
செம ட்விஸ்டா இருக்கே

செம ட்விஸ்டா இருக்கே

பலரையும் டாமினேட் செய்வது போலவும், இன்ஃபுலியன்ஸ் செய்வது போலவும் வனிதா பேசுவது பார்வையாளர்களை மட்டுமின்றி ஹவுஸ்மேட்களையும் எரிச்சலடைய வைத்துள்ளது. வனிதாவிற்கு பாலாஜி முருகதாஸ், நிரூப் போன்றவர்களுடன் தான் மோதல் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அனிதாவுடன் உரசல் ஏற்பட்டுள்ளது, செம ட்விஸ்டா இருக்கும் போலவே என சொல்ல வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X