»   »  மலையாளப் படத்தில் கமிட்டான பிக்பாஸ் பிரபலம்!

மலையாளப் படத்தில் கமிட்டான பிக்பாஸ் பிரபலம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. ஓவியாவை அடுத்து ஹரிஷ் கல்யாண், ரைசா, ஆரவ், ஜூலி போன்ற பலர் புதிய படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளனர்.

இந்த நிலையில் கணேஷ் வெங்கட்ராம் மலையாளத்தில் உருவாகும் 'மை ஸ்டோரி' படத்தில் கமிட்டாகி உள்ளாராம். பிருத்விராஜ், பார்வதி நடிக்கும் இப்படத்தை ரோஷினி தினகர் எனும் பெண் இயக்குநர் இயக்குகிறார்.

Biggboss Ganesh in malayalam film

கணேஷ் வெங்கட்ராமின் நிஜ கேரக்டர் இயக்குனருக்கு பிடித்துப் போகவே இப்படத்தில் அவரை கமிட் செய்தார்களாம். கணேஷ் வெங்கட்ராம், ஏற்கெனவே மலையாளத்தில் மோகன்லால், அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்த 'கண்டஹர்' எனும் படத்தில் நடித்திருக்கிறார்.

பிருத்விராஜ் மற்றும் பார்வதி இருவரின் கூட்டணியில் 'என்னு நிண்டே மொய்தீன்' படம் கடந்த வருடம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. அந்தப் படம் பல விருதுகளையும் குவித்தது குறிப்பிடத்தக்கது. காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் 'மை ஸ்டோரி' படம் மலையாள திரையுலக ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும்.

English summary
Biggboss Ganesh Venkatram is committed in the movie 'My Story'. Prithviraj and Parvathi are leading this film directed by the female director Roshini Dinakar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X