»   »  பிக்பாஸ் ஆர்த்தி போட்ட ட்வீட்டால் பதறிப்போன ரசிகர்கள்!

பிக்பாஸ் ஆர்த்தி போட்ட ட்வீட்டால் பதறிப்போன ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகை ஆர்த்தி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே பிரபலமாக இருந்தவர். சீரியல்களிலும், திரைப்படங்களிலும் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்திருக்கிறார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகக் கலந்துகொண்ட அவர் சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் பங்கேற்றிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் விரைவிலேயே அந்த நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர்களால் வெளியேற்றப்பட்டார்.

Biggboss aarthi injured by ligament tear

கேன்சர் விழிப்புணர்வுக்காக தனது தலைமுடியை மொட்டை அடித்துக்கொண்டு உருக்கமாகப் பேசியதில் பலர் அவரது ரசிகர்களாயினர். ஆர்த்தி அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பொதுவான ட்வீட்களை போடுவது வழக்கம்.

இன்று காலை, அவர் போட்ட ட்வீட் ரசிகர்களைப் பதற வைத்தது. காலில் பெரிய கட்டுடன் வீல் சேரில் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார் ஆர்த்தி. இந்தப் புகைப்படம் விமான நிலையத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது.

சிகிச்சைக்குப் பிறகு எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பதிவேற்றியதோடு, அவரது காலில் தசைநார் கிழிந்த தகவலையும் பதிவிட்டுள்ளார். இது தாங்கக்கூடிய வலிதான் எனவும் அந்த ட்வீட்டில் குறிப்பிட்டிருக்கிறார் ஆர்த்தி. ஆர்த்திக்கு அவரது ரசிகர்கள் பலர் ஆறுதல் கூறி வருகின்றனர்.

English summary
Biggboss Aarthi had posted a photo of her with large bandage on her leg wheel chair on foot. Aarthi injured by ligament tear in her knees. This photo is taken at the airport.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil