வேதாள விளக்கை மாற்றி மாற்றி கைமாற்றி பழி வாங்கிய பாலாஜி-வனிதா

சென்னை : 24 மணி நேர ஓடிடி நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பிக்பாஸ் அல்டிமேட்டில் ஆரம்பத்தில் அன்பை பொழிந்த போட்டியாளர்களுக்குள் போக போக மோதல்கள் அதிகரித்து வருகின்றன. டாஸ்குகளிலும் கூட தனிப்பட்ட கோபங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது.

மொத்தம் 10 வாரங்கள் கொண்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இரண்டு வாரங்கள் முடிவடைந்து விட்ட நிலையில் மூன்றாவது வாரத்தில் 80 களில் இருக்கும் கல்லூரி வாழ்க்கை டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஆனால் தெள்ள தெளிவாக பிக்பாஸ் விளக்கிய பிறகும் இதை பயங்கரமாக குழப்பி, சொதப்பி வைத்தனர் போட்டியாளர்கள். இதனால் பார்வையாளர்கள் மட்டுமல்ல பிக்பாசே கடுப்பாகி விட்டார்.

வெளியேற போகிற அந்த இருவர்

வெளியேற போகிற அந்த இருவர்

14 போட்டியாளர்கள் கொண்ட இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் சுரேஷ் சக்கரவர்த்தியும், இரண்டாவது வாரத்தில் சுஜா வருணியும் எவிக்ஷன் மூலம் வெளியேற்றப்பட்டனர். தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது வாரத்தில் 8 பேர் நாமினேட் ஆகி உள்ள நிலையில் இவர்களில் மிக குறைந்த ஓட்டுக்களுடன் அபினய் மற்றும் சினேகன் கடைசி இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருப்பதாக பிக்பாஸ் ஏற்கனவே கூறி உள்ளார். அதனால் இந்த வாரத்தில் வெளியேற போகிற அந்த இரண்டு பேர் யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது.

இது உங்க சொந்த வீடு இல்லை

இது உங்க சொந்த வீடு இல்லை

இந்நிலையில் இந்த வார கேப்டனாக வனிதா தேர்வு செய்யப்பட்டார். அவர் கேப்டனாவதற்கு முன்பே வீட்டில் உள்ள பலருடனும் அவருக்கு மோதல் இருந்து வந்தது. குறிப்பாக பாலாவுக்கும் அவருக்கும் கடந்த வாரத்தில் இருந்தே பலவற்றிற்கும் மோதல், வாக்குவாதங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. டாஸ்க் மட்டுமின்றி மற்ற நேரங்களிலும் கூட வனிதாவை துணிச்சலாக எதிர்த்து, கடுமையாக விமர்சித்து வருகிறார் பாலாஜி முருகதாஸ். வந்த முதல் வாரமே இது உங்க சொந்த வீடு கிடையாது என சொல்லி வனிதாவை அதிர வைத்தார்.

பழிவாங்க வேதாள விளக்கு

பழிவாங்க வேதாள விளக்கு

வழக்கமாக போன் எடுப்பவருக்கு டாஸ்க் கொடுக்கப்படுவதை போல, இன்று போனை எடுத்த வனிதாவிற்கு டாஸ்க் கொடுத்துள்ளார் பிக்பாஸ். ஸ்டோர் ரூமில் வைக்கப்பட்டுள்ள வேதாள விளக்கு உங்களுக்கு தான் சொந்தம். இந்த விளக்கு வைத்திருப்பவர் உட்காரவோ, படுக்கவோ கூடாது. பசர் அடிக்கும் போது உங்களுக்கு பிடிக்காதவரிடம் விளக்கை கைமாற்றலாம் என சொல்கிறார் பிக்பாஸ். வனிதாவோ, அதை நேரடியாக பாலாவிடம் கொண்டு போய் கொடுக்கிறார். அடுத்த பசர் அடிக்கும் போது அந்த விளக்கை மீண்டும் வனிதாவிடமே திருப்பிக் கொடுக்கிறார் பாலா.

Recommended Video

முத்தமிழ் கவியே With Anandhan Epi 01 | Vairamuthu’s Mazhai Kuruvi Explanation | OneIndia Tamil
 இப்படிப்பட்டவருக்கு தகுதியேயில்லை

இப்படிப்பட்டவருக்கு தகுதியேயில்லை

இப்படியே வேதாள விளக்கை கைமாற்றி பழி வாங்கும் பாலாவும், வனிதாவும் கடைசியாக வழக்கம் போல் வார்த்தைகளிலும் மோதிக் கொண்கிறார்கள். இப்படி பழிவாங்கும் குணம் கொண்டவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வர தகுதி இல்லாதவர்கள் என முகத்திற்கு நேராக பாலாவை திட்டுகிறார் வனிதா. ஆனால் அதை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் பாலா சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X