மார்பு பெரிதாக இருப்பதாக கமெண்ட்.. உங்கள் அம்மாவை நினைவில் கொள்ளுங்கள்.. விளாசிய பிக்பாஸ் பிரபலம்!

சென்னை: தன்னுடைய உடல் அமைப்பு பற்றி கமெண்ட் செய்த நெட்டிசன்களை விளாசி விட்டுள்ளார் பிக்பாஸ் பிரபலம்.

Recommended Video

Please!! STOP பண்ணுங்க, Body Shamersக்கு Abhirami பதிலடி | Murattu Singles

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை அபிராமி. அதற்கு முன்பே அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் அந்த படம் அபிராமி பிக்பாஸில் பங்கேற்ற பிறகே ரிலீஸ் ஆனது. இதனால் பிக்பாஸ் அபிராமி என்றே அறியப்பட்டார்.

பிக்பாஸ் காதல்கள்

பிக்பாஸ் காதல்கள்

மாடலான அபிராமி ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அபிராமி முதலில் சக போட்டியாளரான கவின் மீது காதல் கொண்டார். பின்னர் மற்றொரு போட்டியாளரான முகென் ராவை காதலித்தார்.

ஒரு தலை காதல்

ஒரு தலை காதல்

ஆனால் முகென் ராவ் அபிராமியின் காதலை ஏற்கவில்லை. இருப்பினும் தன்னுடைய காதல் உண்மை என ஒரு தலையாக அவரை காதலித்து வந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள அபிராமி, அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

நெட்டிசன்களுக்கு பதிலடி

நெட்டிசன்களுக்கு பதிலடி

அந்த வகையில் அண்மையில் அவர் ஷேர் செய்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அபிராமி உடல் அமைப்பு பற்றி விமர்சித்தனர். இதனால் கடுப்பான அபிராமி தனது சமூக வலைதள பக்கத்தில் அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

மார்பு பெரிதாக இருப்பதாக

மார்பு பெரிதாக இருப்பதாக

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது, "நான் குண்டாகிவிட்டதாக கமெண்ட்டுகளில் பலரும் கூறுவதை பார்க்கிறேன். என் மார்பு பெரிதாக இருப்பதை பற்றி பலர் கருத்து கூறுகின்றனர். ஆமாம் எனக்கு பெரியதுதான். நான் குண்டான தென்னிந்திய பெண் தான்.

அம்மாவை நினைவில் கொள்ளுங்கள்

அம்மாவை நினைவில் கொள்ளுங்கள்

எங்களுக்கும் இப்படிப்பட்ட ஆண்களுக்கும் உள்ள வித்யாசம் இதுதான். உங்களை இந்த உலகத்திற்கு கொண்டு வந்தது உங்கள் அம்மா தான். என்னை பற்றி கமெண்ட் செய்யும் முன் உங்கள் அம்மா பற்றி நினைவில் கொள்ளுங்கள். பெண்களை மரியாதை உடன் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள்."

நான்சென்ஸ் வேண்டாம்

நான்சென்ஸ் வேண்டாம்

"இது ஜனநாயக நாடு, ஆனால் வெட்கமில்லாத, மரியாதை இல்லாத நாடு இல்லை. அதனால் கொஞ்சம் உணர்வோடு பேசுங்கள், இப்படிபட்ட நான்சென்ஸ் வேண்டாம்." என்று கூறியுள்ளார். பிக்பாஸ் அபிராமி. அபிராமியின் இந்த பதிவுக்கு பல நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X