»   »  பிக் பாஸ்... மனைவியின் வாக்கு சேகரிப்பு கணேஷைக் காப்பாற்றுமா? #SaveGanesh

பிக் பாஸ்... மனைவியின் வாக்கு சேகரிப்பு கணேஷைக் காப்பாற்றுமா? #SaveGanesh

Posted By:
Subscribe to Oneindia Tamil
பிக் பாஸ் கணேஷூக்காக குரல் கொடுக்கும் மனைவி நிஷா-வீடியோ

சென்னை : தமிழில் கமல்ஹாசன் நடத்திவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் கிட்டத்தட்ட ஒரு வாரம் மட்டுமே இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்குவதையொட்டி கடினமான டாஸ்க்குகளுக் அளிக்கப்பட்டு வருகின்றன.

நேற்று நடந்த எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் இருந்து மக்களின் வாக்குகளைக் குறைவாகப் பெற்ற சுஜா எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இனிமேல் பிக்பாஸ் போட்டியாளர்களில் யார் டைட்டிலை வெல்வது என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

Biggboss Ganesh venkatram's wife asks support for ganesh

இந்த நிலையில் கணேஷ் வெங்கட்ராமின் மனைவி நிஷா கணேஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனது கணவர் பற்றி சிறப்பான 12 குணங்களை பதிவு செய்துள்ளார். நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே நேர்மையாக இருக்கும் அவரை பிக்பாஸ் வெற்றியாளராக்க வேண்டும் என மக்களிடம் கேட்டுள்ளார் நிஷா.

#SaveGanesh எனும் ஹேஸ்டேக்கைப் பயன்படுத்தி கணேஷுக்காக ஆதரவு திரட்டுகிறார் நிஷா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100-வது நாளில் எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Biggboss show hosted by KamalHassan is getting closer to the final. Yesterday's episode, Suja was Eliminated, who received less votes. Ganesh venkatram's wife Nisha moves to support Ganesh using the #SaveGanesh hashtag.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil