Don't Miss!
- News
அந்த வீட்டுல என்னமோ நடக்குது.. ரெய்டில் காத்திருந்த ஷாக்.. வசமாக சிக்கிய அதிமுக மகளிரணி ‘புள்ளி’!
- Automobiles
டாடா வயிற்றில் புளியை கரைக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... அஞ்சு நாளில் இவ்ளோ பேர் புக்கிங் பண்ணீட்டாங்களா!
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
பிக் பாஸ் அல்டிமேட்.. இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் இருப்பது யார் தெரியுமா? என்னடா S-க்கு வந்த சோதனை!
சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
மொத்தம் 10 வாரங்கள் மட்டுமே நடைபெற உள்ள இந்த 24 மணி நேர ஒடிடி ஷோவில் ஏகப்பட்ட சுவாரஸ்ய நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
முதல் வாரத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி, இரண்டாவாரத்தில் சுஜா என S எழுத்து போட்டியாளர்கள் எலிமினேட் ஆன நிலையில், மூன்றாவது வாரத்திலும் அதே எழுத்து போட்டியாளர் தற்போது கடைசி இடத்தை பிடித்துள்ளார்.
வாவ்...செம ஹாட்...தலைவர் ரஜினியுடன் அடுத்து ஜோடி சேர போவது இவரா?

ரோஸ் கொடுத்து நாமினேஷன்
இந்த வாரம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியேற இரண்டு நபர்களை நாமினேட் செய்யாமல் ரோஸ் கொடுத்து இருவரை காப்பாற்ற ஓப்பன் நாமினேஷனை பிக் பாஸ் நடத்தினார். எல்லாரும் மைண்ட் கேமாக ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் காப்பாற்ற நினைக்க, மூன்று ரோஜாக்களுக்கு மேல் வாங்கியவர்கள் மட்டுமே சேவ் என ஒரே போடாக போட்டு 2 ரோஜாக்களை வாங்கி சிரித்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஸ்லோ கிளாப் செய்து விட்டார் பிக் பாஸ்.

யார் யார்
மொத்தம் 14 பேரில் இருவர் வெளியேறி உள்ள நிலையில், மீதமுள்ள 12 பேரில் வனிதா விஜயகுமாரை கேப்டனாக்கி இந்த வாரம் காப்பாற்றி உள்ளனர். மேலும், அதிக ரோஜாக்களை வாங்கி அபிராமி, தாடி பாலாஜி, சுருதி உள்ளிட்ட மூவர் மட்டும் நாமினேஷனில் இடம்பெறவில்லை. மீதமுள்ள பாலாஜி முருகதாஸ், நிரூப், அபிநய், அனிதா சம்பத், ஜூலி, ஷாரிக், சினேகன், தாமரை உள்ளிட்ட 8 பேரும் இந்த வார நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர்.

முதலிடத்தில் பாலா
பாலாஜி முருகதாஸை இந்த நாமினேஷன் ஒன்றும் செய்யாது என ஹவுஸ்மேட்டுகளுக்கே தெரிந்து தான் அவருக்கு அதிக ரோஜாக்களை கொடுக்கவில்லை. நாமினேஷனில் இடம்பெற்ற பாலா அதிக வாக்குகளுடன் இந்த நாமினேஷன் பட்டியலில் முதலில் சேவ் ஆகும் நபராக முதலிடத்தில் உள்ளார். பாலாவுக்கு அடுத்த இடத்தில் தாமரை உள்ளார்.

சேஃப் ஜோன்
தாமரையை தொடர்ந்து நிரூப், ஜூலி, அனிதா சம்பத் உள்ளிட்ட போட்டியாளர்கள் சுமார் 10 சதவீத வாக்குகளுடன் சேஃப் ஜோனில் உள்ளனர். தொடர்ந்து சிறப்பான விளையாட்டையும் இவர்கள் ஆடி வருவதால் மக்கள் இவர்களுக்கு ஓட்டுக்களை போட்டு வருகின்றனர். அதனால், இந்த வாரம் இவர்களில் யாரும் வெளியேற வாய்ப்பில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

டேஞ்சர் ஜோனில்
கடைசி மூன்று இடமான டேஞ்சர் ஜோனில் ஷாரிக், அபிநய் மற்றும் சினேகன் உள்ளனர். வழக்கம்போல் அபிநய் கடைசி இடத்திலேயே தொங்கிக் கொண்டு இருக்கிறார். ஆனால், இந்தமுறை அவருக்கு துணையாக ஷாரிக் மற்றும் சினேகன் கடைசி இடத்தில் இருப்பதால் இருவரில் யார் இந்த வாரம் பலி ஆடாக ஆகப் போகிறார்கள் என்பதைத் தான் ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

S-க்கு வந்த சோதனை
பிக் பாஸ் அல்டிமேட் டீமுக்கு S எழுத்தில் பெயர் உள்ளவர்களை பிடிக்காதா? என்ன என்று தெரியவில்லை. சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா என தொடர்ந்து S எழுத்தில் பெயர் கொண்டவர்கள் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், இந்த வாரம் குறைவான ஓட்டுக்களுடன் கடைசி இடத்தில் சினேகன் மற்றும் ஷாரிக் உள்ளனர். இந்த இரு S-களில் ஒரு S இந்த வாரம் யெஸ்ஸாக போகிறது என நெட்டிசன்கள் ஆருடம் பார்த்து வருகின்றனர்.
Recommended Video

இது மாறுமா
இன்னும் மீதமுள்ள மூன்று நாட்களில் தூங்கிக் கொண்டிருக்கும் ஸ்லீப்பர் செல்கள் விழித்துக் கொண்டு ஓட்டுப் போட்டு இந்த ஆர்டரை மாற்றுவார்களா? இல்லை ஷாரிக் அல்லது சினேகன் இந்த இருவரில் ஒருவர் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகிறார்களா என்பதை காண காத்திருப்போம்.