»   »  'பிக் பாஸ்' பரணி ஹீரோவாக நடிக்கும் 'பணம் பதினொன்னும் செய்யும்'

'பிக் பாஸ்' பரணி ஹீரோவாக நடிக்கும் 'பணம் பதினொன்னும் செய்யும்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'பிக் பாஸ்' புகழ் பரணியின் நடிப்பில் 'பணம் பதினொன்னும் செய்யும்' திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கிறது. 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு முன்னர் பரணி என்றொரு ஹீரோ இருக்கின்றாரா என்பதுகூடப் பலருக்கு தெரியாது. ஆனால் தற்போது பரணி தமிழகம் முழுவதும் பிரபலம்.

வெளியேற்றப்பட்ட பரணி :

வெளியேற்றப்பட்ட பரணி :

'பிக் பாஸ்' வீட்டில் இருந்து பரணி கார்னர் செய்யப்பட்டு, மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். குறிப்பாக, அங்கிருந்த பெண்கள் பரணியின் மீது தவறான குற்றச்சாட்டுகளை வைத்தனர். பிறகு, அங்கிருக்கப் பிடிக்காமல் வீட்டின் சுவரில் ஏறிக்குதித்து வெளியேற முயற்சித்தார். அதனால் வெளியேற்றப்பட்ட பரணி, கமல்ஹாசனிடமும், மற்ற பேட்டியிலும் முதிர்ச்சியா பேசியது பொதுமக்கள் அனைவரையும் கவர்ந்தது.

பிக்பாஸ் வீட்டில் உள்ள மற்ற பங்கேற்பாளர்களிடம் பரணிக்கு செய்த துரோகம் குறித்து கமல்ஹாசன் கேள்வி கேட்டதும்தான் அவர்களுக்கே அவர்கள் செய்த தவறு புரிந்தது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தாலும் பரணியைப் பற்றிய செய்திகள் வைரலாகின்றன.

 பரணி நடித்த படம் :

பரணி நடித்த படம் :

இந்த நிலையில் மக்கள் மத்தியில் பரிதாபத்தையும் அன்பையும் பெற்றுவிட்ட பரணியின் நடிப்பில் உருவான ‘பணம் பதினொன்னும் செய்யும்' என்ற திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகிறது. இந்தப் படத்தை ஜெயகிருஷ்ணன் உன்னிகிருஷ்ணன் இயக்கியிருக்கிறார்.

 போட்டா போட்டி :

போட்டா போட்டி :

பரணி நடித்த இந்த படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் போட்டா போட்டி போடுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்தப் படம் ஏற்கெனவே எடுக்கப்பட்டு ரிலீஸாகாமல் இருந்தது. இப்போது 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் பரணி புகழ்பெற்றதால் இந்த நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள்.

 சினிமாவும் பணமும் :

சினிமாவும் பணமும் :

மணிரத்னம் இயக்கிய ‘திருடா திருடா, ரஜினி நடித்த ‘சிவாஜி', ரமணா நடித்த ‘மகான் கணக்கு', அஜீத்தின் ‘மங்காத்தா', சிபிராஜ், பிரசன்னா நடித்த ‘நாணயம்' , விக்ரம் நடித்த ‘கந்தசாமி', பைசா', 'கண்ல காச காட்டப்பா' ஆகிய படங்கள் கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டையும் கதைக் களமாகக் கொண்டவை.


அரவிந்த்சாமி, த்ரிஷா நடிக்கும் ‘சதுரங்க வேட்டை 2' படத்திலும் கரன்சி விளையாட்டுதான். இப்படிப் பணத்தை அடிப்படையாகக் கொண்டு பல படங்கள் தயாராகின்றன.


வரும் வெள்ளிக்கிழமை ரிலீசாக இருக்கும் ‘பணம் பதினொன்னும் செய்யும்' படம் ஒருவனிடம் பணம் இருந்தால் அவனால் எதையும் சாதிக்க முடியும் என்று காட்டுகிற கதையாக இருக்கலாம்.

English summary
Biggboss fame bharani's Panam pathinonnum Seyyum movie releasing soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil