எவிக்ஷனில் இருந்து அடுத்தடுத்து எஸ்கேப் ஆகும் போட்டியாளர்கள்... முதலில் வெளியேறப் போவது யார் ?

சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒரு புறம் விமர்சனங்களை பெற்றாலும், பலர் அதை ரசித்து பார்த்து வருகின்றனர். 24 மணி நேர நிகழ்ச்சி என்பதால் ரசிகர்கள் இதை என்ஜாய் செய்து பார்த்து வருகிறார்கள். முதல் வாரத்தில் வெளியேற போகிறவர் யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது.

Recommended Video

Bigg Boss Ultimate Day 2:Julie பற்றி யாருக்கும் தெரியாத முகம் | மாறிய கண்ணோட்டம்

ஜனவரி 30-ம் தேதி துவங்கிய பிக்பாஸ் அல்டிமேட் 24 மணி நேர நிகழ்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதனால் 24 மணி நேரமும் எப்படி காட்ட முடியும் என பலர் கேட்டனர். என்ன தான் செய்கிறார்கள் என்பதை பார்ப்பதற்காகவே அதிகமானவர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். 14 போட்டியாளர்கள் பற்றிய பலரின் பார்வைகளும் மாறி வருகிறது.

கடுப்போத்துறாங்க மைலார்ட்

கடுப்போத்துறாங்க மைலார்ட்

போட்டியாளர்கள் தூங்குவது, பல் தேய்ப்பது, வாக்கிங் போவது என அனைத்தும் காட்டப்படுவதால் சிலருக்கு அது எரிச்சலை ஏற்படுத்தியது. ஒருவர் தூங்குவதை, இன்னொருவர் தூங்காமல் டிவியில் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா. சினேகன் காலையில் வாக்கிங் போனதை காட்டிய போது, அவர் உடல் ஆரோக்கியதிற்காக நடக்கிறார். அதை நாம் ஒரே இடத்தில் வெட்டியாக உட்கார்ந்து பார்க்க வேண்டுமா என்றெல்லாம் கேட்டனர். அதே போல் டாஸ்க்கில் கேட்கப்பட்ட கேள்விகளும் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.

நாமினேட் ஆன 8 பேர்

நாமினேட் ஆன 8 பேர்

ஆனால் ப்ரோமோவில் வனிதா போடும் சண்டைகளை பார்த்தவர்கள், அடடா...இந்த சீசனை மிஸ் பண்ணிட்டோமே என நினைத்து அதற்கு பிறகு பார்க்க துவங்கி விட்டனர். நிகழ்ச்சியி துவங்கிய அடுத்த நாளே நாமினேஷன் நடத்தப்பட்டு, அதில் 8 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். வனிதா, சுரேஷ், அபினய், ஜுலி, சுருதி, சிநேகன், நிரூப், அனிதா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் யார் முதல் ஆளாக வெளியேறுவார் என ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருக்கையில், பிரஸ் மீட் டாஸ்க்கை வைத்தை அனைத்தையும் தலைகீழாக மாற்றி விட்டனர்.

அடுத்தடுத்து எஸ்கேப்

அடுத்தடுத்து எஸ்கேப்

முதலில் குறைந்த ஓட்டுக்களுடன் கடைசி இடத்தில் இருப்பதால் இந்த வாரம் ஜுலி தான் வெளியேறுவார் என்றார்கள். ஆனால் நேற்று நடந்த பிரஸ்மீட் டாஸ்க்கில் ஜுலி பேசியது அவருக்கு ஆதரவை அதிகரிக்க செய்தது. இவரைத் தொடர்ந்து அபினய் செல்வார் என்றார்கள். ஆனால் இன்று நடந்த பிரஸ்மீட்டில் அவரின் இமேஜும் உயர்ந்து விட்டது. நேற்ற இரவு வனிதா குரூப்பை சேர்ந்தவர்கள் போட்ட திட்டம், அபினய்யை காமெடியன் ஆக்க வேண்டும் என்பது தான். ஆனால் அதற்கு நேர் மாறாக அவர் ஹீரோ ரேஞ்சிற்கு உயர்ந்துவிட்டார். தற்போதைய நிலவரப்படி, ஹவுஸ்மேட்கள் மற்றும் ரசிகர்களிடம் எரிச்சலை ஏற்படுத்தி வனிதா தான் கடைசியில் இருக்கிறார்.

வனிதா எவிக்டடா ?

வனிதா எவிக்டடா ?

ஆனால் வனிதா கன்டென்ட் கொடுக்கிறார் என்பதால் கண்டிப்பாக வெளியேற்ற மாட்டார்கள். பிக்பாஸ் அல்டிமேட்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சர்ச்சையான, பரபரப்பான போட்டியாளர் என்றால் வனிதா தான். வனிதா வெளியே சென்றால் நிகழ்ச்சியே முடிந்து விடும் என சுரேஷ் சக்கரவர்த்தி, நேற்று வனிதாவிடமே கூறினார். தினசரி ப்ரோமோக்களே வனிதாவை வைத்து தான் வெளியிடுகிறார்கள்.

அப்போ யார் தான் போக போகிறார்

அப்போ யார் தான் போக போகிறார்

இந்த வாரம் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படும் ஜுலி, அபினய் ஆகியோர் அடுத்தடுத்து எவிக்ஷனில் இருந்து எஸ்கேப் ஆகி வருகின்றனர். தற்போது எவிக்ஷன் லிஸ்டில் அடுத்து இருப்பவர் சுருதி. இவர் தான் வெளியேற போகிறாரா இல்லை ஒருவேளை முதல் வாரத்தில் எவிக்ஷன் இல்லை என்று சொல்லி விடுவார்களா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X