Don't Miss!
- News
உச்சநீதிமன்றத்துக்கு புதிய 5 நீதிபதிகள்.. மத்திய அரசு ஒப்புதல்.. . யாரெல்லாம் தெரியுமா? முழுவிபரம்
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
எஸ்.ஜே.சூர்யாவை சந்தித்த வருண்... திடீர் சந்திப்புக்கு என்ன காரணம் ?
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளிவந்துள்ள வருண் தற்போது எஸ்.ஜே சூர்யாவை சந்தித்துள்ளார்.
நடிகர் வருண் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜோஷ்வா திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தின் மிரட்டலான டிரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்றது.

வருண்
நடிகர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான தலைவா திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல ஜெயம்ரவியின் வனமகன் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

தெரிந்த முகமாக
தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அனைவருக்கும் நன்கு தெரிந்த முகமாக மாறியுள்ளார் நடிகர் வருண்.

80 நாட்கள்
பிக் பாஸ் வீட்டில் 80 நாட்கள் இருந்த வருண் திடீரென வெளியேறினார். போட்டியாளர்களிடமும் ரசிகர்களிடமும் எந்தவிதமான கோபத்திற்கும் வெறுப்புக்கும் ஆளாகாமல் நல்ல பெயருடன் வெளியேறினார்.குறிப்பாக அக்ராவுடன் அவர் வைத்திருந்த நட்பை அனைவரும் பாராட்டினார்கள்,

சிம்பு சந்தித்தார்
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் அக்ஷரா உள்பட ஒரு சிலரை வருண் சந்தித்த புகைப்படங்கள் இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார். பிக் பாஸ் சீசன் 4 வெற்றியாளரான நடிகர் ஆரியை சந்தித்து பேசினார் அதேபோல, வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த வருண். சிம்புவை சந்தித்து மாநாடு படத்தின் வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்தார்.
Recommended Video

வாழ்த்து பெற்றார்
அதே போல,மாநாடு திரைப்படத்தில் வந்தான் சுட்டான் ரிப்பீட்டுனு பேசி அனைவரையும் வாய்பிளக்க வைத்த எஸ்.ஜே.சூர்யாவை சந்தித்துள்ளார். மேலும், வருண் கதாநாயகனாக நடித்துள்ள ஜோஸ்வா திரைப்படத்தின் டிரைலரை அவருக்குபோட்டு காட்டி வாழ்த்து பெற்றுள்ளார். அந்த திரைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.