Just In
- 17 min ago
பேக் டூ ஃபார்ம் போல.. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக வீடியோ வெளியிட்ட ரியோ!
- 9 hrs ago
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- 9 hrs ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 9 hrs ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
Don't Miss!
- Automobiles
ஏன் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும்? சமூக வலை தளங்களில் வைரலாகும் தமிழக அதிகாரியின் வீடியோ!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 22.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாம்…
- News
இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால்.. என்டிஏ கூட்டணி 321 இடங்களை வெல்லும்.. அதிரடி சர்வே..!
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆரம்பித்தது ஃபிரீஸ் டாஸ்க்.. எதுக்கு வந்த? என்ன பண்ற? லாஸ்லியா அப்பா போல் ஷிவானியை வெளுத்த அம்மா!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இன்று முதல் ஃபிரீஸ் டாஸ்க் தொடங்கியிருப்பது இன்றைய முதல் புரமோவில் தெரிய வந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முழுதாய் 3 வாரங்கள் கூட இன்னும் இல்லாத நிலையில் போட்டியாளர்கள் தங்களை நிரூபிக்க தீயாய் வேலை செய்து வருகின்றனர்.
ஹவுஸ்மேட்ஸை ஆட்டுக்கல்லில் மாவாட்ட விட்ட பிக்பாஸ்.. அதிலேயும் ஆரியுடன் மல்லுக்கு நின்ற பாலாஜி!
ஃபைனல்ஸ் நெருங்கியுள்ள நிலையில் கடந்த சீசன்களை போல் இந்த சீசனிலும் ஃபிரீஸ் டாஸ்க் கொடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

விர்ட்சுவல் முறையில்
ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வைல்டு கார்ட் என்ட்ரி கொடுத்த போட்டியாளர்களும் குவாரண்டைனில் வைக்கப்பட்டே வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர். தீபாவளி பண்டிகையின் போது பிரபலங்கள் பங்கேற்ற சில சிறப்பு டாஸ்க்குகள் விர்ட்சுவல் முறையில் கொடுக்கப்பட்டது.

பட புரமோஷன்கள்
கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் பிரபலங்களோ பழைய போட்டியாளர்களோ கெஸ்ட்டாக பிக்பாஸ் வீட்டுக்குள் வரவில்லை. ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் சாங் என திரைப்பட புரமோஷன்கள் அனைத்தும் விர்ட்சுவல் முறையிலும் ஹவுஸ்மேட்டுகளாலும் மட்டுமே நடத்தப்படுகிறது.

ஜெயம் ரவி
அதிகப்பட்சமாக கமலின் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஜெயம் ரவியின் பூமி படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் ஆகியவற்றில் லோகேஷ் கனகராஜ், அனிருத் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் கமலுடன் மேடையில் தோன்றியதோடு சரி, பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லவில்லை.

முதல் புரமோ
இதனால் கடந்த சீசன்களில் நடைபெற்ற ஃபிரீஸ் டாஸ்க் இந்த சீசனிலும் தொடருமா என்ற கேள்வி எழுந்தது. இருந்த போதும் இன்று முதல் ஃபிரீஸ் டாஸ்க் தொடங்கும் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டில் ஃபிரீஸ் டாஸ்க் தொடங்குவது தெரிய வந்துள்ளது.

ஆராரோ ஆரிராரோ..
அதன்படி முதல் நபராய் ஃபிரீஸ் டாஸ்க்கில் பங்கேற்றுள்ளார் ஷிவானி. பாத் ரூமில் இருக்கும் ஷிவானியிடம், பிக்பாஸ் ஃபிரீஸ் சொல்ல, சிறுத்தை படத்தில் இடம்பெற்ற ஆராரோ ஆரிராரோ பாடல் ஒலிக்கிறது.

கதறிய ஷிவானி
அதனை தொடர்ந்து அழகாய் என்ட்ரி கொடுக்கிறார் ஷிவானியின் அம்மா. அம்மாவை பார்த்ததும் ஓடி வந்து கட்டியணைத்து கதறுகிறார் ஷிவானி. பின்னர் கார்டன் ஏரியாவில் உள்ள சோஃபாவில் அமர்ந்து தனது மகளுடன் பேசுகிறார் ஷிவானியின் அம்மா.

என்ன பண்ணிக்கிட்டு இருக்க?
அப்போது பேசும் அவர் எதுக்கு நீ இந்த ஷோக்குள்ள வந்த? என்றும் நீ இந்த வீட்டுக்குள்ள பண்ணிட்டு இருக்குறதெல்லாம் வெளியில யாருக்குமே தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்கியா என வெளுத்து வாங்குகிறார்.

பாலாஜியுடன் நெருக்கம்
இதனை சற்றும் எதிர்பாராத ஷிவானி, அதிர்ச்சியடைகிறார். ஷிவானி பாலாஜியுடன் நெருக்கமாக பழகுவதும் அவருக்கு ஊட்டி விடுவது, மசாஜ் செய்வது, மடியில் படுக்க வைப்பது என இருந்தார் ஷிவானி. மேலும் பாலாஜி மீது பொஸஸிவாகவும் இருந்தார்.

இருவருக்கும் காதல்
மற்ற பெண் போட்டியாளர்களை பாலாஜி பக்கமே திரும்ப விடாமல் வைத்திருந்தார். இதனால் இருவருக்கும் காதல் என்ற பேச்சு உள்ளது. சமூக வலைதளங்களிலும் இதை சொல்லியே ஷிவானியே கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

லாஸ்லியா அப்பா போல்
இந்நிலையில் அதை வைத்தே ஷிவானியை வெளுத்து வாங்குகிறார் அவரது அம்மா. கடந்த சீசனில் கவினை காதலித்த லாஸ்லியாவை அவரது அப்பா மரிய நேசன், இதே கேள்வியை கேட்டுதான் விளாசினார். அதே போன்று ஷிவானியின் அம்மாவும் மிரட்டுவது குறிப்பிடத்தக்கது.