Don't Miss!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- News
செயற்கை வைரங்களை உருவாக்க புதிய திட்டம்.. சுங்க வரியும் குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- Finance
இயற்கை விவசாயத்தினை மேம்படுத்த பல திட்டங்கள்.. விவசாய ஸ்டார்ட்அப்-களுக்கு சலுகை அளிக்க திட்டம்!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ச்சீ…வாயமூடு ஜூலியை அடிக்க கை ஓங்கிய வனிதா… பிக் பாஸ் அல்டிமேட்டில் பரபரப்பு !
சென்னை : பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் 2வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில், வனிதாக ஜூலியை அடிக்க கையை ஓங்கி உள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் தற்போது திருடன், போலீஸ் டாஸ்க் நடந்து வருகிறது. இதில், குழந்தைகளைவிட போட்டியாளர்கள் மிகவும் மோசமாக விளையாடி வருகின்றனர்.
செருப்பு, வளையல், கம்மல் போன்றவற்றை திருடி விளையாடி வருகின்றனர். இதெல்லாம் பார்க்கும் போது என்னடா நடக்குது அங்கே என்று கேட்கத் தோன்றுகிறது.
இதுவரை
ஆஸ்கர்
அவார்டு
வாங்கிய
இந்தியர்கள்...ஏ.ஆர்.ரஹ்மான்
மட்டுமே
சிறப்பு
ஏன்?

13 போட்டியாளர்கள்
பிக் பாஸ் அல்டிமேட்டின் முதல் போட்டியாளராக தாத்தா என்று அனைவராலும் அழைக்கப்படும் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறினார். தற்போது 13 போட்டியாளர்களுடன் தொடரும் பிக் பாஸ் அல்டிமேட்டில், முதல் ஓபன் நாமினேஷன் நடந்தது. முதல் வாரம் கடுமையான டாஸ்க்குகள் இருந்தாலும், போட்டியாளர்கள் அனைவருமே ஜாலியாக இருந்தார்கள். எவ்வளவு கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும், கொஞ்ச நேரத்திலேயே சமாதானம் ஆகிவிட்டனர்.

ஓபன் நாமினேஷன்
ஓபன் நாமினேஷனில் ஒவ்வொரு போட்டியாளரும் யார் தனக்கு நெருங்கிய நண்பர் மற்றும் யாரிடம் நன்றாகப் பழக முடியவில்லை அல்லது யாரை நண்பராக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்ற டாஸ்க் நடைபெற்றது. இதில், ஜூலிக்கு அதிக நெகட்டிவ் வோட்டுகள் கிடைத்தது.இந்த டாஸ்க்கில் தாடி பாலாஜி அதிக ஹார்ட்டுகளைப் பெற்றார். அதைத் தொடர்ந்து, அதே காரணத்துக்காக ஜூலி அதிக போட்டியாளர்களால் ஓபன் நாமினேஷனில், நாமினேட் செய்யப்பட்டார்.

திருடன், போலீஸ் டாஸ்க்
பிக் பாஸ் வீட்டில் தற்போது திருடன், போலீஸ் டாஸ்க் நடந்து வருகிறது. இதில், வனிதா தலைமையிலான தாமரை, ஷாரிக், அனிதா, ஸ்ருதி, பாலாஜி, சுஜா ஆகியோர் போலீசாக இருந்தனர். மேலும், சினேகன் தலைமையில் அபிராமி, நிரூப்,அபிநய், ஜூலி, பாலா ஆகியோர் திருடர்களாக இருந்தனர். இந்த டாஸ்கில் வனிதாவுக்கு கொடுத்த டிரெண்டிங் பிளேயருக்கு விருதை திருடர்கள் அணியினர் திருடினர். இதில் ஏற்பட்ட சண்டையில், டாஸ்கிலிருந்து வெளியேறினார் வனிதா.

கையை ஓங்கிய வனிதா
இதையடுத்து, இன்று போலீஸ் டீம் திருடர்களாகவும், திருடர்கள் போலீசாகவும் மாறி உள்ளனர். இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில், தாமரை நகைகளை திருடுவதை பார்த்துவிட்டு கத்துகிறார் ஜூலி, அப்போது, அங்கிருந்த வனிதா ச்சீ... வாயமூடு என்று ஜூலியை அடிப்பது போல கையை ஓங்கிவிட்டு உன்ன மாதிரி லூசா நானு என்று கோபத்துடன் கூறுகிறார்.
Recommended Video

கடுப்பான தாமரை
இதையடுத்து, திருடிய குற்றத்திற்காக தாமரையை ஜெயிலில் அடைக்கும் போது நிரூப், தாமரைக்கு காலில் விலங்கு போட வேண்டும் என்று கூற, கடுப்பான தாமரை, கையில் தான் விலங்கு போடவேண்டும் காலில் இல்லை என்று கோபத்துடன் கத்திவிட்டு ஓடுகிறார்.இந்த ப்ரோமோவை பார்க்கும் போது பிக் பாஸ் அல்டிமேட்டில் சுவாரசியமான சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது . இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் டிஸ்னி பிளஸ் ஹாஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.