அப்படித்தான் ஒருமையில் திட்டுவேன்.. அனைவரிடமும் எகிறிய அசீம்.. வாத்தி ரெய்டு நடத்திய பிக் பாஸ்!

சென்னை: கமல் இந்த வார இறுதியில் ஸ்கோர் செய்வதற்கு முன்பாகவே கன்ஃபெஷன் ரூமில் பிக் பாஸே வாத்தி ரெய்டு நடத்தி உள்ளார்.

அசீம் அநாகரிகமாக நடந்து கொண்டதும் விக்ரமனை ஒருமையில் திட்டியதும் ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களையும் துணிச்சலாக கேட்க வைத்தது.

அமைதியாக இருக்கும் விஜே கதிரவனே அசீமிடம் செஞ்சது தப்பு என பேச, ஷிவின் வாதாடுங்க, அநாகரிகமாக பேசாதீங்க என சொல்ல சொல்ல, அப்படிதான் பேசுவேன் என அசீம் எகிறிய காட்சிகள் எல்லாம் பிக் பாஸ் ரசிகர்களின் கோபத்தை ரொம்பவே தூண்டி உள்ளது.

ஷிவின் ஆடிய ஆட்டம்

ஷிவின் ஆடிய ஆட்டம்

ராயல் மியூசியம் டாஸ்க் வேறலெவலில் போக வேண்டும் என நினைத்து ராணி ரச்சிதா சாப்பிடும் சோற்றில் சதி செய்து ஷிவின் உப்புக் கொட்டிய நிலையில், அதை சரியாக கண்டுபிடிக்காதது தளபதி அசீமின் குற்றம் தான் என ஆலோசகர் விக்ரமன் சொன்னதும் பிரச்சனை சூடு பிடித்தது.

பிளேட்டை திருப்பிய அசீம்

பிளேட்டை திருப்பிய அசீம்

ஒரு கேமுக்காக ஒருவர் சோற்றில் மட்டும் ஷிவின் உப்புப் போட்ட நிலையில், சாப்பாட்டை இப்படி வீணடிக்கக் கூடாது. நிச்சயம் கமல் சார் உன்னை சும்மா விட மாட்டார் என தனது பக்கம் வந்த அம்பை அப்படியே திருப்பி விட்டு ஷிவினை டார்கெட் செய்தார் அசீம். விக்ரமன் அசீம் மேல் தான் தப்பு எனக் கூற வாடா போடா சண்டை அரங்கேறியது.

அப்படித்தான் பேசுவேன்

அப்படித்தான் பேசுவேன்

விஜே கதிரவன், ஆயிஷா, அமுதவாணன் என ஒட்டுமொத்த பிக் பாஸ் போட்டியாளர்கள் அசீம் பண்ணது தப்பு, அப்படி பேசக் கூடாது என்றும் உடையை கழட்டி எறிய கூடாது என்றும், அடிக்க செல்வது போல நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு போகக் கூடாது என்று சொல்ல சொல்ல கேட்க அப்படித்தான் பேசுவேன், அப்படித்தான் பேசுவேன் என அசீம் ரொம்பவே எல்லை மீறிய காட்சிகள் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

வாத்தி ரெய்டு

வாத்தி ரெய்டு

அசீம் எல்லை மீறி நடந்து கொண்ட நிலையில், கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்து அசீமுக்கு புரியும் படி அவர் என்ன தவறு செய்தார். மைக்கையும் டிரெஸ்ஸையும் கழட்டக் கூடாது என்றும் விளையாட்டை விளையாட்டாக பாருங்க, அதை வீணாக கெடுக்கக் கூடாது. நீங்க உங்க கேம் விளையாடுங்க.. மக்கள் எல்லாத்தையும் பார்க்குறாங்க.. இப்படி செஞ்சது சரியில்லை என வெளுத்து விட்டார்.

மக்கள் தீர்ப்பு சொல்லுவாங்க

மக்கள் தீர்ப்பு சொல்லுவாங்க

மேலும், உங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை ஏற்று நீங்க விளையாட வேண்டும். அதை விடுத்து கேமை கெடுக்கக் கூடாது என கண்டிப்பாக சொல்லிவிட்டார். பின்னர், மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தான் இருப்பார்கள். எது சரி? எது தவறு என்பதை அவர்கள் சொல்வார்கள் என வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல அசீமி அராஜகத்தை கண்டித்து விட்டார் பிக் பாஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X